மாடியில் தொட்டிச்செடி

பல நாட்கள் கழித்து அறுசுவை பக்கம் வந்துருக்கேன். என் சந்தேகம் என்னவென்றால் மாடியில் தொட்டியில் செடி வைக்கலாமா. வைக்கக்கூடாது என்று பலர்கூறுகின்றனர். தரை வீணாகி கட்டிடடத்தையும் சேதமடையச் செய்யும் என்கின்றனர். ஆனால் என் மாமியாரோ அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்கிறார். நான் ஏற்கனவே (8மாதத்திற்கு முன்பு) மாடியில் செடி வைத்திருந்தேன் 20 செடிகள் இருக்கும். ஆனால் அதெல்லாம் இறந்துவிட்டது. 4மல்லிகை மட்டும் இருக்குது. காரணம் நான் நிறை மாத கர்பினியா இருந்தேன் அதே நேரம் என் மகளுக்கு ஒரு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது அதனால் நான் காலை 7.30 முதல் இரவு 9.30 மணி வரை மருத்துவமனையில் 15நாள்கள் இருந்தேன் அதன் பின்பு 15நாள்கள் கழித்து எனக்கு 2வது குழந்தை பிறந்தது இந்தமாறி சூழ்நிலையால் என் செடிகளை பார்க்க முடியலை. என் மாமியாரும் கவனிக்கலை. அதனால் தான் செடிகள் இறந்தது. இப்போது மீண்டும் வைக்க ஆசை ஆனால் கட்டிடம் பாலாகும்னு சொல்லுறாங்க. அதான் யோசிக்க வேண்டியுள்ளது. மாடியில் சிகப்பு ஓடு பதிக்கப்பட்டு தான் இருக்கு. செடி வைக்கலாமா சொல்லுங்க.

ஹலோ dhivya, அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இந்த மாதிரியான base use செய்யலாம் பா.மண்வைத்து மாடித் தோட்டம் அமைத்தால் மாடி காங்கிரீட் விரைவில் பலமிழந்துவிடும். மண்ணிற்கு பதிலாக நல்ல வளமான மாட்டுச்சாணமும், மக்கிய தேங்காய் நார் கழிவு கனமில்லாத வளமான பொருள்களாகும். தேங்காய் நார் கழிவுகள் கேயர்கேக் வடிவில் கிடைக்கின்றது. மக்கிய மாட்டுச்சாண‌ம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த எருவாட்டியை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கும் இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

மேல் சொன்னது google செய்து பார்த்தது பா, எனக்கு தெரிந்தவங்க மாடில சிமெண்ட்லயே பெரிய தொட்டி முன் சுவரோடு சேர்த்து கட்டிருந்தாங்க அவங்களுக்கு முன் சுவர் கீரல் விழுந்துடுச்சு.

பாரமான, பெரிய தொட்டிகளை இடம் மாற்றி வைக்க முடியாது. அவற்றின் கீழ் தொடர்ந்து ஈரலிப்பு தங்கும். சின்ன வெடிப்புகள் இருந்தாலும் அதன் வழியே நீர் (இது சும்மா நீர் இல்லை. பசளை - இயற்கையோ செயற்கையோ - இரசாயனப் பொருட்கள் சேர்ந்த நீர்) இறங்கி காங்க்ரீட்டின் உள்ளே உள்ள இரும்புக் கம்பிகளைத் துருப்பிடிக்க வைத்தால் வெடிப்பு பெரிதாகும்.

//கட்டிடம் பாலாகும்னு சொல்லுறாங்க.// ;-) நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம். பாரமில்லாத தொட்டிகளைத் தெரிந்தெடுங்க. உள்ளே, மேலே சகோதரி சொன்னது போல தும்புமிக்ஸ் போட்டால் மண்ணை விடப் பாரம் குறைவாக இருக்கும். வடியும் நீரைப் பிடித்துக்கொள்ள தொட்டிகளின் கீழே தட்டுகள் வைக்கலாம். (நுளம்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.) அந்தத் தட்டுகளின் கீழ் சின்னதாக கால்கள் (இவை தொட்டி விற்கும் கடைகளிலேயே கிடைக்கும்.) வைத்தால் காற்றோட்டம் தரையை உலர்வாக வைத்திருக்கும். தொட்டிகளை அடிக்கடி இடம் மாற்றினாலும் தரை ஈரமில்லாமலிருக்கும். செடிகளுக்கு தேவைக்கு மேல் நீர் விட வேண்டாம்.

//சிகப்பு ஓடு பதிக்கப்பட்டு தான் இருக்கு.// இது புரியலயே! ஓடு! கூரைலதானே இருக்கும்! தரை ஓடுகள் - டைல்ஸை சொல்றீங்களா?

‍- இமா க்றிஸ்

பதில் அளித்ததற்கு என் நன்றிகள். ரோஜா செடி வைக்குற நார்மல் அளவு தொட்டி தான் பா.

(சிகப்பு ஓடு-தட்டோடு) மாடியில் தரையில் பதிப்பதை இப்படி சொல்லுவோம்..

நுளம்பு - கொசு என்று இப்போதான் google சர்ச் ல் தெரிந்து கொண்டேன்.. :-)

அவந்திகா

ஓடு - நீர் பட்டு நிறம் மாறலாம். நல்ல நீரே ஒரு இடத்தில் தங்கினால் அதிலுள்ள கனியுப்புக்கள் காய்ந்து வெள்ளையாகப் படியும். பார்த்து அப்பப்பவே சுத்தம் செய்துருங்க.

டைப் பண்ணும் போது நினைவு வந்திருந்தால் மாற்றித் தட்டியிருப்பேன். :-) அங்க கொசு - பழ ஈ. குட்டிக் குட்டியா சில சமயம் கொஞ்சம் மங்கலான நிறத்தில் ஈ போல இருக்கும். பனம்பழ காலத்தில் பனங்கொசு நிறைய வரும்.

‍- இமா க்றிஸ்

செடி மண்லயே நிறைய பூரான்கள் வருது, அதை தடுப்பது எப்படி?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அவை இருக்கதான் செய்யும். செடியைத் தாக்காது.

மண்ணின் மேல் விழும் இலைகுழைகளை அடிக்கடி எடுத்து விடுங்கள்.
சாம்பல் தூவலாம்.
இரண்டு நாட்களுக்கு யார் வீட்டுக் கோழியையாவது இரவல் வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். :-) சந்தோஷமாகச் சாப்பிடுவார்.
அங்கே கொஞ்சம் பாண் துண்டுகளைப் போட்டுவிடுங்கள். அதைச் சாப்பிட வரும் பறவைகள் கிளறி இவற்றையும் சாப்பிடுவார்கள்.

‍- இமா க்றிஸ்

மாடியில் 2 தக்காளிச் செடிகள் நன்கு செழிப்பாக‌ வளர்ந்து பூத்து நிறைய‌ காய்கள் (சுமார் 30‍- க்கு மேல்) வ்ந்திருக்கின்றன‌. சிறிய‌ கருப்பு பூச்சிகள் தண்டுகளில் இருந்த‌து. சாம்பல் தூவியதால் இப்போது இல்லை. ஆனால் சில‌ காய்களின் அடிப்பகுதியில் மட்டும் அழுகிய‌ நிறம் (brown colour) காணப்படுகிறது. இது எதனால் இருக்கும்?

காய்கள் பருக்கின்றன‌. ஆனால் இன்னும் எதுவும் பழுக்கவில்லை. அந்த‌ பாதிக்கப்பட்ட‌ காய்களிலிருந்து மற்றவற்றிற்கும் பரவுமா? அவைகளை பறித்து விடலாமா? பயன்படுத்தலாமா? கூடாதா?

அன்புடன்
ஜெயா

எங்கள் வீட்டில் ஒரு செடி முளைத்து Morning Glory பூ மாதிரி நிறைய‌ பூக்கள் பூத்திருக்கு. Morning Glory முளைக்க‌ வாய்ப்பில்லை. வேறு என்னவா இருக்கக்கூடும்?

அன்புடன்
ஜெயா

செடியா கொடியா? தரைல படருதா அல்லது எதுலயாச்சும் தாவிப் படருதா? இலை வடிவம் என்ன? டெக்க்ஷர் எப்பிடி இருக்கு? பூ நிறம் என்ன? நிறைய சந்தேகம் வருது. :-) அடம்பன், மார்னிங் க்ளோரி, வற்றாளை, முசுட்டை, கங்குன் எல்லாவற்றின் பூக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்