குழந்தையின் எடை கூட வழி கூறுங்கள்

ஹாய் ப்ரெண்ஸ்...என்னுடைய குழந்தைக்கு 7 மாதம் ஆகிரது..அவளுக்கு இட்லி காலையில் மட்டும் கொடுக்குறேன்...மதியம்்night cerlac கொடுக்கிறேன்...பால் பர்முலா,தாய்ப்பால் தரேன்.அவள் மிகவும் ஒல்லியாக இருக்கிறாள்.அவளுடைய எடையும் 2 கிலோ கம்மியாக இருக்கிறாள்...பிறந்த போது நல்ல எடை இருந்தாள்...அவளுடைய எடை கூட நான் எந்த மாதிரியான உணவை குடுக்க வேண்டும்...பார்க்க 7 மாத குழந்தை மாதிரியே இல்லை ரொம்ப குட்டியா இருக்கான்னு எல்லோரும் சொல்லுராங்க...இப்ப நான் குழந்தைக்கு சாதம் குடுக்கலாமா..காய்கறிகளை அவளுக்கு எந்த மாதிரி உணவில் சேர்க்கலாம்...இரவில் என்ன உணவுகள் கொடுக்கலாம்...என்ன காய்கறிகள் பழங்கள் சேர்க்கலாம் குழந்தைக்கு...முதலில் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது எந்த அளவு கொடுக்கனும்...

pls reply pannungga

எல்லாம் நன்மைக்கே

help me

எல்லாம் நன்மைக்கே

Bayapada vendam,kavalaiyum vendam yella kulanthaiyum ondru pola irukathu ,yedai kooda ninaipathai vida arokiyamaga irukanumnu ninaingal ...ungal kulanthaiyin idai kuraival yethathu problem appadina yedai kooda ninaikal ....yethargaha solkiren yendral yen kulanthaiyum ippadi than irunthal .na yennalan koduthenu soldren ...morning idly kodukalam kulanthaikum yeppavumey vayiru mutta mutta koduka koodathu sapda pudikama poidum,illa vomit panidum ..konjam kuraivagavey kodukanum anal appam appam yethathu ootividalam , apple la iranda cut panni oru spoon vatchi sorandunga mava varum atha kodukalam ,carrot vega vatchi kodukalam ,idlyku parupu thottu kodukalam ,godumai rusk kidaikum atha pall vittu kalaki kodukalam ...thai paal kodukinhala athuvey romba nallathu ,,ni8 oru 7 maniku ooty vitunga apparam kulanthai nalla thoongum ...kulanthai kaila biscut kooduthu sappa vidalam .....oru 8 month apparam satham ooty vidalam pa.....nan yen kulanthaiku ceralac yellam ooty vittathey illapa ,kulanthai healthya iruntha weight patri worry pannathinga weight yeranum neenga concentration panna arambicha kulanthaiku arokyama unavu koduka concentration varathu ......dont worry friend ...yenaku therinjatha solliruken ...inum vera friends solvanganu ninaikiren pa....apparam oru request thaipaal mattum stop pannama kudunga..pa..atha vida healthy anathu vera onnum illapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Bayapada vendam,kavalaiyum vendam yella kulanthaiyum ondru pola irukathu ,yedai kooda ninaipathai vida arokiyamaga irukanumnu ninaingal ...ungal kulanthaiyin idai kuraival yethathu problem appadina yedai kooda ninaikal ....yethargaha solkiren yendral yen kulanthaiyum ippadi than irunthal .na yennalan koduthenu soldren ...morning idly kodukalam kulanthaikum yeppavumey bayiru mutta mutta koduka koodathu sapda pudikama poidum,illa vomit panidum ..konjam kuraivagavey kodukanum anal appam appam yethathu ootividalam , apple la iranda cut panni oru spoon vatchi sorandunga mava varum atha kodukalam ,carrot vega vatchi kodukalam ,idlyku parupu thottu kodukalam ,godumai rusk kidaikum atha pall bittu kalaki kodukalam ...thai paal kodukinhala athuvey romba nallathu ,,ni8 oru 7 maniku ooty vitrunga apparam kulanthai nalla thoongum ...kulanthai kaila biscut kooduthu sappa vidalam .....oru 8 month apparam satham ooty vidalam pa.....nan yen kulanthaiku ceralac yellam ooty vittathey illapa ,kulanthai healthya iruntha weight patri worry pannathinga weight yeranum neenga concentration panna arambicha kulanthaiku arokyama unavu koduka concentration varathu ......dont worry friend ...yenaku therinjatha solliruken ...inum vera friends solvanganu ninaikiren pa....apparam oru request thaipaal mattum stop pannama kudunga..pa..atha vida healthy anathu vera onnum illapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ரொம்ப நன்றி harsha....பார்க்குரவங்க கேட்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு...

எல்லாம் நன்மைக்கே

என்னுடைய குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது...தினமும் 3 தடவை motion போறாள்...ரொம்ப tight வும் இல்லாம லூசாவும் இல்லாம போறாள்...தினமும் 3 தடவை motion போறதால weight அதிகரிக்கள...சாதம் கொடுக்க ஆரம்பிச்சி 5 நாள் ல போன 5 தடவை motion போன அப்பறம் டாக்டர் மருந்து குடுத்து சரி ஆனது...மருந்து குடுக்கலனா எப்பவும் போல 3 times motion போர ...motion 3 times போறதால சாதமும் குடுக்கல..இரவு உணவும் தாய்ப்பால் பார்முலா தான் கொடுக்கிறேன். பசி தாங்கமா அடிக்கடி இரவு முழிக்கிறாள்...motion fபோறதால இரவு உணவு கொடுக்க பயமாக உள்ளது...இதனால் எதுவும் பிரச்சனையா...

எல்லாம் நன்மைக்கே

plz help me friends

எல்லாம் நன்மைக்கே

//தினமும் 3 தடவை motion போறாள்.// இது பிரச்சினை இல்லை. //tight வும் இல்லாம லூசாவும் இல்லாம// அப்படியானால் வயிற்றோட்டமும் இல்லை.

//தினமும் 3 தடவை motion போறதால weight அதிகரிக்கள.// இந்தக் கருத்து சரி என்று தோன்றவில்லை. வயிற்றோட்டம் இருந்தால் நீரிழப்பு என்று எடுக்கலாம். அது இல்லை. //சாதம் கொடுக்க ஆரம்பிச்சி 5 நாள் ல போன 5 தடவை motion போன// வசனம் தெளிவாக இல்லையே! //அப்பறம் டாக்டர் மருந்து குடுத்து சரி ஆனது.// நீங்கள் டாக்டரிடம் கூட்டிப் போகாவிட்டாலும் மெதுவே சரி ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

//மருந்து குடுக்கலனா எப்பவும் போல 3 times// இது உங்கள் குழந்தையின் உடலின் சாதாரண தொழிற்பாடு என்று தோன்றுகிறது. //சாதமும் குடுக்கல.// கொஞ்சமாகக் கொடுங்க. சாதம் உடன் சாதமாக இருக்கட்டும். முதலில் ஒரு தேக்கரண்டியில் ஆரம்பித்து மெதுவாகக் கூட்டலாம். சாதம் எதனோடு கொடுக்கிறீங்க? இதை மாற்ற வேண்டுமோ தெரியவில்லை. சாதத்தை விட்டு இட்லி, இடியாப்பம் என்று மாற்றிக் கொடுத்துப் பாருங்கள். எதுவாக இருந்தாலும் முதலில் கொஞ்சமாக அறிமுகப்படுத்துங்கள். ரஸ்க் கொடுத்துப் பாருங்கள்.

//இரவு உணவும் தாய்ப்பால் பார்முலா தான் கொடுக்கிறேன்.// ம்.. //பசி தாங்கமா அடிக்கடி இரவு முழிக்கிறாள்.// அப்படியானால் கட்டாயம் உணவு போதவில்லை. இதனாலும் எடை போடாமல் இருக்கலாம் இல்லையா?

//..motion fபோறதால இரவு உணவு கொடுக்க பயமாக உள்ளது.// இப்போ எனக்குத் தோன்றுவது என்னவென்றால்... உணவு போதாமல் தான் குழந்தை எடை குறைவாக இருக்கிறாரோ! அழுவதிலேயே அவரது சக்தி எல்லாம் வீணாகி விடும், பாவம். :-)

வளர்ந்தவர்களிலேயே ஒரு நாளைக்கு 3 தடவை பழக்கம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது பிரச்சினையான விடயம் இல்லை. உணவு சமிபாடான பின்பு, உடல் தன் தேவைக்கு சத்துகளை உறிஞ்சிய பின்பு தான் மீதி வெளியே வருகிறது. உணவு உள்ளே போனதும் அப்படியே முழுவதாக வெளியேறுவதில்லை. (வாந்தி இருப்பதாக நீங்கள் சொல்லவில்லை.)

//இதனால் எதுவும் பிரச்சனையா// குழந்தை உடல் வளரும் சமயம் கொடுக்கும் ஆகாரங்கள் தானே அவர்கள் வருங்கால ஆரோக்கியம் & சிந்தனை தொடர்பான வளர்ச்சிகளையெல்லாம் நிர்ணயிக்கப் போகிறது? இப்போதைய சிரமங்களை மட்டும் யோசித்தால் போதாது. பிரச்சினை மோஷன் போகும் விடயத்தில் இருக்கிறதோ இல்லையோ, உணவு கொடுக்காமலிருப்பதில் நிச்சயம் இருக்கிறது.

சிலசமயம் வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளுக்கே நிறுத்தாமல் உணவு கொடுக்கச் சொல்கிறார்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்றோட்டம் இல்லை. பயப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் திட உணவுகளை ஆரம்பியுங்கள். ஒன்று பொருந்தாவிட்டால் இன்னொன்று. உணவு வகைகளுக்கா பஞ்சம்?

குழந்தை வளர்ப்பு கொஞ்சம் புதிரான விடயம்தான். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதப் பழக்கம். எதைச் செய்தாலும் நீங்கள் பயப்படாமல் யோசித்து நடக்கலாம். இப்போதைக்கு சாதத்தை விட்டு வேறு ஏதாவது கொடுங்க. எடை - குழந்தை கொழுக்மொழுக் என்று இருந்தால்தான் சரி என்பது இல்லை. மற்றவர்கள் சொல்வதைப் பற்றி யோசிக்க வேண்டாம். ஆனால் சின்ன உடலாக இருந்தாலும் குழந்தையின் கைகால் அடிப்புக்கும் சிரிப்புக்கும் அழுகைக்கும் இவற்றோடு கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே நடக்கும் வளர்ச்சிக்கும் போதிய நல்ல ஆகாரம் தேவை.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா அம்மா...சாதம் கொடுக்க ஆரம்பிச்ச 5 நாள் எப்பவும் போல் 3 தடவை மோசன் போனா 5 நாளைக்கு அப்பறம் தான் 5 6 தடவை loose motion போனா அதை தான் சொன்னேன்..அதுல இருந்து சாதம் திரும்ப கொடுக்கல..

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்