ஓவுலேசன் டே

தோழிகளுக்கு வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.. இன்று எனக்கு 14 ஆம் நாள். 14ஆம் நாள் ஓவுலேசன் டே னு சொல்றாங்க‌.ஆனால் ஓவுலேசன் காலண்டரில் வரும் 27 என்று காட்டுகிறது. அவ்வாறு இருந்தால் ஓவுலேசன் நடந்தால் எப்போது நடக்கும் ? காலையிலா இரவிலா? எப்போது சேர‌ வேண்டும்? தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்..

Ovulation 12 to 18 days la epo venalum nadakum. So ninga indha days la husband kuda contact vechukonga.

God is love

Enaku doctor 20 days vara soli pathanga ovolation kit vachu 18,19,20 agi iruku nu sonnanga so 15 days 21 varaikum irunga nu sonnanga pona time 10 to 20 days varaikum tha irunthom next month consive but abort agiruchu intha month enga la vinayagar kovilku poga sonnanga so 9 days poga sonnanga so 20 days varaikum contact vaika mudiyala 20 ,21 vathu nal tha irunthom so intha month ethir pakkurathu kastam next month pakalam.neenga ovolation kit vangi parunga

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நன்றி தோழி..

- பிரேமா

இந்த‌ மாதம் எதிர்பார்க்க‌ வேண்டாம். ஆனால் முயற்சி செய்யுங்கள்.. ஒரு வேளை நல்லது நடந்தாலும் நடக்கலாம்.. நீங்கள் சொன்ன‌ மாதிரி செய்து பார்க்கிறேன்.. மிக்க‌ நன்றி

- பிரேமா

அன்பான‌ தோழிகளே, எனக்கு ஒரு சந்தேகம். ஓவுலேசன் ஏதோ ஒரு நாளில் தானே நடக்கும் அந்த‌ நாளை நாம் தவறவிட்டால் வாய்ப்புகள் குறைவு என்கிறோம். ஆனால் உயிரணு 72 மணி நேரம் உயிருடன் இருக்குமென்றும் கருமுட்டையானது 24 மணி நேரம் உயிருடன் இருக்குமென்றும் இதே அறுசுவை தளத்தில் படித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் அந்த‌ நாளை நாம் தவறவிட்டால் கூட‌ கருத்தரிக்கலாமே (முந்தைய‌ நாளில் சேர்ந்திருந்தால்).. ஆனால் குறிப்பாக‌ ஓவுலேசன் டே யில் சேர‌ சொல்ல‌ காரணம் என்ன‌?

என் கேள்வி தவறாக‌ இருந்தாலோ அல்லது நான் சரியாக‌ கேட்கவில்லை என்றாலோ என்னை மன்னித்து விடுங்கள்.. தயவு செய்து உதவுங்கள்.

- பிரேமா

//அந்த‌ நாளை நாம் தவறவிட்டால் கூட‌ கருத்தரிக்கலாமே (முந்தைய‌ நாளில் சேர்ந்திருந்தால்)..// உண்மை.

//ஆனால் குறிப்பாக‌ ஓவுலேசன் டே யில் சேர‌ சொல்ல‌ காரணம் என்ன‌?// அதைத் தவறவிடாமலிருக்கத்தான்.

இந்த நாள் பொருத்தம் என்றால், மீதி நாட்கள் சரியில்லை என்பதாக எடுப்போர்தான் அதிகமாக இருக்கிறார்கள். நீங்க யோசிக்கிறீங்க. எல்லோரும் யோசிச்சுப் பார்க்கிறது இல்லை. முதலில் எது ஓவ்யுலேஷன் தினம் என்று தெரிந்திருந்தால் தானே அதற்கு முந்தைய தினம் எது என்று தெரியும்?
~~~
//என் கேள்வி தவறாக‌ இருந்தாலோ// இல்லை, சரிதான். //நான் சரியாக‌ கேட்கவில்லை என்றாலோ/// ;) இதுவும் சரியாகத்தான் இருக்கிறது. //என்னை மன்னித்து விடுங்கள்..// ;)) இதுதான் எதற்கு என்று புரியவில்லை. ;D

//தயவு செய்து உதவுங்கள்.// எந்த நாட்களையும் தவிர்க்கவென்று தவிர்க்காமலிருந்தாலே சரியாக இருக்கும். அதை விட்டு 'ட்ரை' பண்ணுவதான எண்ணத்துடன் ஒரு கணிப்பில், எதிர்பார்ப்பில் வாழ்வது... பெரும்பாலும் உதவுவதில்லை.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா. இனிமேல் எந்த‌ நாளையும் தவற‌ விடபோவதில்லை.

// முதலில் எது ஓவ்யுலேஷன் தினம் என்று தெரிந்திருந்தால் தானே அதற்கு முந்தைய தினம் எது என்று தெரியும்? // இதை நான் ஓவுலேசன் காலண்டரின் மூலம் தெரிந்துகொண்டேன். (அதும் ஒரு கணிப்பு தான் என்பதும் தெரியும்).

//என்னை மன்னித்து விடுங்கள்..// ; இது பொதுவாக‌ சொல்வது தான்.

//தயவு செய்து உதவுங்கள்.// எந்த நாட்களையும் தவிர்க்கவென்று தவிர்க்காமலிருந்தாலே சரியாக இருக்கும். அதை விட்டு 'ட்ரை' பண்ணுவதான எண்ணத்துடன் ஒரு கணிப்பில், எதிர்பார்ப்பில் வாழ்வது... பெரும்பாலும் உதவுவதில்லை // சரியாக‌ சொன்னீர்கள்.

- பிரேமா

இமா அம்மா இதற்கு சரியான விளக்கம் தந்திருக்கிறார்கள். நானும் எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன்

''உயிரணு 72 மணி நேரம் உயிருடன் இருக்குமென்றும் கருமுட்டையானது 24 மணி நேரம் உயிருடன் இருக்குமென்று''
திடகாத்திரமான உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் 5தொடக்கம் 7நாட்கள் வரை வாழ்வதற்கு சாத்தியம் ஆகும்
அதனால்தான் கருத்தரிக்க விரும்பாதவர்கள் பாதுகாப்பு நாட்களில் தாம்பத்தியமிருந்தாலும் குழந்தை உருவாகிவிடுகிறது
குழந்தை வேண்டும் என நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது சேர்ந்திருக்க வேண்டும்.அதிலும் முதல் 15 நாட்கள் ரொம்ப முக்கியமானவை.
ஓவுலொசன் கணக்கு வைத்து சேர்ந்திருந்த ஸ்ரெஸ்தான் அதிகமாகும்.தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான். இயந்திரதனமான வாழ்க்கை தேவையில்லை என்பது என் கருத்து.

பரணிகா:)

தாங்கள் பதிலுக்கு நன்றி..

//.தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான். இயந்திரதனமான வாழ்க்கை தேவையில்லை என்பது என் கருத்து.// நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம்.. எல்லா நாட்களிலும் சேர‌ முடியாத‌ சமயங்களில் இந்த‌ மாதிரி முக்கியமான நாட்களை தெரிந்து வைத்துக் கொண்டால் பயன்பெறும் என்று தான்.

- பிரேமா

தோழிகளே !!

குழந்தைக்காக‌ முயற்சிப்பவர்கள் எண்ணெய் குளியல் (முந்தைய‌ நாள் இரவு எண்ணெய் தேய்த்து மறு நாள் காலையில் குளிப்பது) எடுக்கலாமா ? அப்படி செய்தால் கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்