
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். ஆனால் கோடை வெயிலின் அருமை வெயிலுக்குத் தான் தெரியும். அதுவும் வெயிலுக்கு பேர் போன வெயிலூர் பட்டம் பெற்ற வேலூரில் வசிக்கும் நாங்கள் படும்பாடு அந்த அக்னி பகவானுக்கே வெளிச்சம்.
எதோ தேர்வு எழுதினோமா, பள்ளிக்கு லீவு விட்டாங்களா, பாட்டி வீட்டுக்குப் போனோமா, ஜாலியா இருந்தோமோ என்பதே கனவாகி விட்டது. ஊருக்குப் போகலாம்னு சொன்ன உடனே அவங்க வீட்டில் ஏ சி இருக்கா என்பதே அனைவரின் முதல் கேள்வியா இருக்கு. இல்லைனு சொல்லிட்டா அப்போ யார் வீட்டுக்கு வேண்டாம்
நம்ம வீட்டிலேயே ஏ சி யிலே நிம்மதியா இங்கேயே இருப்போம் என்பதே அனைவரின் ஒட்டு மொத்த தீர்மானமாகி விடுகிறது. இதுதா இப்போ காலத்தின் இல்ல, இல்ல கோடையின் கொடுமையாகி விட்டது.
சரிங்க நம்ப ஊரோ வெளியூரோ கோடை வேயிலை ஜெயிக்கனுங்க. அதுக்கான டிப்ஸ் பதிவு தான் இது.
1. பழைய சாதத்தில் உப்புப் போட்டு அதிகமா தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து குடிக்கலாம். அதுவும் மாங்காயை ரெயின்போ ஷேப்லே வெட்டி வைத்துக் கொண்டு ''ஒரு வாய் கஞ்சி ஒரு கடி மாங்காய்''நு பாடிக்கொண்டே குடிச்சிப் பார்ங்க அதுவும் ஒரு பத்து மணி வேயிலுக்கு குடிங்க அப்பாடா அதுதாங்க விருந்துனு தோனும். அம்மா பாடு தான் திண்டாட்டம் ஏன்னா பழைய சாதத்துக்காக சாதம் வடிக்க வேண்டிய அதிகப்படியான வேலையாகி விடும்.
2. பானகம் நமக்கு தேவையான தண்ணிரில் வெல்லம் போட்டு நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்தவுடன் அதில் இஞ்சி சிறிது சிறுசிறு துண்டுகளா நறுக்கிப் போடவும். அளவாக எலும்பிச்சை சாறு சேர்க்கவும். உப்பும் சிறிது சேர்க்கவும். பச்சை மிளகாய் ஒன்று கீரிப்போடவும். வறுத்த வேப்பம்பூ பொடி சிட்டிக்கை சேர்க்கலாம். இந்த சுவையான, சத்தான பானகத்தை பிற்பகல் பனிரெண்டு மணிக்கு குடித்தோம் என்றால் அதுதாங்க தேவாமிர்தம்.
3. ஊறவைத்த அரிசி, தேங்காய், பாதாம் பருப்பு. முந்திரி, எலக்காய் அனைத்தையும் மசிய அரைத்து பாயசம் போல் நீர்க்க காய்ச்சி, ஒரு தேக்கரண்டி நெய்யும் சேர்த்து மாலை நான்கு மணிக்கு குடிங்க. இதுதாங்க ''சீக்ரட் ஆப் நம் எனர்ஜி'' நு சவால் விடும்.
4.இரவு பத்து மணிக்கு அழகா , ஆசையா, இன்சுவையான ஒரு குல்பி ஐஸை கடிச்சி, நக்கி, அதகளம் படுத்தி ரசித்து சாப்பிட்டோம்னா போதுங்க கோடை காலத்தை ஜெயித்து விடுவோம்.
5. இருக்கவே இருக்கு நமக்குத் தெரிந்த ராகி கூழ், கம்பக் கூழ், மோர். நுங்கு, இளனீ.
என்ன வேயில் ஊரான வேலூர்வாசிகளான நாங்களே கோடைக்காலத்தை ஜெயிக்கும் போது மற்ற ஊர் சகோதரிகள் கோடைக்காலத்தை ஜெயிக்காமலா போய்விடுவீர்கள். ஜெயித்து விட்டு வாங்க அடுத்த பதிவில் பேசலாம். பை....பை.