நல்லதை சொல்வோமே !!!!!

பலருக்கு பொருளோ, பணமோ மிகப்பெரிய அவசியமில்லை.
மாறாக அன்பாக, ஆறுதலாக பேச நாலு நல்ல வார்த்தைகள் தான் தேவை.
அது அவர்களை சந்தோசபடுத்தும் விதமாகவும், உற்சாகப்படுத்தும்
விதமாகவும் இருந்தால் இன்னும் நல்லது.

மற்றவர்கள் துயரத்தை நாம் வாங்கிக்கொள்ளமுடியாது,
ஆனால் அதை அவர்கள் தாண்டிச்செல்ல சில நம்பிக்கை வார்த்தைகள்
கூற இயலுமானால் அதுவே போதுமானது.

ஏற்கனவில் மனதளவில் காயப்பட்டவரை வார்த்தைகளால் மேலும் காயப்படுத்தாமல் மருந்தாக இருப்போமே,

அப்படி நாம் செய்வதால் நாளடைவில் நம் மனமும், உடலும் நல்ல எண்ணங்களால் நிரப்பப்பட்டு லேசாகிவிடும்.

நம்மால் இயன்றவரை அந்த வேலையை செய்வோமே..... நல்லதை சொல்வோமே , நல்லதை மட்டும் செய்வோமே.......

அந்தமாதிரி உங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை இங்கு பகிருங்கள்.

பிடித்ததை நினைத்துக்கொள்,
பிடிக்காததை மறந்துவிடு,
வீணாக அதை சுமக்காதே....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்