பாதாம் கீர்

தேதி: March 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாதாம் பருப்பு - ஒரு கப்
பிஸ்தா பருப்பு - அரை கப்
சீனி - 3/4 கப்
பால் - 6 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 3
கேசரி (கலர்) பவுடர் - 2 சிட்டிகை


 

பருப்பு வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து, அல்லது நன்கு சூடான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்.
ஜூஸ் ஜாரில் பாதாம்பருப்புகளை போட்டு ஒரு கப் பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும்.
ஏலக்காயை இடித்து சிறிது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்து அத்துடன் சேர்க்கவும்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சீனி, கலர் பவுடர், குங்குமப்பூ மற்றும் மீதியுள்ள பால் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வரை கரண்டியால் கலக்கிவிட்டு, பொடியாக நறுக்கிய பிஸ்தாவை அத்துடன் சேர்த்து இறக்கி அப்படியே ஆறவிடவும்.
நன்கு ஆறியவுடன் பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து சில்லென்று பரிமாறவும்.


இனிப்பு சுவை கூடுதலாக தேவைப்படுபவர்கள் சீனியை ஒரு கப் போட்டுக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்