14 வாரங்கள் முடிந்து விட்டது ஆனால் இன்னும் வயிறு பெரியதாக இல்லை பார்ப்பவர்கள் கேட்கிறார்கள் வயிறவே காணோம் என்று, எனக்கு பயமாக உள்ளது இதனால ஏதும் பாதிப்பா இருக்குமா அவசரம் பதில் தாருங்கள் ப்ளீஸ் தோழிகளே யாரேனும் 14 வது வார கர்ப்பமாக உள்ளீர்களா உங்களுக்கு எவ்வாறு உள்ளது ..
பாரதி143
ஏன் பயப்பிடுறிங்கள் இது சாதாரணம் தான் எனக்கும் இப்படி இருந்து இருக்கும் வயிறே தெரியாது எல்லாரும் கேப்பாங்க பிள்ளைத்தாச்சி போல இல்லையேன்னு இதுக்கலாம் ஏன் கவலை படுறிங்க டாக்டர் பார்த்து இருக்கீங்க ஸகேன் பார்த்து இருக்கீங்களா அப்பறம் என்ன பயம் அடுத்தவங்க இது சொல்லுறாங்க அத சொல்லுறாங்கனு காதுல போட்டுக்காதிங்க நல்ல விஷயத்தை மட்டும் கேளுங்க இப்படி பட்டத்தளம் காதுல வாங்காதீங்க கவலை விடுங்கள்
பாரதி
16 வாரத்திற்கு மேல் தான் வயிறு தெரிய ஆரம்பிக்கும்..எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காதுப்பா.. எனக்கு நிறை மாதம் வரை வயிறு 5 மாத வயிறுபோல் இருந்தது..நர்ஸ் ஒருமுறை எத்தனை மாதம் எனக் கேட்டு ஆச்சயர்ப்பட்டார்.அந்த அளவு குட்டி வயிறாக இருந்தது..ஆனால் குழந்தை 3 கிலோ இருந்தான்.. :-) பயப்படாமல் இருங்கள்..
அவந்திகா
Bharathi avantika
Bharathi avantika sonamatrithan enakum irunthuchu nanum ungala matri than payapayen apom doctor sonanga vayaru perusa iruntha breathe panave kastamairukumam romba walk pana mudiyathu sapda mudiyathu thungamudiyathu pressure athigamagum.ithuthan nalathunu sonanga so neenga lucky than payapadathinga.
பாரதி
பயப்படாதீங்க. மூன்றரை மாதத்தில் பெரிதாக வயிறு தெரியாது. இன்னும் காலம் இருக்கிறது.
- இமா க்றிஸ்
Hi friends, நான் 21 வாரம்
Hi friends,
நான் 21 வாரம் கர்ப்பமாக இருக்கின்றேன்.
ஆனால் குழந்தை அசைவு தெரியவில்லை. எப்போது தெரியும் என்று சொலுங்கள்
தோழிகளே
Hi friends நான் 21 வாரம்
Hi friends
நான் 21 வாரம் கர்ப்பமாக இருக்கின்றேன். ஆனால் குழந்தை அசைவு தெரியவில்லை.
எப்பொழுது தெரியும் என்று சொல்லுங்கள் தோழிகளே
முதல் குழத்தை என நினைக்கிறேன்
முதல் குழத்தை என நினைக்கிறேன் , அது தான் உங்களுக்கு அசைவு தெரியவில்லை.
பதிலளித்த அனைவருக்கும் நன்றி
போன முறை 10 வாரத்தில் அபார்சன் பன்ன சொல்டாங்க அந்த பயம் தான் எனக்கு பல சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. 15 வது வாரம் ஸ்கேன் பன்னிக்க சொல்லீருக்காங்க பன்னிக்கலாமா இல்ல 20 வது வாரம் ஸ்கேன் பன்னிக்கலாமா 15 வாரத்தில் பன்னினா 20 வது வாரமும் ஸ்கேன் பன்னுமா பதில் தாருங்கள் !!!!!
பாரதி143
டாக்டர் எப்படி சொல்லுறாங்களோ அதன் படி செயின்கள் அவர்கள் எந்த வாரத்தில் எல்லாம் ஸ்கேன் பண்ண சொல்லுறாங்களோ பண்ணுங்கள் .டாக்டர் அட்வெஸ் படி நடவுங்கள் அது தான் நல்லது
பாரதி
நம்ம ஃபிரோஸ் சொன்னமாதிரி டாக்டர் எப்ப வர சொல்றாங்களோ அப்பவே கரக்டா போய்டுங்க. அதான் பா நல்லது..
- பிரேமா