எனது மாமா பொண்ணிற்கு 13 வயது ஆகிறது. 1 வருடமாகவே படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறால்.இதற்கு எண்ண தீர்வு எண்று கூறுங்கல். மிகவும் ககவலை கொள்கிறால் சிறுநீர் கழிப்பதால்,
எனது மாமா பொண்ணிற்கு 13 வயது ஆகிறது. 1 வருடமாகவே படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறால்.இதற்கு எண்ண தீர்வு எண்று கூறுங்கல். மிகவும் ககவலை கொள்கிறால் சிறுநீர் கழிப்பதால்,
13 வயதுப் பெண்
//13 வயது ஆகிறது. 1 வருடமாகவே படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறால்.// அதற்கு முன்பு இப்படி இருந்ததில்லையா? இன்ஃபெக்க்ஷன் ஏதாவது இருக்கலாம். அல்லது மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். இந்த வயதினர்க்கு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விடயங்கள் இருக்கலாம்.
//எண்ண தீர்வு// இதைப் படித்ததும் தான் மன அழுத்தம் இருக்குமோ என்னும் எண்ணமே வந்தது. :-)
மருத்துவரிடம் கூட்டிப் போனார்களா? கட்டாயம் கூட்டிப் போகச் சொல்லுங்க. மருந்து ஏதும் கொடுக்காவிட்டாலும், 'தனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை,' என்பது தெரியவர, குட்டிப்பெண் நிம்மதியாகுவார். அந்த நல்ல எண்ணமே பிரச்சினையைக் கொஞ்சம் குறைக்கும்.
//மிகவும் ககவலை கொள்கிறால் சிறுநீர் கழிப்பதால்,// :-) கவலை நிச்சயம் இதனால் என்று தெரியுமா? :-) கவலை அதனால் என்று மட்டும் தான் குழந்தையால் சொல்ல முடியும். "அம்மா, நீங்க பண்றது எனக்குப் பிடிக்கல," என்று சொல்லப் பயப்படும். பாவம்ங்க. ;( பொண்ணோடா அம்மாவிடம் சொல்லுங்க, நான் அவங்க இடத்தில் இருந்தால் என் பெண்ணின் இப்படியான பிரச்சினைகளைப் பற்றி உறவுகளிடம் பேசவே மாட்டேன். முதலில் குழந்தையை அழைத்துப் போகாமல் தனியே ஒரு டாக்டரிடம் போவேன். சிகிச்சைக்காக அல்ல; இதைப் பற்றி விபரம் அறிவதற்காக.
குழந்தைக்கு யாரைப் பார்த்தாலும், 'அம்மா இவங்கள்ட்டயும் சொல்லியிருப்பாங்களோ! இவங்களுக்கு என் பிரச்சினை தெரிந்திருக்குமோ!,' என்கிற சந்தேகம் வரும். அது அவமானமாகத் தெரியும்.
பதின்ம வயதுக் குழந்தைகளின் சின்னச் சின்னப் பிரச்சினைகளையும் வெகு கவனமாகக் கையாள வேண்டியது பெற்றோர் கடமை.
அவர்கள் வீட்டிற்குப் போனால் குழந்தைக்குத் தெரிய இதைப் பற்றி 'நீங்கள்' பேசாமலிருப்பது நல்லது.
மதியத்தின் பின் திரவப் பொருட்கள் எடுப்பதைக் குறைப்பது சிறிது உதவும். சில நாட்களுக்கு கார்ப்பனேட்டட் பானங்கள், இளநீர் சாப்பிடுவதை முற்றாகத் தவிர்ப்பது நல்லது.
இப்படியான பெரிய குழந்தைகளுக்கு இரவில் அணியும் உள்ளாடைகள் (பாம்பர் போல) கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம். கட்டிலுக்கான விசேட விரிப்புகளும் கிடைக்கும். இது அவருக்கு மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. பலருக்கு வாழ்க்கையின் வேறு வேறு நிலைகளில் தோன்றும், சரியாகும் ஒரு பிரச்சினைதான்.
- இமா க்றிஸ்
15 மாத குழந்தை
என் குழந்தைக்கு 15 மாதமாகிறது. அவள் ஒரு நாளைக்கு 20 முறை சிறுநீர் போகிறாள் . இது நார்மல் தானா?
சக்திகிரி
குழந்தைக்கு எரிச்சல் இல்லை, சிரமமாக இல்லை என்றால் பிரச்சினை இல்லை. சுத்தமாக உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள். நிறைய குடிக்கக் கொடுங்கள்.
- இமா க்றிஸ்
நன்றி imma Madam
நன்றி மேடம். நான் எங்க அத்தையிம் சொல்கிறேண். மருத்துவமணைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் மாத்திரை கொடுத்து உள்ளார்கள். 1 வருடமாக தாண் உள்ளது அதற்கு முண் இல்லை
நன்றி இமா மேடம்
நன்றி மேடம் குழந்தை யூரின் போனவுடன் கழுவி சுத்தமாக துடைத்து விடுவேன் . ஆனாலும் அதிகமாக போகிறாள் என பயந்துவிட்டேன். பதில் தந்ததற்கு நன்றி மேடம்.
சிறுநீர்
இது சாதரண விசயம். இதை பெண் காது பட பேசினால், வேறு மன உளைச்சளுக்கு ஆளாகலாம்.
படுக்க போகும் 1 மணி நேரத்திற்கு முன் நீர் அருந்த கூடாது. இரவில், 2, 3 முறை, மகளை, எழுப்பி விட்டு சிறு நீர் கழிக்க பழக்க படுத்தவும்.
அம்மா மென்க்கெட்டால், மாத்திரை தேவைஇல்லை.
திவ்யாபிரபாகரன்
உங்கள் மாமா மகளை ஸ்கூலில் சரியான நேரத்தில் யூரின் போக சொல்லுங்கள்.. அடக்கி வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..
டாக்டர் எனக்கு சொன்னது >> நாம் சிறுநீரை சரியான நேரத்திற்கு வெளியேற்றாமல் இருக்கும் போது அந்த சிறுநீர் பையானது அதன் தாங்கும் சக்தியை இழந்து விடும். அதனால் நம்மை அறியாமலேயே சிறுநீர் வெளியேறும்.
சிலருக்கு சிரிக்கும் போது கூட சிறுநீர் வெளியேறும். அதனால் வரும் நேரத்திற்கு அதை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்..
- பிரேமா