சுரைக்காய் பால் கறி

தேதி: February 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுரைக்காய் - 1 (சிறியது),
பால் - 200 மில்லி,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி - 1/2 அங்குல துண்டு,
பூண்டு - 3 பல்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

சுரைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை, கடுகு தாளித்து, நறுக்கிய சுரைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பாலை ஊற்றி மூடி வைத்து, சுரைக்காயை வேக வைக்கவும்.
சுரைக்காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
மசாலா வெந்து கெட்டியாக குழம்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உங்க சுரைக்காய் பால் கறி சூப்பர்.எப்படி செய்யறதுனு, சாப்பிட்டவங்க எல்லாம் ரெசிபி வாங்கிட்டாங்க.நிறைய தடவை இத நான் செய்தாச்சு.என் கணவருக்கு பிடித்தமானது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.