டைப்பர் ரேஷஸ்

என் குழந்தைக்கு (6மாத பெண்)பிறப்பு உறுப்பு பகுதியில் சிறு சிறு கொப்பலாம் இருக்கு டைப்பர் போட்டதல் இங்கு குளிர் அதிகம் இருபதல் போட்டேன் அதனால் அது குணமாக வலி சொல்லுங்கல் தோழிகளே

தோழி என் அக்கா குழந்தைக்கு அப்படி தான் இருந்தது.. டாக்டரிடம் காட்டினோம். அவர்கள் ஒரு பவுடர் மற்றும் லோஷன் கொடுத்தார்கள் ஒரே நாளில் சரியாகி விட்டது.. டயப்பரை அடிக்கடி மாற்ற‌ வேண்டும்.. வீட்டில் இருந்தால் டயப்பர் போட்டு விட‌ வேண்டாம் "சூடு" என்றும் சொன்னார்களாம்.

மற்றபடி கைவைத்தியம் & குறிப்புகள் பற்றி தெரியவில்லை..

- பிரேமா

அந்த lotion powder name சொல்லுங்கா

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

கனிமொழி,
குழந்தைக்கு கொப்புளம் லேசாக இருந்தால் தொடை இடுக்கிலும்,கொப்புளத்திலும் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்தால் ஆறிடும்..புண் இருந்த இடம் கூட தெரியாது..நிறைய இருந்தால் டாக்டரிடம் போவதே சிறந்தது..
நீங்கள் இருக்கும் இடத்தில டயப்பர் இல்லாமல் இருப்பது கஷ்டம் தான்..அதனால் டயப்பரை நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்..ஒவ்வொருமுறை கழட்டும் போதும் அரைமணி நேரமாவது இடைவெளி விட்டு மாற்ற வேண்டும்..லேசாக தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு அரைமணிநேரம் காற்றாடவிட்டு அப்புறம்தான் மாற்ற வேண்டும்..இல்லையென்றால் ரேஷஸ் வந்துகொண்டே தான் இருக்கும்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

என் அக்காவிடம் கேட்டு சொல்கிறேன் தோழி ..

- பிரேமா

கனிமொழி
Himalaya Products ல் Diaper rash cream என்றே கிடைக்கிறது.அது நன்றாக இருப்பதாக சொன்னார்கள். பயன்படுத்தி பாருங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப நன்றி தோழி.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

மேலும் சில பதிவுகள்