நஞ்சுக்கொடி இறக்கம்

அன்பார்ந்த‌ தோழிகளுக்கு வணக்கம்,

எனக்கு இரண்டாவது ட்ரைமஸ்டர் ஆரம்பித்துள்ளது (13வது வாரம்).. நேற்று அதற்கான‌ ஸ்கேன் செய்தோம். குழந்தை நன்றாக‌ இருக்கிறது, இதயத்துடிப்பு மற்றும் அனைத்து செயல்பாடுகளும் நன்றாகவே இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால், நஞ்சுக்கொடி சற்று கீழ் இறங்கி இருப்பதாகவும் இதனால் குழந்தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றும் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

நஞ்சுக்கொடியானது மேலும் கீழ் இறங்கினால் ப்ளீட் ஆகும் எனவும் கவனமாக‌ இருக்குமாறும் டாக்டர் கூறினார். ஆனால் எனக்கு பயமாக‌ உள்ளது. இது மாதிரி இருக்குமா? இதனால் எந்த‌ மாதிரி பாதிப்பு வரும். இது சரியாகுமா? இதற்காக‌ நான் செய்ய‌ வேண்டும்.. எனக்கு பதில் தாருங்கள் தோழிகளே. உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

Ennaku nenga solramathiri irukan ana na Bangalore iruntha anga 3 month scan pannanga avanga onnum sollala epo chennaila Amma vetla irukan neathu doctor pathom avanga antha scan pathutu kela irukunu sonnanga epo ennaku 5month mudiyapothu 6 month starting oru scan panlam athula theriyum apdinu sonnanga kulantha valara arambuchurukum so Mela poitum solirukanga apram left side patukasonnanga athellam feel pannathinga

ரொம்ப‌ நன்றி பவானி, உங்க பதில் ஆறுதலா இருக்கு. எனக்கு என்ன‌ சந்தேகம்னா 3 மாசத்துலே இது தெரியுமா? இப்பவே அப்படி இருந்தால் போக‌ போக‌ எதும் பிரச்சனை வருமா அதான் பா என் பயம்.

உங்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டில் சரியாக‌ என்ன‌ எழுதியிருந்தது என்று எனக்காக‌ சொல்ல‌ முடியுமா? ப்ளீஸ்

- பிரேமா

Low apdinu iruku but ennaku scan pannathu Bangalore la antha doctor onnum sollala enga chennaila Patha doctor sonnanga .arambathula motion Sariya poga mudiyathu na romba romba kastapattam athanalakuta kela erankirukumam nenga pathu motion ponga.left sidela padunga papaku onnum agathu apdiyea iruntha delivery tha problem agum Papa safe.ana apdiyea irukathu valara valar Mela poitum. na ennum 10 days kaluchu 6 month scan etupan atha pathutu ungaluku solran bleeding agumnu sonnanga ana ennaku epdi ethum Ila ana stomach kaivachju correct ah iruku sonnanga

//rambathula motion Sariya poga mudiyathu na romba romba kastapattam athanalakuta kela erankirukumam // ரொம்ப‌ சரியா சொன்னீங்க‌ பா. நானும் ரொம்ப‌ கஷ்டப்பட்டு தான் போவேன்.. இப்பதான் புரியுது.

//apdiyea iruntha delivery tha problem agum // இது நெட் ல‌ பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். அது கடைசி வர‌ மேல‌ போகலன்னா சீக்கிரமே ஆப்ரேஷன் செய்வாங்கன்னு போட்டுருந்துச்சு பா.

//ana apdiyea irukathu valara valar Mela poitum// இதை தான் நானும் நம்பிட்டு இருக்கேன்.. எப்படியாவது மேலே போய்டனும்.

//6 month scan etupan atha pathutu ungaluku solran // சரி பா. நன்றி

//bleeding agumnu sonnanga ana ennaku epdi ethum Ila// உங்களுக்கும் ப்ளீடிங் ஆகும்னு சொன்னாங்கன்னு சொல்றீங்களா?

- பிரேமா

Hmm ama pa sonnanga but apdilan ila epo ungaluku evlo month.banana kera naraya saptunga

எனக்கு இப்ப 4வது மாதம் ஆரம்பிச்சு 2 நாட்கள் ஆகுது பா.

ரொம்ப‌ பயமா இருக்கு பா. ஒன்னும் ஆகாதுல‌ ??

- பிரேமா

Athellam onnum Ila Vela konjam kammi pannikonga na Bangalore thaniya iruntha nala naraya Vela senjan Waight thukkathinga left side padunga ethoda epo scan sollirukanga

ஏன் பயப்படரீங்க‌ நல்லதே நடக்கும் நீங்க‌ அதை மறந்துடுங்க‌ அதையே நினைக்காதீர்கள்

//Vela konjam kammi pannikonga // அம்மா என் கூட‌ தான் இருக்காங்க‌. நான் எந்த‌ வேலையும் செய்றதில்லை. ஆஃபீஸ்க்கு வரேன் (தினமும் பஸ்சில்). அதான் எதாவது பிரச்சனையா இருக்குமோன்னு தோனுது ..

//left side padunga// நான் தூங்க‌ ஆரம்பிக்கும் போது இடது / வலது பக்கத்துல‌ தான் படுக்கிறேன். ஆனால் எனக்கே தெரியாம‌ நைட்ல‌ நேரா தூங்குகிறேன். என்னால கான்ஷியஸா இருக்க‌ முடியல பா. இனிமேல் இதுல‌ கவனமா இருக்கனும்.

உங்க‌ பதிலுக்கு ரொம்ப‌ நன்றி பா.

- பிரேமா

சரி பா பயப்படல‌. ஆனா அதையே தான் நினைக்க‌ தோனுது.. அதை மறந்துட்டு வேலை பார்க்க‌ ட்ரை பண்றேன். ரொம்ப‌ நன்றி பா

- பிரேமா

மேலும் சில பதிவுகள்