அன்புள்ள பூங்கோதை அம்மா

தங்கள் பதில் இப்போது தான் பார்த்தேன் அம்மா எல்லா அரிசியையும் வறுத்து தான் அரைத்தேன்.அரைத்த பின் கசப்பு தெரியவில்லை அம்மா. பாப்பா விரும்பி உண்கிறாள் அம்மா. நான் என்ன செய்வது. மறுபடியும் தயாரிக்கவா? இல்ல இத்துவே போதுமா அம்மா

அன்புள்ள‌ சங்கீதாவிற்கு எனக்கு உடல் நலம் இல்லாததால் கவனிக்கவில்லை. வறுக்கும் போது சற்று கவனம் சிதறினாலும் தீய்ந்து
போக‌ வாய்ப்பு உண்டு, வறுத்த‌ பின்பு தீய்ந்து போன‌ ஒன்று இரண்டு
தானியங்களை பொறுக்கி எடுத்து விட்டு அரைக்கவும். அப்போது கசப்பு இருக்காது. பாலும் சக்கரையும் சேர்வதால் கசப்பு தெரியாமல் போக‌
வாய்ப்பு உண்டு, முடியுமானால் வேறு தானியங்களை வாங்கி வறுத்துத்தீய்ந்ததை பொறுக்கி எடுத்து விட்டு அரைத்துப் பயன் படுத்தவும். முன்பு செய்ததை உங்கள் பயன்பாட்டிற்கு வையுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வணக்கம் தோழிகளே என்ன மாவு அரைக்கிறீங்கனு தெரிஞ்சிக்கலாமா,அதோடு செர்லாக் வீட்டீலேயே தயாரிக்கும் முறை தெரிஞ்சா சொல்றிங்களா என் குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்க இருக்கிறது

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மிக்க நன்றி அம்மா.உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் அம்மா விரைவில் சரியாக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அம்மா

Badhusangeetha

மேலும் சில பதிவுகள்