எனக்கு வெகு சிறிய வயதில் குக்கல் வந்தது நினைவு இருக்கிறது. அது மட்டும் தான் அந்த வயசுக் காலத்தைய நினைவு. :-) மூன்று வயசு இருக்கும். பயங்கர இருமல். பிடிச்சு அழ அழ மருந்து கொடுப்பாங்க. கூடவே மீன் எண்ணெயும் கொடுத்ததாக நினைவு. அதுக்குப் பிறகு சமாதானப்படுத்த ஒரு குட்டி சாக்லெட் கொடுப்பாங்க செபா. :-) இது 1966 கதை. இப்போ நல்ல மருந்துகள் இருக்கும்.
~~~~~
ஆரம்பத்தில் சாதாரண இருமல் / தடிமல் போல் தான் ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு விதமாக தொண்டையைப் பிடுங்குமாப் போல் சத்தம் வரும். அதனால் தான் குக்கல் / whoopng caugh என்பது. இருமலைக் கேட்கும் போது பெயர்க் காரணம் சரிதான் என்ன்பது புரியும். :-) கக்குவான் - உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கக்கி விடுவார்களோ என்று தோன்றும். அப்படி ஒரு இருமல் சத்தம் வரும்.
மருத்துவரிடம் போங்க. குக்கல் என்று சந்தேகித்தால் swab எடுத்து லாபுக்கு அனுப்புவார்கள். முடிவை வைத்து சிகிச்சை கொடுப்பார்கள்.
இருமல் இருந்தால் குக்கலாகத் தான் இருக்கும் என்பது இல்லை. எனக்கு வீசிங் மோசமாக இருக்கும் போது பயங்கரமாக இருமுவேன். என் குடும்ப வைத்தியர் விடுமுறையில் சென்றிருந்த 2 சந்தர்ப்பங்களில் பார்த்த மருத்துவர்கள் குக்கல் என்று சந்தேகித்தார்கள். தவிர்க்க முடியாமல் மூக்கைக் காட்டினேன். ரிப்போர்ட், 'ஒன்றும் இல்லை,' என்றே தான் வந்தது.
ஒரு வயது குழந்தை சாதாரண சளி பிடித்து இப்போ இருமல். மருத்துவர் பார்த்து பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்று சொல்லி மாத்திரை கொடுத்தாங்க. இப்போது இருமல் மிக கடுமையா இருக்கு. இருமும்போது முகம், தலையெல்லாம் சிவந்து போகிறது. மூச்சுவிட சிரமப்பட்டு இழுத்து இழுத்து இருமுகிறான் (புரியும்படி சொல்கிறேனா?). அந்த நேரம் மிகவும் சோர்ந்து போகிறான். இது அடிக்கடி நேர்வதால், உறக்கம் சரிவர இல்லை. மற்றபடி active-ஆக இருக்கிறான். இது ஒருவேளை கக்குவான் இருமலாக இருக்குமோவென்று சந்தேகம். இருமும்போது சளி தொண்டைவரை வருகிறது; விழுங்கி விடுகிறான். ஆனால் அவன் ஒருமுறை கூட கக்கவில்லை.
whoopng caugh என்று கூகுள் செய்து பாருங்கள்.// பார்க்கிறேன்
சும்மா இருமலே பொறுக்கக் கஷ்டம் தானே! சளி இருக்கிறது என்கிறீர்கள். இன்னொரு முறை காட்டிப் பார்க்கலாம். ஏற்கனவே ஆன்டிபயோடிக் கொடுக்காமலிருந்திருந்தால் இப்போ கொடுக்கக் கூடும். ஆவி பிடிக்க முடியுமா? முடிந்தால் நல்லது. கொஞ்சம் சளியை இளக்கி விடும். இருமல் இலகுவாகும். //ஒருமுறை கூட கக்கவில்லை.// நான் சொன்ன விதத்தில் கக்குவார்கள் என்று நினைத்துவிட்டீர்களா? இருமல் அத்தனை தீவிரமாக இருக்கும். அதைத் தான் சொல்ல வந்தேன்.
குழந்தையை மருத்துவரிடம் காட்டினோம். பார்த்துவிட்டு (இருமலை கேட்டுவிட்டு)
"whoopng caugh மாதிரிதான் இருக்கு. நானே இதை பார்த்தது இல்லை. vaccine போடாததால்தான் இப்படி வந்திருக்கு. என்ன சொல்லண்ணு தெரியல. 5 நாட்கள் இந்த சிரப் கொடுத்துட்டு வாங்க. பார்க்கலாம்" என்று சொன்னார்.
இங்கு இந்த நோய் இப்போது இல்லை என்பது போல் சொன்னார். என்ன செய்யலாம்னு தெரியவில்லை. இது தொற்று நோய் என்று இருக்கு. vaccine போட்ட குழந்தைகளுக்கு ( & போடாத பெரியவர்களுக்கும்) தொற்றுமா?
//"whoopng caugh மாதிரிதான் இருக்கு. நானே இதை பார்த்தது இல்லை.// :-) ஆமாம், இதுதான் சந்தேகத்துக்கும் காரணம்; நிச்சயம் சொல்ல முடியாமல் இருப்பதற்கும் காரணம். ஆனால் லாப் டெஸ்ட்ஸ் செய்து பார்த்தால் உண்மை தெரியும்.
//சிரப்// cough mixture கொஞ்சம் இலகுவாக்கலாம்.
//இங்கு இந்த நோய் இப்போது இல்லை// இங்கும் இல்லை. ஆனால் வேறு நாடுகளிலிருந்து மனிதர் போக்குவரத்து இருக்கிறதே! அதனால் வராது என்று நிச்சயம் சொல்ல முடியாது. இங்கேயே சந்தேகித்து சோதித்துப் பார்க்கிறார்களே! அப்படியானால் திரும்ப வரலாம் என்பதாகத் தானே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
//என்ன செய்யலாம்னு தெரியவில்லை. இது தொற்றும் நோயா?// சாதாரண தடிமல் இருமல் கூட தொற்றுவதுதானே! இருமலைக் குறைக்க சாதாரணமாக என்ன செய்வீர்களோ அதைச் செய்யலாம். நிறையக் குடிக்கக் கொடுங்க. எந்த விதமான இருமலாக இருந்தாலும் ஆவி பிடிப்பது இலகுவாக்கும்.
//இது தொற்று நோய் என்று இருக்கு.// ஆமாம்.
//போடாத பெரியவர்களுக்கும்// அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்து, தொற்றலாம். பெரியவர்களும் வாக்ஸீன் எடுக்கலாம்.
குழந்தைகளாக இருக்கும் போது வாக்சீன் கொடுத்தாலும் 11, 12 வயதான பின் தொற்றலாம் என்று தெரிகிறது.
//கக்குவான் இருமலுக்கு கைவைத்தியம் ஏதேனும் உள்ளதா?// இந்தப் பகுதிக் கேள்வியை பூங்கோதைக்கு விட்டுவிடுகிறேன்.
முதலில்... உங்கள் குழந்தைக்கு கக்குவான் தான் என்பதை நிச்சயம் செய்ய ப்ளட் டெஸ்ட், கல்ச்சர் அல்லது ஸ்கான் செய்தீர்களா? செய்யவது அவசியம். பிறகு மருத்துவர் சிகிச்சையை தேவைக்கு ஏற்படி கொடுப்பார்.
//என்னெல்லாம் செய்யக்கூடாது// மூக்கு / வாயை மூடாமல் தும்ம இருமக் கூடாது. கிண்ணங்கள், துவாலைகளை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம். குழந்தையைப் பராமரித்த பின் கை கழுவாமல் விடக் கூடாது. பொதுவான ஆரோக்கியப் பழக்கங்கள் தான் இவை.
//சாப்பிடக்கூடாது?// இருமலை அதிகரிப்பதாகத் தெரிபவற்றைத் தவிர்க்கலாம். மற்றப்படி எதையும் தவிர்க்க வேண்டியது இல்லை.
நன்றி இமா. //வேறு நாடுகளிலிருந்து மனிதர் போக்குவரத்து இருக்கிறதே! // இவர்கள் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஜனுவரியில் இந்தியா திரும்பினார்கள். அப்போழ்திலிருந்து, சாதாரண சளியாக இருந்தது. அதுதான் whooping cough ல் கொண்டு விட்டது போலும்.
மருத்துவர் டெஸ்ட் எதுவும் எடுக்க சொல்லவில்லை. சில சமயங்களில் வாந்தியும் இருக்கு.
//ஆவி பிடிப்பது // 1 வயது குழந்தையாயிற்றே. என்ன போடணும்? எப்படி பிடிக்கவைப்பது?
//இந்தப் பகுதிக் கேள்வியை பூங்கோதைக்கு விட்டுவிடுகிறேன்.// அவங்க ஆலோசனைக்கு நானும் காத்திருக்கேன்.
அவனுடைய இருமலைப் பார்த்து மனம் சோர்ந்து போகிறது. உங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி இமா.
ஒரு வயதுக் குழந்தைக்கு சளி இருமல் >> மிகவும் மென்மையாகக் கையாள வேண்டிய விஷயம், ஆவி பிடித்தால்
சிறு குழந்தை தாங்காது, முகம் ஆவி தாங்காது , சற்றே தடுமாறினாலும் தோல் வெந்து விடும்.
வெளியாகும் சளியைத் துப்பத் தெரியாமையால் மீண்டும் விழுங்கி விடுவார்கள்.
நாட்டு மருந்து அல்லது வீட்டு மருந்து இரண்டும் ஒன்று தான்,
1, சித்தரத்தை மெரூன் கலரில் சுக்கு போலவே இருக்கும். இதை
வாங்கி இடிக்கவேண்டும், தூளாகும், அதை ஒரு டீஸ்பூன்
அள்வு ஒரு டம்ளர் 200 ஒரு ஆழாக்கு நீரில் போட்டு கொதிக்க
விடவும். அழகான ரோசாப்பூ நிறத்தில் நல்ல மணத்தோடு
தீ நீர் கிடைக்கும், அதனோடு பாலும் வெல்லமும் சேர்த்துக்
குடிக்கவையுங்கள், (ரோஸ் மில்க் போல இருக்கும்.) இதை
குறைந்தது ஒரு நாளைக்கு நான்கைந்து முறை தரலாம்.
இருமல் குறைந்து கொண்டே வரும். சளியும் வெளியாகும்
வேண்டுமானால் மிளகு நான்கு (மிளகு > இருமலை நீக்கும்,
சளியை வெளியேற்றும், சுர நிவாரணி, விஷத்தை முறிக்கும்)
சித்தரத்தை பொடியாகவும் கிடைக்கும்.
2. குப்பைமேனிக்கீரை இது பொடியாகவும் கிடைக்கும். இதை
அரைக்கீரை அல்லது முளைக்கீரையோடு சேர்த்து தக்காளி
பூண்டு, சேர்த்து சூப்பாக வைத்து வறுத்த மிளகு சீரகத்தூள்
சேர்த்து வடிகட்டிக் குடிக்கவைக்கவும். வேறு கீரைகள்
வேண்டாம், முருங்கைக்கீரையைச் சேர்க்கலாம். முருங்கைக்
கீரையோடு சுண்ணாம்பும் சேர்த்துக் கசக்கிச் சாறு எடுத்து
நெஞ்சில் தடவுவார்கள். சளி கரையும். சிறு குழந்தைதாங்காது
குப்பைமேனி சளியைக் கரைப்பதோடு வாந்தியாகவும்.
மலத்தின் மூலமாகவும் தொல்லையில்லாமல் வெளியேற்றும்.
கூடவே குடல் பூச்சிகளையும் சத்தமில்லாமல் கொன்று
மலத்தின் மூலமாக வெளியேற்றும்.
3. பப்பாளியை எப்படி உணவாக எடுத்துக் கொண்டாலும்
ஆஸ்த்துமாவையே விரட்டி விடும் தொடர்ந்து உண்டால்
ஆஸ்த்துமா காணாமலேயே போய் விடுகிறது.ஈஸ்னோஃபீலியா
இதுவும் குறைந்து குறைந்து போய் விடுகிறது. அனுபவம்.
கொஞ்சம் சூடு,
4. நொச்சி இலை கிடைத்தால் வெந்நீரில் போட்டு கொதிக்க
வைத்து குளிப்பாட்டவும், சளி, சுரம், உடல் வலி இவற்றுக்கு
நல்ல மருந்து. நொச்சிக் கொழுந்து, துளசி, தூதுவளை,
நல்ல மிளகு, கறுப்பு வெற்றிலை இவற்றைக் கொதிக்கவிட்டு
வடிகட்டி இனிப்பு சேர்த்து குடிக்க வைக்க சுரம்,சளி போகும்.
வெற்றிலை மிகச் சிறந்த மருந்து.
அதிமதுரம் என்ற பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி
அதை கால் டீஸ்பூன் அளவு தேனில் குழைத்து நாக்கில்
தடவி விடவும். அசட்டுத் தித்திப்பாக இருக்கும், இருமல்
நிற்கும் வரை தாராளமாகத் தரலாம்.
முடிந்தால் சித்தரத்தை செடியை நர்சரியில் வாங்கி வீட்டில்
தொட்டியில் வைத்து வளர்க்கலாம், அதன் இலைகளை
மேற்சொன்ன மருந்துகளோடு தீனீராக்கித் தரலாம்,
5, ஓமியோபதியில் EUPHRASIA OFFICINALIS 200 X என்று கேட்டு
வாங்கவும், இரண்டு திராம் என்று கேட்கவும்.இரண்டு
வாரத்திற்கு என்று வாங்கவும். குறைந்தது 100 உருண்டைகள்
இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் போதும்.
தித்திப்பாக இருக்கும் குழ்ந்தையின் அடி நாக்கில் வைக்கவும்
தானாகக் கரைந்து விடும், எந்தத் தொல்லையும் இன்றி
நெஞ்சில் உறைந்துள்ள சளி முழுமையாக வலியின்றி தானாக
துப்பவைத்து விடும். சளி போனதும் நிறுத்தி விடவும்.
இந்த மருந்து, சளி, சுரம், மெட்ராஸ் ஐ என்ப்படும் கண்வலி,
கண் வீக்கம், பொங்கிப்போதல் இவற்றிக்கு மிகச் சிறந்த
மருந்து, நம்பிக்கை இருந்தால் வாங்கிப்பயன் படுத்தவும்.
தெளிவிற்கு ஓமியோபதி வெப் சைட்டில் பார்க்கவும்.
இதே அறுசுவையில் செல்லப் பிராணிகளுக்கு சில
ஓமியோபதி மருந்துகளில் சில குறிப்புகள் தந்துள்ளேன்.
மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் மருந்து ஒன்றே தான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
நன்றி, மிக்க நன்றி. //ஓமியோபதியில் EUPHRASIA OFFICINALIS 200 X என்று கேட்டு வாங்கவும், இரண்டு திராம் என்று கேட்கவும். // இது எங்கு கிடைக்கும். Prescription இல்லாம கேட்டால் தருவார்களா?
//வேண்டுமானால் மிளகு நான்கு// சித்தரத்தையுடன் பொடித்துச் சேர்க்க வேண்டுமா? வெல்லத்திற்கு பதில் பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாமா?
ஒரு வயது குழந்தை. EUPHRASIA OFFICINALIS 200 X பயன்படுத்தும்போது சித்தரத்தையும் பயன்படுத்தலாமா? கக்குவான் இருமலும் கட்டுப்படுமா?
இது பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லையாதலால், பயந்து கேட்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள், தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
குக்கல்

whoopng caugh என்று கூகுள செய்து பாருங்கள்.
- இமா க்றிஸ்
கக்குவான் இருமல்
ஒரு வயது குழந்தை சாதாரண சளி பிடித்து இப்போ இருமல். மருத்துவர் பார்த்து பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்று சொல்லி மாத்திரை கொடுத்தாங்க. இப்போது இருமல் மிக கடுமையா இருக்கு. இருமும்போது முகம், தலையெல்லாம் சிவந்து போகிறது. மூச்சுவிட சிரமப்பட்டு இழுத்து இழுத்து இருமுகிறான் (புரியும்படி சொல்கிறேனா?). அந்த நேரம் மிகவும் சோர்ந்து போகிறான். இது அடிக்கடி நேர்வதால், உறக்கம் சரிவர இல்லை. மற்றபடி active-ஆக இருக்கிறான். இது ஒருவேளை கக்குவான் இருமலாக இருக்குமோவென்று சந்தேகம். இருமும்போது சளி தொண்டைவரை வருகிறது; விழுங்கி விடுகிறான். ஆனால் அவன் ஒருமுறை கூட கக்கவில்லை.
whoopng caugh என்று கூகுள் செய்து பாருங்கள்.// பார்க்கிறேன்
அன்புடன்
ஜெயா
கக்குவான்
சும்மா இருமலே பொறுக்கக் கஷ்டம் தானே! சளி இருக்கிறது என்கிறீர்கள். இன்னொரு முறை காட்டிப் பார்க்கலாம். ஏற்கனவே ஆன்டிபயோடிக் கொடுக்காமலிருந்திருந்தால் இப்போ கொடுக்கக் கூடும். ஆவி பிடிக்க முடியுமா? முடிந்தால் நல்லது. கொஞ்சம் சளியை இளக்கி விடும். இருமல் இலகுவாகும். //ஒருமுறை கூட கக்கவில்லை.// நான் சொன்ன விதத்தில் கக்குவார்கள் என்று நினைத்துவிட்டீர்களா? இருமல் அத்தனை தீவிரமாக இருக்கும். அதைத் தான் சொல்ல வந்தேன்.
- இமா க்றிஸ்
குக்கல் என்னும் கக்குவான்
அன்பு இமா,
குழந்தையை மருத்துவரிடம் காட்டினோம். பார்த்துவிட்டு (இருமலை கேட்டுவிட்டு)
"whoopng caugh மாதிரிதான் இருக்கு. நானே இதை பார்த்தது இல்லை. vaccine போடாததால்தான் இப்படி வந்திருக்கு. என்ன சொல்லண்ணு தெரியல. 5 நாட்கள் இந்த சிரப் கொடுத்துட்டு வாங்க. பார்க்கலாம்" என்று சொன்னார்.
இங்கு இந்த நோய் இப்போது இல்லை என்பது போல் சொன்னார். என்ன செய்யலாம்னு தெரியவில்லை. இது தொற்று நோய் என்று இருக்கு. vaccine போட்ட குழந்தைகளுக்கு ( & போடாத பெரியவர்களுக்கும்) தொற்றுமா?
அன்புடன்
ஜெயா
அன்பு இமா / பூங்கோதை
அன்பு இமா / பூங்கோதை,
கக்குவான் இருமலுக்கு கைவைத்தியம் ஏதேனும் உள்ளதா? என்னெல்லாம் செய்யக்கூடாது / சாப்பிடக்கூடாது? என்பன போன்ற விவரங்கள் தெரிந்தால் சொல்லவும்.
அன்புடன்
ஜெயா
கக்குவான்
//"whoopng caugh மாதிரிதான் இருக்கு. நானே இதை பார்த்தது இல்லை.// :-) ஆமாம், இதுதான் சந்தேகத்துக்கும் காரணம்; நிச்சயம் சொல்ல முடியாமல் இருப்பதற்கும் காரணம். ஆனால் லாப் டெஸ்ட்ஸ் செய்து பார்த்தால் உண்மை தெரியும்.
//சிரப்// cough mixture கொஞ்சம் இலகுவாக்கலாம்.
//இங்கு இந்த நோய் இப்போது இல்லை// இங்கும் இல்லை. ஆனால் வேறு நாடுகளிலிருந்து மனிதர் போக்குவரத்து இருக்கிறதே! அதனால் வராது என்று நிச்சயம் சொல்ல முடியாது. இங்கேயே சந்தேகித்து சோதித்துப் பார்க்கிறார்களே! அப்படியானால் திரும்ப வரலாம் என்பதாகத் தானே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
//என்ன செய்யலாம்னு தெரியவில்லை. இது தொற்றும் நோயா?// சாதாரண தடிமல் இருமல் கூட தொற்றுவதுதானே! இருமலைக் குறைக்க சாதாரணமாக என்ன செய்வீர்களோ அதைச் செய்யலாம். நிறையக் குடிக்கக் கொடுங்க. எந்த விதமான இருமலாக இருந்தாலும் ஆவி பிடிப்பது இலகுவாக்கும்.
//இது தொற்று நோய் என்று இருக்கு.// ஆமாம்.
//போடாத பெரியவர்களுக்கும்// அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்து, தொற்றலாம். பெரியவர்களும் வாக்ஸீன் எடுக்கலாம்.
குழந்தைகளாக இருக்கும் போது வாக்சீன் கொடுத்தாலும் 11, 12 வயதான பின் தொற்றலாம் என்று தெரிகிறது.
- இமா க்றிஸ்
கக்குவான்
//கக்குவான் இருமலுக்கு கைவைத்தியம் ஏதேனும் உள்ளதா?// இந்தப் பகுதிக் கேள்வியை பூங்கோதைக்கு விட்டுவிடுகிறேன்.
முதலில்... உங்கள் குழந்தைக்கு கக்குவான் தான் என்பதை நிச்சயம் செய்ய ப்ளட் டெஸ்ட், கல்ச்சர் அல்லது ஸ்கான் செய்தீர்களா? செய்யவது அவசியம். பிறகு மருத்துவர் சிகிச்சையை தேவைக்கு ஏற்படி கொடுப்பார்.
//என்னெல்லாம் செய்யக்கூடாது// மூக்கு / வாயை மூடாமல் தும்ம இருமக் கூடாது. கிண்ணங்கள், துவாலைகளை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாம். குழந்தையைப் பராமரித்த பின் கை கழுவாமல் விடக் கூடாது. பொதுவான ஆரோக்கியப் பழக்கங்கள் தான் இவை.
//சாப்பிடக்கூடாது?// இருமலை அதிகரிப்பதாகத் தெரிபவற்றைத் தவிர்க்கலாம். மற்றப்படி எதையும் தவிர்க்க வேண்டியது இல்லை.
- இமா க்றிஸ்
பூங்கோதையின் ஆலோசனை தேவை
நன்றி இமா. //வேறு நாடுகளிலிருந்து மனிதர் போக்குவரத்து இருக்கிறதே! // இவர்கள் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று ஜனுவரியில் இந்தியா திரும்பினார்கள். அப்போழ்திலிருந்து, சாதாரண சளியாக இருந்தது. அதுதான் whooping cough ல் கொண்டு விட்டது போலும்.
மருத்துவர் டெஸ்ட் எதுவும் எடுக்க சொல்லவில்லை. சில சமயங்களில் வாந்தியும் இருக்கு.
//ஆவி பிடிப்பது // 1 வயது குழந்தையாயிற்றே. என்ன போடணும்? எப்படி பிடிக்கவைப்பது?
//இந்தப் பகுதிக் கேள்வியை பூங்கோதைக்கு விட்டுவிடுகிறேன்.// அவங்க ஆலோசனைக்கு நானும் காத்திருக்கேன்.
அவனுடைய இருமலைப் பார்த்து மனம் சோர்ந்து போகிறது. உங்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி இமா.
அன்புடன்
ஜெயா
அன்புள்ள ஜெயா அவர்களுக்கு
ஒரு வயதுக் குழந்தைக்கு சளி இருமல் >> மிகவும் மென்மையாகக் கையாள வேண்டிய விஷயம், ஆவி பிடித்தால்
சிறு குழந்தை தாங்காது, முகம் ஆவி தாங்காது , சற்றே தடுமாறினாலும் தோல் வெந்து விடும்.
வெளியாகும் சளியைத் துப்பத் தெரியாமையால் மீண்டும் விழுங்கி விடுவார்கள்.
நாட்டு மருந்து அல்லது வீட்டு மருந்து இரண்டும் ஒன்று தான்,
1, சித்தரத்தை மெரூன் கலரில் சுக்கு போலவே இருக்கும். இதை
வாங்கி இடிக்கவேண்டும், தூளாகும், அதை ஒரு டீஸ்பூன்
அள்வு ஒரு டம்ளர் 200 ஒரு ஆழாக்கு நீரில் போட்டு கொதிக்க
விடவும். அழகான ரோசாப்பூ நிறத்தில் நல்ல மணத்தோடு
தீ நீர் கிடைக்கும், அதனோடு பாலும் வெல்லமும் சேர்த்துக்
குடிக்கவையுங்கள், (ரோஸ் மில்க் போல இருக்கும்.) இதை
குறைந்தது ஒரு நாளைக்கு நான்கைந்து முறை தரலாம்.
இருமல் குறைந்து கொண்டே வரும். சளியும் வெளியாகும்
வேண்டுமானால் மிளகு நான்கு (மிளகு > இருமலை நீக்கும்,
சளியை வெளியேற்றும், சுர நிவாரணி, விஷத்தை முறிக்கும்)
சித்தரத்தை பொடியாகவும் கிடைக்கும்.
2. குப்பைமேனிக்கீரை இது பொடியாகவும் கிடைக்கும். இதை
அரைக்கீரை அல்லது முளைக்கீரையோடு சேர்த்து தக்காளி
பூண்டு, சேர்த்து சூப்பாக வைத்து வறுத்த மிளகு சீரகத்தூள்
சேர்த்து வடிகட்டிக் குடிக்கவைக்கவும். வேறு கீரைகள்
வேண்டாம், முருங்கைக்கீரையைச் சேர்க்கலாம். முருங்கைக்
கீரையோடு சுண்ணாம்பும் சேர்த்துக் கசக்கிச் சாறு எடுத்து
நெஞ்சில் தடவுவார்கள். சளி கரையும். சிறு குழந்தைதாங்காது
குப்பைமேனி சளியைக் கரைப்பதோடு வாந்தியாகவும்.
மலத்தின் மூலமாகவும் தொல்லையில்லாமல் வெளியேற்றும்.
கூடவே குடல் பூச்சிகளையும் சத்தமில்லாமல் கொன்று
மலத்தின் மூலமாக வெளியேற்றும்.
3. பப்பாளியை எப்படி உணவாக எடுத்துக் கொண்டாலும்
ஆஸ்த்துமாவையே விரட்டி விடும் தொடர்ந்து உண்டால்
ஆஸ்த்துமா காணாமலேயே போய் விடுகிறது.ஈஸ்னோஃபீலியா
இதுவும் குறைந்து குறைந்து போய் விடுகிறது. அனுபவம்.
கொஞ்சம் சூடு,
4. நொச்சி இலை கிடைத்தால் வெந்நீரில் போட்டு கொதிக்க
வைத்து குளிப்பாட்டவும், சளி, சுரம், உடல் வலி இவற்றுக்கு
நல்ல மருந்து. நொச்சிக் கொழுந்து, துளசி, தூதுவளை,
நல்ல மிளகு, கறுப்பு வெற்றிலை இவற்றைக் கொதிக்கவிட்டு
வடிகட்டி இனிப்பு சேர்த்து குடிக்க வைக்க சுரம்,சளி போகும்.
வெற்றிலை மிகச் சிறந்த மருந்து.
அதிமதுரம் என்ற பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி
அதை கால் டீஸ்பூன் அளவு தேனில் குழைத்து நாக்கில்
தடவி விடவும். அசட்டுத் தித்திப்பாக இருக்கும், இருமல்
நிற்கும் வரை தாராளமாகத் தரலாம்.
முடிந்தால் சித்தரத்தை செடியை நர்சரியில் வாங்கி வீட்டில்
தொட்டியில் வைத்து வளர்க்கலாம், அதன் இலைகளை
மேற்சொன்ன மருந்துகளோடு தீனீராக்கித் தரலாம்,
5, ஓமியோபதியில் EUPHRASIA OFFICINALIS 200 X என்று கேட்டு
வாங்கவும், இரண்டு திராம் என்று கேட்கவும்.இரண்டு
வாரத்திற்கு என்று வாங்கவும். குறைந்தது 100 உருண்டைகள்
இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் போதும்.
தித்திப்பாக இருக்கும் குழ்ந்தையின் அடி நாக்கில் வைக்கவும்
தானாகக் கரைந்து விடும், எந்தத் தொல்லையும் இன்றி
நெஞ்சில் உறைந்துள்ள சளி முழுமையாக வலியின்றி தானாக
துப்பவைத்து விடும். சளி போனதும் நிறுத்தி விடவும்.
இந்த மருந்து, சளி, சுரம், மெட்ராஸ் ஐ என்ப்படும் கண்வலி,
கண் வீக்கம், பொங்கிப்போதல் இவற்றிக்கு மிகச் சிறந்த
மருந்து, நம்பிக்கை இருந்தால் வாங்கிப்பயன் படுத்தவும்.
தெளிவிற்கு ஓமியோபதி வெப் சைட்டில் பார்க்கவும்.
இதே அறுசுவையில் செல்லப் பிராணிகளுக்கு சில
ஓமியோபதி மருந்துகளில் சில குறிப்புகள் தந்துள்ளேன்.
மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் மருந்து ஒன்றே தான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
மிக்க நன்றி பூங்கோதை