கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

ஸாரி சுசி உங்க கிட்ட தான் கேட்டேன் ஏதோ ஒரு ஞாபகத்துல அனுன்னு டைப்பன்னிட்டேன் நீங்க எத்தன மாதம் கர்பம். கல்யாணமாகி எத்தனை மாதங்கள் ஆகின்ற.

ஷமி
இப்போது 2 மாத கர்ப்பம்.திருமணம் ஆகி 6 வருடங்கள் முடிந்து விட்டது

enaku inda tablet dr kodukalapa, naa sapitadu illa, 3 yrs

ஷமி, அனு உங்களுக்கு பதில் போட‌ போய் தான் உங்க‌ பதிவையே பார்க்க‌ முடிந்தது.. நான் 4 நாட்களா அறுசுவைக்கு வர‌ முடியல‌. அதான் பா.. ஃபிரோஸ் அக்கா சொன்ன மாதிரி பதில் சொல்ல‌ கூடாதுன்னுலாம் இல்லை.. நிஜமா பார்க்கல‌.. பார்த்தா சொல்லாம இருப்போமா? அதனால‌ எதுவும் நினைக்காதீங்க‌..

நீங்க‌ சொன்ன மாத்திரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது பா..

- பிரேமா

நா டாக்டர்ட காமிச்சி மாத்திரை சாப்பிடுரேன். பீரியட் வந்து 13 ஆம் நாள் ஸ்கேன் பன்னனும் சொன்னாங்க பா இதை பற்றி எனக்கு தெரியவில்லை. இதை பற்றி தெரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க தோழிகளே...

ஷமி, 13 ஆம் நாள் வர‌ சொல்லியிருக்காங்கன்னா கருமுட்டை வெளிவந்திருச்சானு பாக்குறதுக்கா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா 13 தேதி முதல் ஓவுலேசன் பீரியட் ஸ்டார்ட் ஆகும். அதான் பா.

உங்களுக்கு பீரியட் வந்திருச்சா ?

- பிரேமா

கருமுட்டை பற்றி தெரிந்து கொள்ளுவதற்காக செய்யும் ஸ்கேன் பா.மாத்திரை விடாம சாப்பிடுங்க. பயப்படாம போயிட்டு வாங்க.13ம் நாள் மட்டும் தான் கூப்பிட்டு இருக்கிறார்களா?

Prema பீரியட் வந்து இன்னைகு எட்டு நாள் பா
Susi 13ஆம் நாள் தான் வர சொன்னாங்க பா.இந்த ஸ்கேன் எடுக்க போகும் போது சாப்பிடாம தானே போகனும். ஸ்கேன் பன்னிட்டு ரிப்போர்ட் பார்துட்டு ஊசி ஏதாவது போடுவாங்களா..

13 ஆம் ஸ்கேன் பண்றது கருமுட்டை வெளி வந்ததா என்று பார்க்க. கருமுட்டை வெளி வந்தால் அது வெடிக்க ஊசி போடுவாங்கபா. அப்பறம் கருமுட்டை வெடித்ததா என்று ஸ்கேன் பார்ப்பார்கள். கருமுட்டை வெடித்து விட்டால் உங்களை சேர்ந்து இருக்க சொல்வார்கள்பா.
//இந்த ஸ்கேன் எடுக்க போகும் போது சாப்பிடாம தானே போகனும்.// அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சாப்பிட்டு விட்டே போகலாம்.

13 ஆம் ஸ்கேன் பண்றது கருமுட்டை வெளி வந்ததா என்று பார்க்க. கருமுட்டை வெளி வந்தால் அது வெடிக்க ஊசி போடுவாங்கபா. அப்பறம் கருமுட்டை வெடித்ததா என்று ஸ்கேன் பார்ப்பார்கள். கருமுட்டை வெடித்து விட்டால் உங்களை சேர்ந்து இருக்க சொல்வார்கள்பா.
//இந்த ஸ்கேன் எடுக்க போகும் போது சாப்பிடாம தானே போகனும்.// அப்படி எல்லாம் ஒன்றுமில்லை சாப்பிட்டு விட்டே போகலாம்.

மேலும் சில பதிவுகள்