தேதி: March 3, 2007
பரிமாறும் அளவு: 5 அல்லது 6 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரின் பால் -1 ரின்
தண்ணீர் -1,1/2 ரின்
பால் மா -2 மே.கரண்டி
சீனி -2 மே.கரண்டி
கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி
வனிலா -2 தே.கரண்டி
இளஞ்சூடான நீர் -1/2 கப்
ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும்.
பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.
பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும்.
அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் வைக்கவும்.
திரும்பவும் இரண்டு மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்.
நன்றாக ஐஸ் குளிர்ந்து இறுகி வந்தவுடன் ஐஸ் பரிமாறும் பாத்திரத்தில் இட்டு பரிமாறலாம்.
Comments
வனிலா ஐஸ்க்றீம்
செல்லி இதைப் பார்ப்பீங்களா என்று தெரியேல்ல. உங்கள் குறிப்பைப் பார்த்து முயற்சி செய்த என் குறிப்பு வெளியாகி இருக்கிறது. http://www.arusuvai.com/tamil/node/30376 உங்களுக்கு என் நன்றிகள்.
- இமா க்றிஸ்
rin pal
what is rin pal. Please demo for us with pictures
டின்பால்
கட்டிப்பால்/கன்டென்ஸ்டு மில்க்தான் ரின்பால் என்பது. இலங்கையில் டின்பால் என்பதே வழக்கம் :)
-நர்மதா :)
பால் மா
பால் மா என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்
பால் பொடி
பால் பொடி தான் பால் மா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்
ஹாய்
ஹாய் கஸ்ராட் பவுடர் அப்படி நான் என்ன.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா