குழந்தைக்கு மலச்சிக்கல்

எனக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் .அவள் 3,4நாட்களுக்க ஒருமுறை தான் மோசன் செல்கிறார் ..மிகவும் கஷ்டப்பட்டு வலியுடன் செல்கிறாள் இன்று மருத்துவரை பார்த்தோம் அவர் ஆசனவாயில் விரிசல் இருக்கு அதனால் வலி இருக்கும் என்று பைல்ஸ் ஆயின்மன்ட் எழுதி கொடுத்து இருக்கிறார் ...நார்சத்து காய்கறிகள் அதிகம் சேருங்கள் ஒரு மாதம் பின் வாருங்கள் என்று சொன்னார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவளுக்கு பைல்ஸ் இருக்குதோனு பயமா இருக்கு இது சரியாகிவிடுமா பயமாகவும், கவலையாகவும் உள்ளது ...

என் குழந்தைக்கு இது சரியாகிவிடுமா ,அதற்கு என்ன உணவு தருவது, எப்படி தினமும் மோசன் போக வைக்கிறது . உதவுங்கள் ப்ளீஸ்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

உலர்ந்த‌ விதையுள்ள‌ கறுப்பு திராட்சை பத்து எடுத்து இரவில் ஊறப் போடவும். காலையில் அந்த‌ நீரையும் குடித்து பழத்தையும் சாப்பிட‌ கொடுங்கள். சரியாகி விடும்

தினமும் காலையில் இளம் சூடான நீர் குடிக்க வைக்கும் போது சரியாகி விடும்.

வாழைப்பழம்,பப்பாளி பழம் கொடுங்கள்.
சூடு பொறுக்குமளவில் பருக சுடுநீர் காலையில் கொடுத்தால் நல்லது.

ஸ்ரீ ஹர்ஷா கவலை படாதிங்கள் டாக்டர் சொல்வது போல் காய்கறிகள் கொடுங்கள் தண்ணீர் அதிகமா குடிக்க கொடுங்கள் வாழை பலம் சாப்பிட கொடுங்கள் வாழை சாப்பிட விரும்பாலான அதை ஹல்வா போல் கிண்டி கொடுங்க ஆரஞ்சும் பாலையும் சேர்த்து சிறிது சக்கரை தூவி கொடுங்கள் இது மலச்சிக்கலை போக்கும் .தினமும் திராட்சை சாறு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் சக்கரை கலந்து கொடுங்கள் மலச்சிக்கலுக்கு பலன் கிடைக்கும் பசலைக்கீரை நல்ல வேகா வச்சு அதை சாப்பாட்டுடன் கலந்து கொடுங்க கவலை படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்

அன்புள்ள‌ ஹர்ஷா கோதுமை மாவு தொடர்பான‌ உணவுகளைத் தவிர்க்கவும். நார்ச்சத்து உள்ள‌ கீரைகள் எல்லாக்கீரைகளும் தரலாம்.
வாழைப்பூ கூட்டு, பக்கோடா, கட்லெட், பொரியல், இரண்டு நாளைக்கு
ஒருமுறை அரைக்கீரை கடைசல், கூட்டு, பொரியல் (கீரைகளை மத்தால் கடையவும். மிக்சியில் அரைக்கவேண்டாம்.) பழங்களை சாத்துக்குடி ஆரஞ்சு இவற்றை அப்ப்டியே சாப்பிடவும், உடல் அதிகமாக‌
சூடானாலும் மலம் கட்டும், இறுகும். மலம் கழிக்கும்போது ஆசனவாய்
கிழிந்து போகும் வாய்ப்பு உண்டு, எனவே தினமும் நெய்சர்க்கரை
சாப்பிடக் கொடுங்கள். விருப்பம் இருந்தால் கடுக்காய் லேகியம்
டாம்காலில் தமிழ் நாடு சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். அதை
வாங்கி இரவில் சின்ன‌ சுண்டைக்காய் அளவு இரவு உணவுக்குப் பின்
படுக்கும்போது உண்ண‌ வைக்கவும், இரண்டு மூன்று நாளிலேயே
குணம் தெரியும். ஒரு நாளைக்கு ஒரு முறை போதும். வீண் பயம் வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

என் பொன்னும் சரியாக மோஷன் போறதில்லை அவளுக்கு California prunes உலர் பழம் கொடுக்கலாமா அம்மா ?

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

உங்களோட பதில்கள் எனக்கு மனசு லேசா இருக்கு ..நீங்கள் சொன்னது போல் செய்கிறேன் .. எனக்கு பதில் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்