சீடை

தேதி: February 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 400 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
தேங்காய் - 1
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
சோட உப்பு - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொறிக்க - தேவையான அளவு


 

முதலில் பச்சரிசியை ஊறவைத்து இடித்து பொடிக்கண் சல்லடையில் இரண்டு தடவை கப்பி விழாமல் சலித்து எடுத்துவைக்கவும்.

கப்பி சேர்ந்தால் சீடை வெடிக்கும்.

உளுந்தம் பருப்பை சிவக்க வறுத்து திரித்துக் கொள்ளவும்.

சீரகத்தை நுனுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

இரண்டு மாவுகளையும் சேர்த்து சோட உப்பு,உப்பு ,பெருங்காயதூள், சீரகம் சேர்த்து துருவிய தேங்காயை சேர்த்து தண்ணீரை தெளித்து அழுத்தி பிசையாமல் கெட்டியாக மாவை உருட்டும் பக்குவத்திற்க்கு பிசையவும்.

பின் எண்ணெய்யை காயவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுக்கவும்.


சீடைகளை வழவழப்பாக உருட்டாமல் ஒரு கொழுக்கட்டை அளவு மாவை எடுத்து அதில் இருந்து பிய்த்துப் போடவும்.

மேலும் சில குறிப்புகள்