யோகாசனம்

எனக்கு மட்டும் இல்லை இங்க பெரும்பாலாருக்கும் இருக்கும் பிரச்னை உடல் பருமன் தான் .அதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன .யோகாசனம் இதை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது தெரிந்த தோழிகள் விளக்குங்கள். இதை பற்றி தெரியாத என்னை போல் உள்ள தோழிகளுக்கு உதவும் . யோகாசனம் எப்போதலாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது யோகாசனம் செய்யும் போது உணவு கட்டுப்பாடுகள் அதாவது டயட் போன்று ஏதாவது இருக்கணுமா . உடற்பயற்சி செய்யாமல் விட்டால் உடல் பருமன் வர வாய்ப்பு இருக்கு சொல்லுறாங்கள் அது போல யோகாசனத்தில் உள்ளதா . யோகாசனம் பன்னுறதுக்கு சிறந்த நேரம் எது காலையில் மட்டும் தான் செய்ய வேண்டுமா இரவில் செய்ய கூடாத .யோகாசனம் பண்ணும் போது மூச்சி பயற்சி அவசியம் சொல்லுறாங்கள் சாதாரணமாக மூச்சி விட்டு பண்ணினாள் பலன் இருக்காதா . யோகாசனம் யாரெல்லாம் பண்ணலாம் பண்ணக்கூடாது . வயிறு மற்றும் உடல் பருமனை குறைக்க எந்த மாதிரியான யோகா பண்ணலாம் .நான் மூன்று நாளாக யோகாசனம் பண்றேன் சூரிய நமஷ்காரம் யூடூபில் [பார்த்தேன் அதன் மாதிரியே செய்ய முயற்சி பண்ணுகிறேன் ஆனால் அதை நான் சரியாக தான் பண்ணுறேன் புரியவில்லை அதற்கு எண்களாம் மூச்சி விடணும் விடக்கூடாதுனு தெரியவில்லை அது காலையில மட்டும் தான் பண்ணனுமா இரவில் செய்ய கூடாத ஏன் என்றால் காலையில செய்யிறதுக்கு என் பொண்ணு விடமெடுக்குறள் காலை வந்துபிடித்து கொள்ளுகிறாள் இரவில் அவளை எனது கணவர் பார்த்துக்குவார் அதனால் கேட்டேன் இல்லை என்றால் இரவில் செய்யும் யோகாசனம் இருந்தால் கூறவும் . எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் அதுனால கேட்டேன் தெரிந்த தோழிகள் பதில் தாருங்கள் .

நான் ஒரு வரமாக யோகா பண்ணுறேன் ஆனால் அதை சரியாக பண்ணுறேன் தெரியல டைம் கிடைக்கும் போதல்லாம் பண்ணுறேன் என்னுடைய எடையை பார்க்கலாம் போன ஒரு கிலோ ஏறி இருக்கு ஒரு வராம பண்ணுறேன் கொஞ்சமாவது குறைஞ்சி இருக்கும் நினைச்சேன் ஆனால் எடை ஏறி இருக்கு எனக்கு குழப்பமாக இருக்கு தவறாக பண்ணுறேன் தெரியல அதுனால தான் உங்களிடம் யோகாசனத்திற்கு விளக்கம் கேட்டேன் தயவு செஞ்சி இதற்க்கு பதில் தாருங்கள் நான் 6 மாசத்துல 10 kg குறைக்கணும் ஆசைப்படுறேன்

Enaku normal delivery thaan 2 ponnu ipa second ponnu piranthu 1.5yrs aaguthu first delivery apram thopai podala.ipa 2nd deliveryla belt potum thopai prichanaila matiten.ithu koraika vali solunga frnds pls

//கொஞ்சமாவது குறைஞ்சி இருக்கும் நினைச்சேன் ஆனால் எடை ஏறி இருக்கு// உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள். மாப்பொருள் & இனிப்பு வகை உணவைக் குறையுங்கள். இரவு உணவை வேளைக்கு அதே சமயம் அளவோடு உண்ணுங்கள்.

‍- இமா க்றிஸ்

இம்மா அம்மா நான் இனிப்பே சாப்பிட மாட்டேன் அது எனக்கு பிடிக்காது ஏன் காலையில காபி கூட குடிக்க மாட்டேன் சாப்பாடு மட்டும் இனிமே அளவோட சாப்பிடுறேன் . நான் ரொம்ப கொண்ட இருக்கேன் 73 கிலோ இருக்கேன் என்னால நினைச்ச டிரஸ் போடா முடியலை சங்கடமா இருக்கு அது மட்டும் இல்லாமல் மாதவிடாய் சரியாக வருவதில்லை .டாக்டரிடம் போயி கேட்டோம் அவர்கள் முதலில் உடல் எடையை குறையுங்கள் சொல்லிட்டாங்க அப்படி இல்லனா மாத்திரை சாப்பிட வரும் ஆனால் மாதவிடாய் நார்மலா ஆகுற வரைக்கும் மாத்திரை சாப்பிடணும் சொல்லிட்டாங்கள் நானும் ஒரு மாதம் சாப்பிட்டேன் 21 நாள் மாத்திரை சாப்பிட்டு முடிந்ததும் 3 நாள் கழிச்சு வந்துடுச்சு வயிறு வலி பயங்கரமா இருந்துச்சு அதுனால ந மாத்திரை சாப்பிடுறதே நிப்பாட்டிட்டேன் .மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் சரிபண்ணுறத விட. முதல எடை குறைக்கும் முடிவு பண்ணி இருக்கேன் அத முயற்சி பண்ணிட்டு இருக்கேன் அதுனால தான் யோகாசனம் பத்தி பதிவு போட்டு இருக்கேன்

//.மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் சரிபண்ணுறத விட. முதல எடை குறைக்கும் முடிவு பண்ணி இருக்கேன் // உங்கள் முயற்சிக்கு என்னுடைய‌ வாழ்த்துக்கள்.. எனக்கெல்லாம் வெயிட் போட‌ மாட்டேங்குதேனு சாப்பிடாத‌ பொருள் இல்லை.. இங்க‌ என்னடானா ஏறுன‌ வெயிட்ட‌ குறைக்க‌ முயற்சி பண்றீங்க‌.. ம்ம்ம்ம்.. எனக்கு தெரிந்தத‌ சொல்றேன் அக்கா.

1. தினமும் வாக்கிங் செல்லுங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் செலவிடுங்கள்.

2. காலை ப்ரேக்ஃபாஸ்டிற்கு ஓட்ஸ் ம் ஃப்ரூட் சாலட்டும் சாப்பிடுங்கள். கெலாக்ஸ் கூட‌ சாப்பிடலாம்.

3. மதிய‌ உணவிற்கு சாதம் சேர்க்காமல் ஒரு சப்பாத்தி, வெஜிடபிள் சாலட் சாப்பிடுங்கள்.

4. இரவு உணவிற்கு ஏதேனும் ஒரு பழ‌ வகை. ஆப்பிள் சிறந்தது..

5. மாலை வேளைகளில் எடையை கட்டுப்பாடாக‌ வைத்திருக்க‌ நிறைய‌ கிரீன் டீ வகைகள் வந்திருக்கிறது.. அதில் ஏதேனும் உங்களுக்கு பிடித்தமான‌ ஃபிளேவரை தேர்ந்தெடுங்கள். ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை குறைத்து வாக்கிங் செல்லும் நேரங்களில் முளைக்கட்டிய‌ பயறு வகைகள் சாப்பிடுங்கள்.. நிச்சயம் உங்கள் எடை குறையும்.

குறிப்பு.: எங்கள் ஆஃபீஸில் ஒருவர் ரொம்பவே குண்டாக‌ இருப்பார். அவரால் சகஜமாக‌ நடக்க‌ கூட‌ முடியாது. உடல் எடையை குறைக்க‌ நினைத்த‌ அவர் தினமும் மூன்று வேளைகளிலும் (ஒவ்வொரு வேளைக்கு) ஒரு ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டார். பிறகு தினமும் வாக்கிங். அப்பப்ப‌ கிரீன்டீ, அவருடைய‌ எடை நன்றாக‌ குறைந்து இப்போது நார்மலாக‌ ஆகிவிட்டார்.. எங்கள் ஆஃபிஸில் ஒரு நாள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினோம்.. அவருக்கு அவ்வளவு குஷி.. எங்க‌ எல்லோருக்கும் ஆச்சரியம்.. நான் ஆஆ...னு வாயை திறந்து நின்னேன்.. மறக்கவே முடியாது..

- பிரேமா

@ ஃபிரோஸ்...

//வலி பயங்கரமா இருந்துச்சு அதுனால ந மாத்திரை சாப்பிடுறதே நிப்பாட்டிட்டேன்// வலி மாத்திரையால் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. சில சமயம் எந்த மாத்திரைகளும் எடுக்காத மாதங்களிலும் இப்படி இருப்பது உண்டு.

//மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் சரிபண்ணுறத விட. முதல எடை குறைக்கும் முடிவு பண்ணி இருக்கேன்// :-) எடையும் மாதவிடாயும்... எது எதைக் குழப்புகிறது என்பதைத் தீர்மானமாகச் சொல்வது சிரமம். 'கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?' கேள்வி போல இதுவும். மாதவிடாய் ஒழுங்காக இல்லாவிட்டால் அதாவது மாதம் ஒரு தடவை வராவிட்டால், நிச்சயம் எடை போடும். எடை போட்டால் மாதவிடாய் ஒழுங்கில்லாமல் ஆகலாம். :-)

பெண்களின் உடல், ஆண்களது போல அல்லாமல் மாதம் அண்ணளவாக 30 மில்லிலீற்றர் இரத்தத்தை இழந்து, மீண்டும் அதை ஈடுகட்டும் விதமான அமைப்புடையது. மாதவிலக்கு ஆகாத சமயம் 30 மில்லி இரத்த இழப்பும் இல்லை; அதற்கு ஈடுகட்டும் இன்னொரு 30 மில்லி இரத்த ஆக்கமும் இல்லை. ஆக... கிட்டத்தட்ட 60 மில்லி இரத்தத்திற்கு ஈடான சக்தி சேமிக்கப்படப் போகிறது. இது எடையாகத் தான் சேமிக்கப்பட்டாக வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் 50 கடக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் எடை அதிகரிப்பது.

நிச்சயம் உணவுக் கட்டிப்பாடும் உடற்பயிற்சியும் அவசியம். மாத்திரை உபரி உதவி. என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.

‍- இமா க்றிஸ்

//பெண்களின் உடல், ஆண்களது போல அல்லாமல் மாதம் அண்ணளவாக 30 மில்லிலீற்றர் இரத்தத்தை இழந்து, மீண்டும் அதை ஈடுகட்டும் விதமான அமைப்புடையது. மாதவிலக்கு ஆகாத சமயம் 30 மில்லி இரத்த இழப்பும் இல்லை; அதற்கு ஈடுகட்டும் இன்னொரு 30 மில்லி இரத்த ஆக்கமும் இல்லை. ஆக... கிட்டத்தட்ட 60 மில்லி இரத்தத்திற்கு ஈடான சக்தி சேமிக்கப்படப் போகிறது. இது எடையாகத் தான் சேமிக்கப்பட்டாக வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் 50 கடக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் எடை அதிகரிப்பது.// இதெல்லாம் இதுவரைக்கும் நான் கேள்வி கூட‌ பட்டதில்லை.. உங்கள் தகவலுக்கு நன்றி மா.

- பிரேமா

பிரேமா ந கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லியாக இருப்பேன் பார்ப்வங்க கம்புக்கு சேலை கட்டின மாதிரி இருக்கேனு கேலி பண்ணுவாங்க எப்படிவது கொஞ்சம் சதை போடணும் சாப்பிட்டேன் அப்பவெல்லாம் போடாத சதை கல்யாணத்துக்கு பிறகு முதல் குழந்தை பிறந்ததும் சதை போட்டுச்சு அப்போ சந்தோச பட்டேன் ஆனால் அது நாளாக நாளாக அதிகமே ஆகி இப்போ பழைய உடல் வரதனு ஏங்குறேன் .நான் காலையில ஓட்ஸ் தான் சாப்பிடுவேன் மதியம் கொஞ்சம் சாதம்நைட்க்கு கொஞ்சம் காய்கறி ,பழங்கள்,2 முட்டை இது தான் சாப்பிடுறேன் காலையில உடற்பயிற்ச்சி பண்ணலாம் பார்த்த என் பொண்ணு செய்ய விட மாட்டுக்கார எப்ப யோகாசனம் போனாலும் நடுவுல வந்து உக்காந்துக்குற வெளியில என்னால வாக்கிங் போக முடியல இங்க குளிர் வேறே அதுனால வெளிய நடக்க போக முடியல வீட்டுலே சின்ன சின்ன யோகா பண்ணலாம் ட்ரை பண்ணலாம் பார்த்த என் பொண்ணு விட மாட்டுக்கார என்ன செய்யனு தெரியல இப்படியே போனால் இன்னும் மொத்தமாக ஆகிடுவேன்னு பயமா இருக்கு

நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் முதலில் எனக்கு நார்மலா மாதவிடாய் வந்திடும் மாசம் மாசம் சரியாய் வந்திடும் இங்க வந்து சில பாதங்களில் இருந்து தான் இப்படி இருக்கு அதன் பிறகு தான் அதிக எடை கூடிச்சு 58 கிலோ இருந்த நான் இப்போ 73 இருக்கேன் அதுனால தான் குறைக்கும் நினைக்குறேன் மாதவிடாய் சரியாக வராதலால் எடை அதிகம் மாகும் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் .இப்ப என்ன செய்யிறதுனு தெரியல பேசாம மாத்திரையே எடுத்துக்கலாம் தோணுது எனக்கே குழப்பமாக இருக்கு மாத்திரை எடுத்து கிட்ட சரியாக வருது ஆனால் வயிறு வலி தான் அதிகமா இருக்கு அந்த சமயத்துல என்னால வலி தாங்க முடியல குழந்தையும் நான் தன கவனிக்கணும் அப்படி இருக்கையிலே வலி வச்சிட்டு பாப்பாவையும் சமாளிக்க கஷ்டமா இருக்கு அதுனால தான் மாத்திரையை நிறுத்தினேன் இப்போ ந மாத்திரை போடுறத எல்லா உடற்பயிற்ச்சி செஞ்சு எடை குறைகூறாத தெரியல

\\ இது எடையாகத் தான் சேமிக்கப்பட்டாக வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் 50 கடக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் எடை அதிகரிப்பது. \\ என்ன‌ மாதிரியான‌ எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள‌ ஆவல்.
நான் 50 ஐ தொட‌ போகிறேன். இதுவரை என் எடை 50 ‍- 53.5 க்குள் தான் இருந்து வந்திருக்கிறது. எனக்கு சில‌ குறிப்புகளாவது தருவீர்களானால் அது பயனுள்ளதாக‌ இருக்கும்.

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்