Doubt

4 மாதம் கர்ப்பமாக உள்ளேன். அடிக்கடி வயிற்றுக்குள் குளிர்ச்சியாக இருப்பது போல் உணர்கிறேன்.அதனால் ஏதும் பிரச்சனை ஏற்படுமா?

Yentha prachanayum illai. Relax a, happy a irunga. Nala sapdunga.

Thank u sister.

4 மாத கர்ப்பமாக உள்ளேன். 2 வாரமாக வயிற்றுக்குள் குளிர்ச்சியாக இருந்தது. நேற்று முதல் கடுமையாக காந்துகிறது. நார்மலாக இப்படி இருக்குமா? வயிற்றுக்குள் ஏதும் இல்லாதது போல் சில நேரம் உணர்கிறேன். இதனால் ஏதும் பிரச்சனை இருக்குமா? பயமாக உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தோழிகளே நான் இப்போது 3 மாத கற்பமாக உள்ளேன். இந்நிலையில் என் கணவரை விட்டு நான் பிரிந்துள்ளேன். காரணம் அவர் சில பெண்களுடன் தொடர்பில் உள்ளார். அவர் ஒரு பெண்ணிடம் பேசிய ரெக்கார்டர் அவர் மொபைலில் பதிவாகி உள்ளது அதை நான் கேட்டு விட்டேன். அதிலிருந்து நான் அவரிடம் ஏன் அந்த பெண்ணை கூப்டீற்கள. என்று கேட்டதற்கு நான் படுக்கதான் கூப்பிட்டேன் என்று தகாத வார்த்தைகளால் என்னை திட்டி விட்டார். நான் கற்பமாக இருக்கிறேன் என்று பாராமல் அடித்து காய படுத்தி விட்டார். நான் அங்கிருந்து அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். ஏல்லோரும் அமைதி படுத்தியும் என்னால் மறக்க முடிய வில்லை. ஆனால் அவர் முன் என் குழந்தையை நல்ல படியாக பெற்று வளர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்போது என்னால் வேலைக்கு போக இயலாது. சகோதரிகளே அவரை மறந்து மனசை அமைதியாக வைக்க என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்.

Nijama romba kashtama iruku sis...ennala feel pana mudiyuthu unga kashtam ..konjam silent ah irunga.... Kovathula , emotional irukum pothu mind velai seiyarthu..ungaluku ithu periya shock..neenga pregnant atha enjoy pana kooda mudiyama kashtam than ma....periya kodumai.ai ithu...neenga unga parents support poda poi kelunga..ungaluku unga husband pidikun na konja naal silent ah irunga ..avaru feel pandrarunu parunga....illa avaru venam na police complaint pani pakalam...

Feel panathinga sister.. Thappu senja avarey happya irukum pothu neenga en alaringa...happya unga babya pethukonga ...nalla padiya valanga avaru illanu nenechukonga ...sorry sethutanga nenechukonga..ipadi pregnant wife adikira aal nallavanga iruka chance illa.. Avanga veetula poi kelunga.. Thappa feel pandrangala parunga..

நீங்கள் சரியான முடிவைத் தான் எடுத்திருக்கிறீர்களா?

//சில பெண்களுடன் தொடர்பில் உள்ளார்.// எப்படித் தெரிந்துகொண்டீர்கள்?

//ஒரு பெண்ணிடம் பேசிய ரெக்கார்டர் அவர் மொபைலில் பதிவாகி உள்ளது// சில சமயம் தப்பே இல்லாத விடயத்தையும் எம் மனநிலை தப்பாகப் பார்க்க வைக்கும். பதிவாகி இருந்த உரையாடல் தப்பானதாக இருந்திருந்தால் நீங்கள் கேட்டது சரிதான். அல்லாமல் நீங்கள் தப்பாகப் புரிந்திருந்தால்... கோபம் வரும் சமயம் மனிதர் எப்படி நடப்போம் என்பதைச் சொல்ல முடியாது. ஒரு நல்ல மனிதரைத் தப்பாகப் பேசினாலும் அவர்கள் தகாத வார்த்தைப் பிரயோகம், அடி என்று இறங்கி விடமுடியும். தூண்டி விட்டது நீங்கள் அல்லவா? வேறு வழியில் இந்தப் பிரச்சினையை டீல் பண்ணியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

//நான் அங்கிருந்து அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன்.// இனி திரும்ப போவதில்லை என்று முடிவு செய்து விட்டீர்களா? ;-(

//அவர் முன் என் குழந்தையை நல்ல படியாக பெற்று வளர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.// அது உங்கள் குழந்தை அல்லவே! உங்கள் இருவரது குழந்தை இல்லையா? குழந்தை நல்லபடி வளர அம்மா மட்டும் போதாது; தந்தையும் கூட வேண்டும். அல்லாவிட்டால் அது வெளி உலகில் நிறையக் கேள்விகளைச் சந்திக்கும்; குழம்பிப் போகும். மன ஆரோக்கியம் கெட்டுப் போகும்.

//அவரை மறந்து மனசை அமைதியாக வைக்க// உங்களால் முடியாது என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். அது இருந்திருந்தால் இங்கு வந்து கேள்வி கேட்டிருக்க மாட்டீர்கள். வயிற்றில் அவரது குழந்தை வளரும் போது எப்படி மறப்பீர்கள்! பிறகும் கூட மறப்பது முடிகிற காரியமா? அதற்கு நான்கைந்து வருடங்களாவது பிடிக்கும்.

முதலில் நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள். அமைதியாக யோசித்துப் பாருங்கள். பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள். உங்கள் குழந்தையின் நன்மையையும் கருத்தில் எடுத்துக் கொண்டே எதையும் முடிவு செய்ய வேண்டும்.

எல்லாம் நலமாக என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

நீங்க சொல்றது ஆறுதலா இருக்கு சகோதரி. அவர் அம்மாவும் சரி அவரும் சரி அத தப்புனு நினைக்கவே இல்ல அதா எனக்கு பெரிய வருத்தமா இருக்கு. அவர பாக்கவோ பேசவோ எனக்கு பிடிக்கவே இல்ல. இருந்தாலும் அவர நினைக்காம இருக்க முடியல. எல்லாரும் இப்படி யோசிச்சி கவல பட்டுகிட்டே இருந்தா குழந்தைக்கு நல்லது இல்லனு சொல்றாங்க. அவர் திருந்தி எனக்கு பண்ண துரோகத்த நினச்சி திருந்துவாரா இதுல இருந்து விடுபட வழி சொல்லுங்க.

நான் அவர் மொபைலில் நிறைய மெசேஜ் பார்த்திருக்கிறேன். அதை காணதது போல் விட்டு விட்டேன் ஆனால் இந்த உரையாடல் தப்பானது தான். அதை கேட்கும் போதே புரிந்து விடும். ஒரு பெண்ணுடன் தொடர்பு என்றால் இவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இருக்கும் ஆனால் நிறய பெண்களுடன் இவர் இப்படி தான் பேசுகிறார். எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது இவர் வேண்டுமா எனபதில் என்ன செய்வதெனறே புரிய வில்லை.

//எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது இவர் வேண்டுமா எனபதில்// ஆற அமர இருந்து யோசியுங்க. உங்கள் வீட்டாரோடும் பேசுங்க. தப்பான ஆள், திருந்துவார் என்பது நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்க வேண்டும். தினம் தினம் நொந்து கொண்டு வாழ முடியாது. முடிவு செய்வது தான் கடினம். இன்னது தான் செய்யப் போகிறீர்கள் என்று முடிவாகி விட்டால் உங்கள் மனது தன்னால் இந்தக் கவலையிலிருந்து வெளியே வந்துவிடும். எதிரே உள்ள வாழ்க்கையை உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லபடி ஆக்கிக்கொள்ள தேவையானவற்றை பார்ப்பது அதன் பின் சுலபமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்