அன்புள்ள பூங்கோதை அம்மா உதவுங்கள்

வணக்கம் அம்மா என் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு பத்து நாள் உள்ளது எடை 7 1/2 கிலோ தான் இருக்கிறாள் என்ன உணவு தருவது அட்டவணை ஒன்று தாருங்கள் நாங்கள் உறவினர்களுடன் இல்லை தாய்பால் கொடுக்கிறேன்.பருப்பு கேரட் உருளை தருகிறேன்.உதவுங்கள் அம்மா

நான் நேற்றே பதிவு செய்தேன். ஆனால் கடைசியில் சேர்க்க‌ என்று
தட்டுவதற்கு முன் மின் தடை ஏற்பட்டதால் பதிவாகவில்லை.
குழந்தை நன்றாக‌ உட்கார‌ முடிந்தால் நீங்கள் உண்ணும் போது பக்கத்தில் தனியாக‌ ஒரு தட்டு வைத்துபருப்பு நெய்கலந்த‌ சாதம் குட்டி
குட்டி உருண்டையாக‌ உருட்டிவைத்து அதன் தலைமேல் காரட், பீட்ரூட், உருளைபொரியல், கீரை கடைந்தது (காரமில்லாமல்), எல்லாக் காய்கறிகளும் காரமில்லாமல் இருந்தால் நல்லது, கையால் எப்படி எடுத்துச் சாப்பிடுவது என்று நீங்கள் சாப்பிட்டுக் காட்டுங்கள். சில நேரத்தில் குழந்தையின் உள்ளங்கையில் உருண்டையை நீங்களே வைத்து உண்ண‌ வையுங்கள். எந்த‌ உணவாயினும் உப்பு காரம் குறைவாகவும் தரும் உணவு எதுவாயினும் முதலில் நீங்கள் வாயில் போட்டு ருசி பார்த்தபின் தருவதுதான் மிகவும் நல்லது, குழந்தையின்
ருசி அறியவும் உணவின் குறை அறியவும் இது மிகவும் உதவும்,
அதிகம் புளிக்காத‌ தயிர் சாதம் கட்டாயம் தரவும். தயிர் மற்ற‌ வகை உணவில் உள்ள‌ விஷ்க் கிருமிகளைக் கொன்றுவிடும் இயல்பு உடையது.
உடல் நலமில்லாத‌ நேரங்களில் பால் உணவினைத் தவிர்ப்பது
நல்லது, பால் சீரணம் ஆகாது, வாந்தி எடுத்து விடுவர். அதனால்
வறுத்த‌ மிளகு,சீரக‌ ரசம் தக்காளி சேர்த்து வைத்து இட்லி, புழுங்கல்
அரிசியை நொய்யாக்கி கெட்டியான‌ கூழ் போல் வைத்து அதில் கலந்து
தரலாம்.
இனி நாம் சாதாரணமாகப் பயன் படுத்தும் சத்துமாவு கஞ்சி,
தினை, வரகு, சாமை,குதிரைவாலி போன்ற‌ சிறுதானியங்களால்
வறுத்து அரைத்த‌ கஞ்சி மாவு,
அடுத்து தற்போது கிடைக்கும் பாரம்பரிய‌ அரிசி வகைகள் சிவப்பு
சிவப்பு புட்டு அரிசி, மாப்பிள்ளைச் சம்பா, குழி வெடிச்சான்,
காட்டு யாணம், கொத்துமல்லிச் சம்பா, கவுனி அரிசி கருப்பு,
சிவப்பு வகைகள், சிவப்பு சோளம் என்று ஏறக்குறைய‌ ஒரு 10
வகைகள் உள்ளன‌. அவற்றைத் தேடிப் பிடித்து வாங்கி சம அளவு
எடுத்து வாசம் வர‌ வறுத்து வீட்டிலேயே அரைத்து வைத்துக்
கொண்டால் நல்லது,
இந்த‌ மூன்று வகை மாவுகளையும் (வறுத்தே அரைக்க‌ வேண்டும்)
முந்திரி பாதாம் பிஸ்தா நிலக்கடலை சேர்த்து அரைக்காமல்
இருப்பது நல்லது, காரணம் பாதாமில் கசப்பு பாதாம் இருக்கும்
அது மிகுந்த‌ வாசம் தரும், ஆனால் மிகுந்த கசப்புச்சுவையுடையது
வேர்க்கடலையில் சொத்தைக்கடலை இருக்க‌ வாய்ப்பு உண்டு.
அதைக் கவனியாமல் விட்டுவிட்டால் மொத்தத்தையும் கெடுப்பது
மட்டும் அல்லாமல் பேதி ஆக‌ 100% வாய்ப்பு உண்டு. எனவே
இவற்றைத் தனியாக‌ பொடி செய்து வைத்துக் கொள்வது நல்லது.
மேற்சொன்ன‌ இந்த‌ மூன்று வகை மாவுகளைக் கொண்டே கஞ்சி,
களி, உப்புமா, இட்லி, முறுக்கு, இடியாப்பம், புட்டு, தோசை,
குழிப்பணியாரம், கொழுக்கட்டை, பல் முளைக்கும் போது கடிக்க‌
உதவும் சீப்பான் என்று அரிசி, கோதுமையில் செய்யும் அத்தனை
உணவு வகைகளையும் செய்யலாம். இனிப்பு, காரம் இரண்டும்
எப்போதாவது வயிற்றுக் கோளாறு ( செரிமானம் இல்லாமல்
பேதி, வயிறு உப்புசம், இரைச்சல், வாந்தி, வலியால் அழுதல்
என்று) இருந்தால் ஓமத்தைக் கருக‌ வறுத்துப் பொடித்து வைத்துக்
கொள்ளவும். அதை மூன்று சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரிலோ
அல்லது தேனிலோ நாளைக்கு மூன்று வேளை, இரண்டு அல்லது
மூன்று நாள் கொடுக்கத் தீரும்.
மேலும் குழந்தைகளுக்கு என்று உள்ள‌ பதிவுகளில் நிறைய‌
உள்ளன‌. அவற்றினைப் படித்துப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

சுக்கு தோல் எடுத்து பயன்படுத்தணும்னு படித்தேன். கடையில் வாங்கும் சுக்கின் தோல் முழுமையாக‌ அகற்றமுடியல‌. நாமே இஞ்சி தோல் எடுத்து காயவைத்து பயன்படுத்துவது சரியான‌ முறையா?

அன்புடன்
ஜெயா

நன்கு முற்றிய‌ இஞ்சியைத் தோலை நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி
நன்கு காயவைத்தால் அது தான் சுக்கு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா மிக மிக நன்றி. அரிசி வகைகள் எல்லாவற்றையும் வறுத்து அரைத்துதால்
போதுமா அம்மா.குழந்தைக்கு சளி. அதிகமாக உள்ளது மூக்கில் கட்டியாக சளி வருகிறது .சிரப் கொடுத்து இருக்கிறேன் சரியாகவில்லை அம்மா. இருமலும் இருக்கிறது அம்மா. என்ன செய்வது,

Badhusangeetha

தாமதமான‌ பதிலுக்கு மன்னிக்கவும். சித்தரத்தை என்று கேட்டால்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காய்ந்த‌ சுக்கு போல‌ சற்று சிவந்த‌ நிறத்தில் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். இதை அளவாக‌ நீரில் இட்டுக் கொதிக்க‌ வைத்து (சுக்குக் காப்பி போல‌) வடித்து குடிக்கும் பாலில் கலந்து குடிக்க‌ வைக்கலாம், அழகான‌ ரோஸ் நிறத்தில் இருக்கும். (ரோஸ் மில்க் என்று கூட‌ சொல்லலாம். நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கவையுங்கள். வாரம் இருமுறை
தரவும். இது செடியாகவும் அரசு நர்சரிகளில் (ஏமாந்தால் பக்கத்து
வீடுகளில் கிடைத்தால் தள்ளிக் கொண்டு வரலாம்) கிடைக்கும், அதை வாங்கி நட்டு வைத்தால் நன்கு வளரும், பல ஆண்டுக்காலம் வள்ரும். அதன் இலைகள்+துளசி+கருப்பு வெற்றிலை+கிடைத்தால் நொச்சி இலை
இவற்றை நன்கு கொதிக்க‌வைத்து குடிக்கவைத்தால் சளி மட்டுமல்ல‌
லேசான‌ சுரம் கூடப் போய்விடும். மஞ்சள் செடி போல‌ இருக்கும். நன்கு வளர்ந்த‌ செடிகள் பக்கவாட்டில் அடுத்து அடுத்து கிளைக்கும்.
மஞ்சள் போலவே அடியோடு பெயர்த்து எடுத்து கிழங்குகளை வெட்டி
எடுத்துப் பயன் படுத்துவர், மிகுந்த‌ மணமுடையது, வெகு அழகான‌
பூக்களையுடையது. நெட்டில் பார்க்கவும். நன்கு விளங்கும்.
குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றும் நாள்களில் குடிக்கவையுங்கள்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma mikka nandri amma

Badhusangeetha

நன்கு முற்றிய‌ இஞ்சியைத் தோலை நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி
நன்கு காயவைத்தால் அது தான் சுக்கு //

ஏன் சுண்ணாம்பு தடவணும்னு தெரிந்துகொள்ள ஆவல். இங்கு சுண்ணாம்பு சிறிய‌ பாககெட்டுகளில் தான் கிடைக்கிறது. அதை பயன் படுத்தலாமா?

அன்புடன்
ஜெயா

வணக்கம் தோழிகளே மன்னா ஹெல்த் மிக்ஸ்ல தானியங்கள் வாங்கி வச்சுருக்கே அத எந்த மாதத்திலிருந்து சத்து மாவு செய்து தரலாம், அதிலுல்ல அனைத்து தானியங்களையும் அரைக்கலாமா இல்லை ஏதெனும் நீக்க வேண்டுமா , அரைத்த சத்து மாவு எவ்வளவு நாள் உபயோகப்படுத்தலாம் ,பூங்கோதை அம்மா நீங்க சொன்ன மாதிரி பாதாம் தனியாக அரைத்து பிறகு சேர்த்துக்கொள்வதா கொஞ்சம் விளக்கம் கொடுங்க தோழிகளே

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மேலும் சில பதிவுகள்