முடி பிரச்சனை சந்தேகங்கள்

அன்பு தோழிகளே என்னுடைய சந்தேகத்திற்கு உதவுங்கள். எனக்கு நீளமான முடி முன்பு எல்லாம் நல்ல அடர்த்தியாக இருந்த முடி இப்ப வெளிநாட்டுக்கு வந்ததும் என் முடியா இப்படி இருக்குனு ஆச்சிரியம் படும் அளவிற்கு முடி கொட்டுகிறது . எலி வால் போல் நீண்டு மெலிதாக இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. தலை வாரினால் கொத்து கொத்த முடி சீப்புல வருது இங்க என்னால் தேட முயன்ற சில இலைகளை தேடி பார்த்தேன் முடி பிரச்சனைக்கு ஏதாவது வலி இருக்குமான்னு நிறைய தோழிகள் டிப்ஸ் குடுத்து இருந்தார்கள் ஆனால் சிலவற்றை என்னால் இங்கு வாங்க முடியாது . என்பதால் அதை தவிர்த்து வேறே எளிமையான டிப்ஸ் இருக்கானு பார்த்தேன் . அதில் வெங்காயம் பற்றி குறிப்பு இருந்தது ஆனால் அதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன .

1. வெங்காயம் சாற்றை எடுத்து தலையில் தேய்த்தால் முடி வளருமா அதை யாராவது செய்து பலன் பெற்று இருக்கீர்களா .
2 . வெங்காயம் சாற்றை எப்படி யூஸ் பண்ணுவது . எத்தனை தடவை அதை யூஸ் பண்ணலாம் .

3 . வெங்காயம் குளிர்ச்சி என்பதால் குளிர் நேரங்களில் அதை யூஸ் பண்ணலாமா .
4 . வெங்காய சாற்றை தலையில் தேய்த்து ஊற விடவும் போட்டு இருக்கு எவ்வளவு மணி நேரம் ஊறவைக்கணும் .
5 . தலைக்கு ஷாம்பு விட சீயக்காய் சிறந்தது சொல்லுறாங்க இங்கே சீயக்காய் கிடைப்பது கடினம் எனக்கு பொடுகு பிரச்னை வேறே இருக்கு .ஆதலால் எந்த வகையான ஷாம்பு யூஸ் பண்ணலாம் .
6. [பயித்தம் பருப்பு ஷாம்பு & சீயக்காய் பதில் யூஸ் பண்ணலாம் என்று பார்த்தேன் ஆனால் அதை எப்படி வீட்டிலேயே செய்வது பயித்தம் பருப்பை மட்டும் போடி செய்து யூஸ் பண்ணலாமா இல்லை அதன் உடன் ஏதாவது சேர்க்க வேண்டுமா அது இங்கு கிடைக்குமா என்று தெரியாது அப்படி கிடைக்கவில்லை என்றால் வெறும் பயித்தம் பருப்பை மட்டும் யூஸ் பண்ணலாமா
வேறே ஏதேனு வலி இருந்தால் கூட சொல்லுங்கள் தோழிகளே .

//வெங்காயம் சாற்றை எப்படி யூஸ் பண்ணுவது . எத்தனை தடவை அதை யூஸ் பண்ணலாம் .// அக்கா எனக்கு தெரிந்து சின்ன‌ வெங்காயத்தை அரைத்து தலையில் அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலையை அலச‌ வேண்டும்.. இது நல்ல‌ பலன் தரும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் பயன்படுத்தி பார்க்க‌ நேரம் அமையவில்லை.. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை யூஸ் பண்ணலாம்.

//த‌லைக்கு ஷாம்பு விட சீயக்காய் சிறந்தது சொல்லுறாங்க // எங்க‌ அம்மாவும் சீயக்காயும் வடிகஞ்சியும் தான் தலைக்கு தேய்ப்பார்கள்.. வடி கஞ்சி தேய்ப்பதால் நல்ல‌ நுரை வரும். அதனால் ஷாம்பூ தேவையில்லை என்று சொல்வார்கள்..

// எனக்கு பொடுகு பிரச்னை வேறே இருக்கு // பொடுகுக்கு வேப்பிலை பயன்படுத்தலாம் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

~~~~~~

முடி வளர உதவும் பயித்தம் பருப்பு (என் சொந்த‌ அனுபவம்) :

இது தான் நான் பயன்படுத்தி பார்த்த‌ ஒன்று.. நான் முடி வளர‌ பயித்தம் பருப்பு (பாசிப்பயறு) ஒரு கைப்பிடி, எட்டு செம்பருத்தி இலைகள், சிறிது வெந்தயம் மூன்றும் பயன்படுத்தியிருக்கிறேன்.. அதாவது முதல் நாள் இரவு பாசிப்பயறையும் வெந்தயத்தையும் நீரில் ஊற‌ வைத்து விடுவேன்.. காலையில் அந்த‌ இரண்டுடன் செம்பருத்தி இலைகளையும் சேர்த்து லேசாக‌ தண்ணீர் விட்டு அரைத்து கொண்டு தலையில் நன்கு படும்படி முடியை பாகமாக‌ பிரித்து அப்ளை செய்ய‌ வேண்டும்.. சிறிது நேரத்தில் நன்கு காய்ந்துவிடும்.. பிறகு ஷாம்பூ போடாமல் தலையை அலச‌ வேண்டும்.. நுரை நன்கு வரும்.. நல்ல‌ வாசமாகவும் இருக்கும். பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அரைக்கும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்க்க‌ வேண்டும். நல்ல‌ பலன் தரும். இதை பயன்படுத்திய‌ பிறகு எனக்கு முடி வளர‌ ஆரம்பித்தது. முடியும் நல்ல சில்க்கியாக‌ இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் !!!

- பிரேமா

Hai fairz na phone la type panrathala tanglishla type panren sry neenga veetla seegaikai illa paasipairu araichingana paasipairu kooda venthayam add pannikonga seegaikai ready pannanum na arusuvai la neraiya thozhikal discuss panni irukanga. Search panni parunga. Na seegaikai la enga ellam poduvenu solren seegaikai 1kg. Venthayam 1/2kg paasipairu 1/2kg sembaruththi poo ilai 2m 15 to 25 maruthani illai konjam aavarampoo konjam. Ithu ellam Nalla veilla kayavechu mechine la koduththu araichingana vetchuppen. Weekly twice headbath pannuven. Neraiya dates sapiduven. Avlo thanga. Try it.

நன்றி பிரேமா & ஹஸீன் நீங்கள் சொல்லும் பொருட்கள் இங்கு கிடைப்பது கடினம் அதுவும் முக்கியமான பொருள் சீயக்காய் இங்கு கிடைக்குமா தெரியவில்லை செம்பருத்தி பூ அதுவும் கடினம் தான் பொடுகு போக முடி உதிர்வு கம்மியாக அடர்த்தியாக வேறே இருந்தால் சொல்லுங்கள் இந்தியாவில் கிடைப்பது இங்கு கிடைப்பது கடினம் தோழி இருந்து எனக்காக டைம் ஒதுக்கி பதில் சொன்னது நன்றி

Chinna vengayam use pani, nala result enaku kidachurku thozhi, neenga itha use panunga, kandipa nala result kidaikum, nala China vengayam saru eduthu, hair wash pandra oru 30minits munadi, nala thala fulla apply pani, aparam wash panunga, keerai vagaigal , dates lam nala sapdunga sister.

நன்றி மா அப்படியே ட்ரை பண்றேன் ஆனால் சின்ன வெங்காயம் தான் யூஸ் பண்ணனுமா இல்லை பெரிய வெங்காயம் கூட யூஸ் பண்ணலாமா

Poduhu problem enakum irundhathu. Munthina naal night oru bucket hot water la Veppa ilaiya pottu vachutu adutha naal morning andha waterla ulla ilaiya eduthu tu thalaiku andha watera oothi kulipen.ipdi weekly 2 times panunen.poduhu poiduchu. Neenga lum try pani paarunga.

Periya vengayamum use panalam, but China vengayam than hair growthku romba nalathu thozhi, neengal yengey irukireergal? China vengayam angu kidaikatha? Thozhi

பெரிய வெங்காயமும் உபயோகிக்கலாம் Firoz,நான் உபயோகித்திருக்கிறேன். முடியை லேயராக எடுத்து தலையில் படும்படி தேய்க்கவும் ,வெங்காய சாறு காய்த்தும் குளிக்கலாம் ,கொஞ்சம் குளிராக தான் இருக்கும் ,குளிர் நேரங்களில் சிலருக்கு ஒத்துக்காது ,தலைவலி வரும்.முடி வளருமானு எனக்கு தெரியல ஆனா முடி கொட்றது குறையும்

நன்றி தோழி இங்கு சின்ன வெங்காயம் கிடைக்குது தோழி நீங்கள் சொன்ன மாதிரி ட்ரை பண்றேன் ரொம்ப நன்றி

நன்றி மா ஆனால் இங்கு இப்போது குளிர் என்பதால் இப்போதைக்கு ட்ரை பண்ணல உயிர் முடிந்ததும் ட்ரை பண்றேன்

மேலும் சில பதிவுகள்