சாப்பிட்டத்தில் பிரச்சனை

ஹலோ தோழிகளெ

நான் உணவு சாப்பிட்டவுடன் அது நெஞ்சுக்குள்ளயே இருக்கிறது. காலை சாப்பிடுவதில்லை. மதியம் சாப்பிட்டால் இரவு வரை பசி எடுப்பதில்லை. இரவில் இடையில் பசித்தால் என்ன‌ செய்வதெண்று வேறு வழி இல்லாமல் சாப்பிடுகிறேன். இரவு சாப்பிட்டால் அதுவும் மதியம் வரை நெஞ்சுக்குள்ளயே இருக்கிறது. ஏப்பம் வந்தால் நன்றாக‌ இருக்கும் போல் உள்ளது ஆனால் வருவதில்லை. சோடா, குளிர்பானம் குடிக்க‌ விருப்பமில்லை. என்ன‌ செய்வது தோழிகளே

சோடா, குளிர்பானம் குடிக்க‌ விருப்பமில்லை என்றால் நெஞ்சுக்குள்ளயே இருக்கிறது என்றால் தயிர் சாப்பிட்டுபாருங்கள் தோழி, ஆனால் ஒரிரு நாட்கள் என்றால் சரி , எப்பவும் இப்படி என்றால் நீங்கள் மருத்துவரை அனுகுவது நல்லது.

தினமும் மோர் பெருங்காயம் கலந்து குடிக்கவும். பானகம் (வெல்லம் + எலுமிச்சம் பழச்சாறு + சுக்குப்பொடி + ஏலப்பொடி கலந்த்து)
குடிக்கவும். தற்போது கரும்புச்சாறு கிடைக்கும். அதுவும் குடிக்கலாம்.
நாரத்தங்காய் ஊறுகாய் மிக மிக‌ நல்லது. சுக்குக்காப்பி வெல்லம்
சேர்த்துக் குடிக்கவும். வெல்லம் கலந்த‌ அத்தனை உணவுப் பொருள்களும் வாயுவை வெளியேற்றும். வயிற்றை அடிக்கடி பட்டினி
போடுதல் தவறு. அதனால் வாய்வு வயிற்றில் நிரம்புவதால் பசி இருக்காது முடக்கற்றான் கீரையும் வயிற்றில் நிரம்பிய‌ வாயுவை
வெளியேற்றுவதில் மிக‌ முக்கிய‌ பங்கு வகிக்கிறது. வாரம் ஒருமுறைபயன்படுத்துவது மிகவும் அவசியம்
அன்புடன் பூங்ககோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்க டைம்க்கு சாப்பிடறது இல்ல போல, அப்படி இருந்தாலே நீங்க சொன்ன எல்லா பிராப்ளமும் வரும், டைக் க்கு சாப்பிடுங்க ஃபுல்லா சாப்பிடாம அளவு கம்மியா பிரிச்சி சாப்பிடுங்க, சாப்பிட்டதும் சுடு தண்ணி குடிங்க, சாப்பிட்டு முடித்தபின் கொஞ்சம் சோம்பு சாப்பிடுங்க.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்