மரம் நடுவோம் மழை பெறுவோம்,,,,

வணக்கம் தோழிகளே!...........
நம் தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருப்பினும் முக்கியமானது விவசாயம். இந்த வருடம் நம் பருவமலை பொய்த்துவிட்டது! விவசாயமோ பாதித்துவிட்டது!. இதற்கு மிக முக்கிய காரணம் யாரும் மரம் வளர்ப்பது இல்லை. "இந்த வருடமே நம் பருவமலை பொய்த்துவிட்டது" என்றால் இனி வரும் நாட்களில் என்ன ஆகும்.
பிற்காலங்களில் நமக்கு மரங்கள் இல்லை எனில் சுவாசிக்க தூய்மையான காற்றும் இருக்காது, சிந்தித்து செயல்படுங்கள் தோழிகளே. வர்தா வந்து சென்னையில் இருந்த மரங்களை கொன்று குவித்துவிட்டது. போதும் இனியாவது நாம் மரங்களை வெட்டாமல் பாதுகாப்போம்.
நம் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கும்போதும் அவர்களை வளர்க்கும் போதும் நாம் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம். அவர்களுக்கு தூய்மையான காற்றும் நீரும் உணவும் வேண்டாமா? வேண்டும் எனில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், விவசாயிகளை காத்திடுவோம், இயற்கையை காத்திடுவோம், நம் தலைமுறைகளை காத்திடுவோம். நன்றி!.

மேலும் சில பதிவுகள்