கக்குவான் இருமல்

கக்குவான் இருமல் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கு மருத்துவம் இருக்கா?

அன்புடன்
ஜெயா

நீங்கள் எந்த‌ ஊரில் இருக்கிறீர்கள். பொதுவாக‌ அரசு பொது மருத்துவ‌
மனைகள் அனைத்திலும் ஓமியோபதிக்கு என்று ஒரு தனிப் பிரிவே
இருக்கிறது. நீங்கள் பயமில்லாமல் அங்கேயும் காட்டலாம், எனது
நண்பரும் அரசு பொதுமருத்துவமனையில் தான் மருத்துவராக‌ உள்ளார். இருமல் தொடர்பான‌ அனைத்து பரிசோதனைகளையும் அங்கேயே
செய்து தெளிவும் பெறலாம். ஓமியோபதி ஜெர்மன் நாட்டு மருத்துவ‌
முறை. இராணுவத்திலும் ஓமியோபதி மருத்துவர்கள் உண்டு.
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு மருத்துவம் இது தான் என்பது என்கருத்து.
எங்கள் வீட்டில் 1984 முதல் எலும்பு முறிவு வரை எல்லாவற்றிக்கும்
ஓமியோபதீ மருத்துவம் தான், நான் பணியாற்றிய‌ கிருஸ்த்துவப்பள்ளி
அனைத்திலும் இந்த‌ மருத்துவத்தைப் பின்பற்றியதைப் பார்த்துள்ளேன்.
உங்கள் ஊரில் உள்ள‌ ஓமியோபதி மருத்துவமனைகள், மருந்து விற்பனைக் கூடங்கள் இதற்கென்று உள்ளவை இவை பற்றிய‌ தகவல்
வெப்சைட்டில் கிடைக்கும். மருத்துவர் சீட்டு வேண்டும் என்ற‌ தேவை
இல்லை. இதற்கான‌ மருத்துவ‌ நூலகளும் கிடைகின்றன‌ ஓமியோபதியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே அக்கரை இருக்கும். 98% பக்க‌ விளைவு இல்லாத‌ மருத்துவம் இது ஒன்றுதான்
என்பது என்கருத்து. அப்படி அச்சம் இருந்தால் கற்பூரத்தினை முகர்ந்தாலும், கருப்புக் காப்பி அரைகப் குடித்தாலுமே பக்கவிளைவு
என்பது உடனடியாகக் காணாமல் போகும்.
மிளகு கொஞ்சம் காரமானது. சித்தரத்தை அந்த‌ அளவு காரம் இருக்காது மிளகை உடைத்துப் போடவும். நாங்கள் மிளகு, பால்
சாம்பிராணி (கேட்டால் நாட்டு மருந்து கடைகளில்கிடைக்கும்)
இரண்டையும் மண்சட்டியில் இட்டு புகைய‌ புகைய‌ வறுத்து நீர் ஊற்றி
பாதியாய்ச் சுண்ட‌ வைத்து இனிப்பு சேர்த்து குடிக்கவைப்போம்.
சளி சுரத்திற்கு (விஷசுரத்திற்கு மருந்து)மருந்து. பனஞ்சீனி, பனை
வெல்லம், பனங்கற்கண்டு அனைத்துமே இருமலைப் போக்கும்.
1,2,3,4 பகுதிகளில் சொல்லியவற்றைப் பார்க்கவும்.
நாட்டு மருந்துப் பொருள்கள் ஏறக்குறைய‌ முக்கால் வாசி உணவுப்
பொருள்கள் தான், அதனால் பயம் வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நாங்கள் கிண்டியில் வசிக்கிறோம். குழந்தை பெற்றோருடன் குன்றத்தூரில் (பல்லாவரம்) வசிக்கிறான். நீங்கள் சொன்னவற்றை முயற்சித்துவிட்டு சொல்கிறேன்மா. மிக்க‌ நன்றி.

அன்புடன்
ஜெயா

அம்மா நீங்க சொன்ன சித்தரத்தை எத்தனை நாளுக்கு தரனும். குப்பை மேனி கீரை சூப் ஒரு நாளைக்கு ஒரு தடவை தந்தால் போதுமா?. நொஞ்சி கொழுந்து துளசி தூதுவளை மிளகு கருப்பு வெற்றிலை எல்லாம் எத்தனை எடுக்கனும். 2வேலை 3நாள் தரலாமா அல்லது சளி நீங்கும் வரை தரனுமா?

மேலும் சில பதிவுகள்