சரியான தூக்கமே இல்லை.

இப்போ ஒரு மாதமா எனக்கு சரியான தூக்கமே இல்லை.தூங்கும் போது கூட ஏதோ சிந்தனைல தூங்குற மாரியே இருக்கு.ஏன் இப்படி இருக்குன்னு தெரியல.மனசு நிம்மதியே இல்ல ஏதேதோ சிந்தனைல தான் இருக்கேன் மனசு ஒரு நிலையில் இல்லை. நான் ஏதோ பாவம் .சேய்த மாரியே நினைக்கீ தோனுது ஏன் இப்படி இருக்குன்னு தெரியல தோழிகளே

தேவையில்லாததை நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதேங்க பா, / /இப்போ சரியான தூக்கமே இல்லை, தூங்கும் போது கூட ஏதோ சிந்தனைல தூங்குற மாரியே இருக்கு// நானும் உங்களை போல தான் ,தூங்கும் பொழுது எதையும் யோசிக்க கூடாதுன்னு நினைத்துக்கோங்க, இரண்டு ,மூ‌ன்று நா‌ட்கள் ஆகும் பழக. நம்ம நிம்மதியாக இல்லனா அது நம்ம சுத்தி உள்ளவர்களையும் பாதிக்கும். எனக்கு தெரிந்ததை சொன்னேன் தப்பா நினைக்காதீங்க.

// இப்போ ஒரு மாதமா எனக்கு சரியான தூக்கமே இல்லை// நல்ல பாடல்கள் கேளுங்கள் கேட்டுட்டே தூங்குங்கள் எனக்கு தூக்கம் வராத சமையத்தில் நல்ல மெலோடி சோங் கேப்பேன் மனசுல எந்த குழப்பத்தையும் பத்தி யோசிக்காதிங்க மனச ரிலாக்ஸ் வச்சுக்கங்க யோகாசனம் பண்ணின மனசு ரிலாக்ஸ் ஆகும் கேள்வி பட்டு இருக்கேன் நீங்கள் அதை முயற்ச்சி செயின்கள் சின்ன சின்ன நாமளா முடிஞ்சது பண்ணுங்க எப்போதும் மனச அமைதியா சந்தோசமா வச்சுக்கங்க // நான் ஏதோ பாவம் .சேய்த மாரியே நினைக்கீ தோனுது // ஏன் அப்படி யோசிக்கிறீங்க இது வெறும் மன அழுத்தம் தான் அதுனால தான் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது நல்ல விஷயங்களை நினச்சு பாருங்கள் சரியாகிடும்

Romba thanks pa unga advice kku. Na muyarchi seiren neenga sonnathalam thanku very much :)

அஸ்மா எப்படி இருக்கிங்க தம்பிக்கு என்ன பெயர் வெச்சிருக்கிங்க. எனக்கு தூக்கம் வரலன்னா கதை புக் படிப்பேன்.,

தோழி, உங்களுக்கு சரியான‌ தூக்கம் இல்லாததற்கு காரணம் நீங்கள் ஒரு வேளை உங்கள் குழந்தையை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கலாம். எப்போது விழிப்பானோ என்று ஒரு வேளை நினைத்திருக்கலாம். குழந்தை பகலிலும் தூங்கும் இரவிலும் தூங்கும் அல்லவா அதனால் கூட‌ உங்களுக்கு தூக்கம் சரிவர‌ இல்லை என்று நினைக்கிறேன்..

இரவில் தூங்கும் முன் இறைவனை நன்கு வேண்டிக்கொள்ளுங்கள் மற்றும் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு டம்ளர் பால் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக‌ தூக்கம் வரும்..

- பிரேமா

அஸ்மா நீங்க மன அழுத்தத்துல இருக்கீங்க போல, அதானால தான் உங்களுக்கு சரியா தூக்கம் வரல,
தூங்கலனாவே சிந்தனை நிறைய கரை புரண்டு ஓடத் தான் செய்யும்,

பிரச்சனையை தூரமா வச்சி பாருங்க, உங்களுக்கு பிடிச்ச விசயத்துல மனசை கொண்டுப் போங்க,

தூங்குவதற்கு முன்பு நல்ல புத்தகங்கள் படிங்க, புக் படிச்சாலே நல்லா தூக்கம் வரும் பல பேருக்கு,
பாட்டு கேளுங்க, கண்ணை மூடி 2 நிமிசம் தியானம் பண்ணுங்க, மொட்டை மாடி இருந்தா சின்ன வாக் பண்ணிட்டு படுங்க தூக்கம் நல்லா வரும்...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்