இரண்டாவது குழந்தை

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.

எனக்கு ஒரு குழந்தை மட்டுமே போதும் என்றிருக்கிறேன். ஆனால் எனது மாமிக்கும் கணவருக்கும் இன்னொரு குழந்தைக்கு விருப்பம். முதல் குழந்தையை வளர்க்கவே போதும் போதுமென்றாகி விட்டது. காரணம் மாமிக்கும் அம்மாக்கும் உடம்பு சரி இல்லை. அம்மா உடம்பு முடியவில்லை என்றாலும் முடிந்த அளவு பாத்தாங்க. இப்ப அம்மாக்கு ரொம்ப உடம்பு முடியலை. நான் அம்மாவை பாத்துட்டு இருக்கேன். சிகிச்சை முடிய ஆறு மாதங்கள் இருக்கிறது. இப்போது முதல் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. என்னுடைய இந்த சூல்நிலையில் இரண்டாவது குழந்தை அவசியமா? அப்படி 2 வது குழந்தை பெற விரும்பினால் ஏற்ற வயது இடைவெளி எதுவாக இருந்தால் நல்லது. அப்படி பெற்று கொண்டால் 2 யும் நான் மட்டுமே பார்க்க வேண்டி வரும். என்னால் மட்டும் பார்க்க முடியுமா? அனுபவம் உள்ளவர்கள் உதவுங்கள் தோழிகளே....

//முதல் குழந்தையை வளர்க்கவே போதும் போதுமென்றாகி விட்டது.// இப்போ சொல்லும் காரணங்கள் எல்லாம் தற்காலிகமான விடயங்கள். வாழ்க்கை முழுவதும் அவை தொடரப் போவது இல்லை. இந்தச் சிரமங்களை மட்டும் வைத்து வேண்டாம் என்று முடிவுகட்ட வேண்டாம். பொருளாதாரச் சிக்கலினால் அல்லது உங்கள் நிரந்தர உடல்நலக் குறைவினால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று நினைத்தால் பொருத்தம்தான்.

//சிகிச்சை முடிய ஆறு மாதங்கள் இருக்கிறது.// அதன் பின் யோசிக்கலாம். அப்போது முதல் குழந்தைக்கு 2 வயது 6 மாதங்கள் ஆகி இருக்கும். கர்ப்பமாக சில மாதங்கள் எடுக்கும். பிரசவத்தின் போது முதல் குழந்தைக்கு 4 அல்லது 5 வயது ஆகிவிடும்.

//என்னுடைய இந்த சூல்நிலையில் இரண்டாவது குழந்தை அவசியமா?// சூழ்நிலை நிரந்தரம் இல்லை. அவசியமா இல்லையா என்னும் கேள்வி, இதுதான் உங்கள் முடிவு என்பது போல எண்ண வைக்கிறது. :-) பின்போடலாமே!

//2 வது குழந்தை பெற விரும்பினால் ஏற்ற வயது இடைவெளி எதுவாக இருந்தால் நல்லது.// இனி எப்போ தும் நல்ல இடைவெளிதான்.
//2 யும் நான் மட்டுமே பார்க்க வேண்டி வரும்.// ம். //என்னால் மட்டும் பார்க்க முடியுமா?// நீங்கள் வேலைக்குச் செல்லவில்லை என்று தெரிகிறது. வீட்டு வேலைகளை முறையாக ப்ளான் செய்தால் உங்களால் முடியும்.

ஒற்றைக் குழந்தை பற்றி - பெற்றோருக்குப் பின் இவர்களுக்கு நேரடிக் குடும்ப உறவுகள் இல்லாது போய்விடும். மணம் முடிப்பவர் பக்கம் சகோதர சகோதரிகள் இருந்தால் தவிர உங்கள் பேரக் குழந்தைகளுக்கு உறவுகள் இராது.

‍- இமா க்றிஸ்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி அம்மா. கடைசியாக நீங்கள் சொன்ன கருத்து யோசிக்க வைக்கிறது. அம்மாவுக்கு குணமானவுடன் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்கிறேன் அம்மா.

--

மேலும் சில பதிவுகள்