மாமியார் பற்றிய‌ பிரச்சனை

எனக்கு 3 வயது பையன் உள்ளான் நான் வேலைக்கு செல்கிறேன். 6 மாதத்தில் இருந்து மாமனார் பார்த்துக்கொண்டார். அடிக்கடி நான் பார்த்து கொள்ள‌ மாட்டேன் என்று மிரட்டி கொண்டே இருப்பார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை என்றே சொல்லிக்கொன்டு இருப்பார். பிறகு மிகவும் பிரச்சனை செய்து 1 வருடம் பார்த்துக்கொள்ளவே இல்லை. என் கணவர் தான் இரவு வேலைக்கு சென்று பகலில் குழந்தையை பார்த்துக்கொண்டார். 1 வருடம் யாரும் வரவில்லை இப்பொழுது மருபடியும் வந்து சேர்ந்தார்கள். என் மாமியார் வேலை செய்யும் இடத்தில் 50,000 வாங்கி இருப்பதாகவும் அதை கொடுத்து விட்டால் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதை நம்பி நாங்களும் பணம் கொடுத்தோம். கொடுத்து 1 மாதம் கூட‌ ஆகவில்லை. என் மாமியார் தினமும் என் கணவரிடம் நீ எஙளுக்கு என்ன‌ செய்தாய் நான் உன் 50000 திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தினமும் சண்டை போடுகிறார். என் கணவருக்கும் இப்பொழுது தான் நல்ல‌ வேலை கிடைத்து இருக்கிறது. தினமும் 2 பேருக்கும் சண்டை தான். என் மாமனாரிடம் சொன்னால் எனக்கு தெரியாது என்று ஒதுங்கி கொண்டார் என்ன‌ செய்வதென்றே புரியவில்லை

தோழி உங்கள் நிலைமை எனக்கு நன்றாக புரிகிறது அனால் இதற்க்கு என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை உங்க சூழ்நிலையில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சொல்லுகிறேன் நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து உங்கள் மாமியாரிடம் உக்கார வைத்து அன்பாக பக்குவமாக பொறுமையா அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அவர்களுக்கு நம்பிக்கை வரும்படி பேசுங்கள் அவர்களிடம் உங்களுக்காக நங்கள் இருக்கோம் இது உங்கள் பேரன் அப்படி இப்படினு அன்பாக கனிவாக பேசி பாருங்கள் லீவு கடைக்கும் நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து வெளிய போயிட்டு வாருங்கள் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் தோழி இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும் தோழி

கீதா நானும் உஙகள் நிலைமையில் தான் சிரம பட்டு இப்போதுதான் சந்தோசமாக உல்லோம்,குலந்தைக்கு 3 வயதுக்கு மேல் ஆகிறது அல்லவா இந்த வருடம் அருகில் உல்ல பள்ளியில் சேர்த்து விடுங்கள் 4.00 மனி வரை பள்ளியில் இருப்பான், அதன் பின் மாமனாரை பார்த்துக்கொல்ல சொல்லுங்கள்,முடியாது என்றால் அருகில் ஏதேனும் தெரிந்தவர்,நன்பர்கள் வீட்டில் 6 பார்த்துக்கொல்ல‌ சொல்லுங்கல் குலந்தைக்கு வேன்டிய உனவு உடை கொடுத்து விட்டு செல்லுங்கல்,
ஆமாம் உங்கலுக்கு பணி எப்போது முடியும்,அதிக நேரம் என்றால் குரைத்து கொன்டு குலந்தையை பாருங்கள்,எவர் உதவிவும் இல்லாமல் கூட இருக்கலாம்.

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

//6 மாதத்தில் இருந்து மாமனார் பார்த்துக்கொண்டார்.// அது பெரிய விடயம் இல்லையா! //அடிக்கடி நான் பார்த்து கொள்ள‌ மாட்டேன் என்று மிரட்டி கொண்டே இருப்பார்.// :-) அது மிரட்டல் என்று எடுக்க வேண்டாம். உண்மையில் ஒரு ஆண் தனியாக 6 மாதக் குழந்தையைக் கவனிப்பது... எங்கள் ஆண்களைப் பொறுத்த வரை சுலபமான விடயம் அல்ல. தன் சிரமத்தைச் சொல்லியிருப்பார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

//எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை என்றே சொல்லிக்கொன்டு இருப்பார்.// கர்ர்.. ;) பணம் கொடுத்து மற்றவர்களை வழிக்குக் கொண்டு வர நினைப்பது சரியல்ல. அன்பால் ஆக வேண்டும் எதுவானாலும். இழைத் தலைப்பு, 'மாமியார் பற்றிய பிரச்சினை' என்று இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எனக்கு இது, 'பணம் பற்றிய பிரச்சினையாக' மட்டும் தான் தெரிகிறது.

//என் கணவர் தான் இரவு வேலைக்கு சென்று பகலில் குழந்தையை பார்த்துக்கொண்டார்.// 'தான்' எல்லாம் வேண்டாம். குழந்தைக்கு அவர் தந்தை. பார்த்துத் தான் ஆக வேண்டும். அவரது கடமை அது. பெருமையாக வேண்டுமானால் சொல்லலாமே தவிர, சலித்துக் கொண்டு சொல்ல வேண்டிய விடயம் அல்ல இது.

//என் மாமியார் வேலை செய்யும் இடத்தில் 50,000 வாங்கி இருப்பதாகவும் அதை கொடுத்து விட்டால் வீட்டிலேயே இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வார் என்றும் சொன்னார். அதை நம்பி நாங்களும் பணம் கொடுத்தோம். கொடுத்து 1 மாதம் கூட‌ ஆகவில்லை. என் மாமியார் தினமும் என் கணவரிடம் நீ எஙளுக்கு என்ன‌ செய்தாய் நான் உன் 50000 திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தினமும் சண்டை போடுகிறார்.// நீங்கள் பணத்தை வைத்து ஆளை ஆள் கைக்குள் போட நினைக்கிறீர்கள். ;( இது ஆரோக்கியமான விடயம் அல்லவே!

//என்ன‌ செய்வதென்றே புரியவில்லை// பிரியா பிரபு சொன்னது தான் சரியான தீர்வு. //எவர் உதவிவும் இல்லாமல் கூட இருக்கலாம்.// என்று நான் சொன்னால்... உங்கள் நிலையில் நான் இல்லை; புரியாமல் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தோன்றும். உங்கள் நிலையில் உள்ள இன்னொரு சகோதரி ஆலோசனை சொல்கிறார். எடுத்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

அருமையான பதில் பிரியா. சிரமம் என்று நினைக்காமல் தமிழில் தட்டி இருப்பது... பிடித்திருக்கிறது. மழலையை ரசித்தேன். :-)

//பார்த்துக்கொல்ல‌ சொல்லுங்கல்// பார்த்துக்கொ..ள்ள என்று வரும். 'ல்ல' போட்டால் அர்த்தம் வேறு.
அதே போல, //குரைத்து கொன்டு குலந்தையை பாருங்கள்// குரைத்து அல்ல - கு..றை..த்து.

மீதி மழலை பிரச்சினை இல்லை. தமிழை விடாமல் தொடருங்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்