தோழிகளால் வந்த பிரச்சனை தீர்ப்பது எப்படி?

Hi friends, என்னுடைய தோழியும், அவருடைய மகளும் பார்க்க அக்கா, தங்கை போலவே இருப்பார்கள். ஒரே மாதிரி face | உருவம். இருவரும் நல்ல friends மாதிரி தான் நடந்துக் கொள்வார்கள் 2 மாதம் முன்பு வரை . அந்த பெண் college final year படிக்கிறாள். அவளுடைய தோழிகள் அவளிடம் உன்னை விட உங்க அம்மா தான் அழகாக உள்ளார்கள். பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தால் உங்க அம்மா வைத் தான் பிடிக்கும் என்பார்கள் என அடிக்கடி கூறி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் அவள் அம்மாவை சுத்தமாக வெறுக்கிறாள். அம்மாவுடன் எங்கேயும் வெளியே செல்வதில்லை. அம்மா அழகாக dress செய்தாள் கூட அழுகிறாள். தோழிகளே இப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது.

நல்ல‌ விஷயங்களில், ஆக்கபூர்வமான‌ விஷயங்களில் தோழிகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கலாம். உடை மற்றும் அலங்காரங்களில் ஒரு சில‌ நேரம் ஒத்துக் கொள்ளலாம். பள்ளியில் படித்தபோது இருந்த‌ தோழிகள் இப்போது மாறியிருப்பார்கள். வேலைக்கு செல்லும்போது வேறு தோழிகள் வருவார்கள். அம்மா நாம் கருவாகி உருவாகி பிறந்ததலிருந்து நம்முடனே இருப்பவ‌ர்கள். நமக்கு நல்லது நடக்கும்போது தோழிகள் சிலர் பொறாமைப்படக் கூட‌ செய்வார்கள் (உண்மையான‌ தோழிகள் அல்ல‌). ஒருவேளை நம்மால் அவர்களைத் தவிர்க்க‌ முடியாமல், இனம் காண‌ முடியாமல் அவர்களுடன் பழக‌ வேண்டிய‌ நிர்பந்தம் இருக்கலாம். அம்மா இல்லாமல் இருந்தால் என்ன‌ கஷ்டங்களை ஒரு பெண் பட‌ வேண்டும் என்பதை, அம்மா இல்லாதவர்களை பார்த்து தெரிந்து கொள்ள‌ வேண்டும்.
// தோழிகள் அவளிடம் உன்னை விட உங்க அம்மா தான் அழகாக உள்ளார்கள் //
இப்படி சொல்லும் தோழிகளிடம் எனக்கு அதனால் மிகவும் பெருமைதான் என்று சொல்ல‌ சொல்லுங்கள்.
// இதனால் அந்த பெண் அவள் அம்மாவை சுத்தமாக வெறுக்கிறாள் // ஒரு வாரம் அம்மா எந்த‌ வேலையையும் செய்ய‌ மாட்டார்கள். நீயே உன் வேலை அனைத்தையும் செய்து கொள் என்று ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க‌ சொல்லுங்கள். அம்மாவின் பெருமையை அப்போது உணர்வார்கள்.
//அம்மா அழகாக dress செய்தாள் கூட அழுகிறாள்// ஏதோ மன‌ ரீதியாக‌ பாதிக்க‌ பட்டிருக்கிறாள். ஒரு மன‌ நல‌ ஆலோசகரிடம் கவுன்சிலிங் எடுக்க‌ சொல்லுங்கள்.

நல்ல‌ குடும்பத்தில் பிறந்து நல்லவர்களால் வளர்க்கப் பட்ட‌ பெண்களுக்கு பெற்ற‌ தாயையே சக்களத்தியாகப் பார்க்கும் புத்தி இருக்காது
தாயையும் மகளையும் பிரிக்க‌ தோழி என்று இருக்கும் அந்தத் தேளைக் கண்டு பிடித்து முதலில் தோழியின் மகளை விலக்குங்கள். பிறகு காரணத்தைக் கண்டு பிடித்து அந்தக் குறிப்பிட்ட‌ நபரை அவரின் கெட்ட‌
எண்ணத்தினைத் தோழியின் மக‌ளுக்குத் தயவு தாட்சண்யமின்றி பலரின்
முன்னால் தோலுரித்துக் காட்டினால்தான் இந்தப் பிரச்சனை தீரும், இல்லையானால் வாழ்நாளின் இறுதி வரை சிக்கல் மட்டுமல்ல‌ உங்கள் தோழிக்குத் தீராத‌ அவமானமும் ஆகும்.
கவுன்சிலிங் இதற்கு எந்த‌ விதத்திலும் நிரந்தரத் தீர்வாகாது. இளையதாக‌ முள்மரம் கொல்க‌ களையுனர் கை கொல்லும் காழ்த்த இடத்து என்ற‌ வள்ளுவர் குறளை மறக்க‌ வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்