உருளைக்கிழங்கு அரைக்கீரை மசாலா

கர்ப்பிணி பெண்கள் எல்லோருக்கும் கீரை பிடிக்கும்னு சொல்ல முடியாது , பிடிக்காட்டியும் கட்டாயம் சாப்பிடனும் இப்படி டிபரன்டா ட்ரைவ் பற்றி சாப்பிடலாம் நான் 5 மாதம் கர்பமாக உள்ளேன் நான் சாப்பிட்டேன் இந்த சுவை பிடித்தால் என் தோழிகளுக்கு சொல்லனும்னு தோனுச்சு விரும்பினால் ட்ரைவ் பற்றி பாருங்கப்பா.

உருளைக்கிழங்கு அரைக்கீரை மசாலா செய்ய தேவையானவை:

அரைக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1பொடியாக அரிந்தது)
இஞ்சிபூண்டு விழுது -- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு –ருசிக்கேற்ப
பச்சைமிளகாய் -- 2
எண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
தக்காளி -- 2 (பொடியாக நறுக்கியது)
பட்டை -- 1அங்குலம்
உருளைக்கிழங்கு -- 2 என்னம்(வேகவைத்து தோல் உரித்தது)
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
உருளை அரைக்கீரை மசாலா செய்வது எப்படி?

முதலில் வாணலியில் எண்ணைய் ஊற்றி சீரகம்,பட்டை , வெங்காயம்,பச்சைமிளகாயை வதக்கி தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, இவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கி உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உருளைக்கிழங்கை ஒரு வதக்கு வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கீரையை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து வெந்ததும் மசித்து வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து கொண்டிருக்கும் போது மசித்த கீரையை சேர்த்து நன்கு கிளறவும். . உருளை அரைக்கீரை மசாலா ரெடி...இதை மார்பிங் தோசைக்கு வச்சி சாப்பிட நல்லா இருக்கும்

மேலும் சில பதிவுகள்