ஹலோ தோழிகளே
என் வீட்டில் தெள்ளுப்பூச்சி தொல்லை அதிகமாக இருக்கிறது. 3 வயது குழந்தை இரவில் எல்லாம் சொரிய சொல்லிக்கொண்டே இருக்கிறான். கொஞ்சம் நிருத்தினாலும் அழ ஆரம்பித்து விடுகிறான். இரவு முழுவதும் அவன் சொல்லும் இடங்களில் எல்லாம் சொரிந்து கொண்டே இருக்கிறென். இதனால் ஒரு நிமிடம் கூட தூங்குவதில்லை. நான் வேலைக்கு வேறு செல்லுகிறேன். மிகவும் களைப்பாக உள்ளது. பகலில் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் இரவானால் ஆரம்பித்து விடுகிறான். பெட் ஐ வெயிலில் காய போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதை எப்படி ஒழிப்பது? ரச கற்ப்பூரம் பொடி செய்து பெட் இல் தூவினால் பூச்சி சாகுமா? அல்லது வேறு வழி எதாவது இருக்கிறதா? உதவுங்கள் தோழிகளே
தெள்ளு
//என் வீட்டில் தெள்ளுப்பூச்சி தொல்லை அதிகமாக இருக்கிறது.// செல்லப்பிராணிகள் வளர்க்கிறீர்களா? இருந்தால் முதலில் அவற்றுக்கு தெள்ளுத் தொற்று இருக்கிறதா என்று பாருங்கள். குழந்தைக்காவது சிரமத்தை வெளிப்படுத்தத் தெரியும். வாயில்லா ஜீவன்கள் பாவம். அவற்றின் கூடுகளிலும் அவை படுக்கும் இடங்களிலும் pet bedding spray அடித்துவிடுங்கள்.
உங்களிடம் செல்லப் பிராணிகள் இல்லாவிட்டாலும் அயலில் உள்ள வீடுகளில் இருந்து வரலாம்; நம் காலோடு கூடிக் கொண்டும் வீட்டிற்குள் வரலாம்.
//இரவு முழுவதும் அவன் சொல்லும் இடங்களில் எல்லாம் சொரிந்து கொண்டே இருக்கிறென்.// தெள்ளு ஒரு முறை கடித்தால் அந்த இடத்தில் பல மணி நேரங்கள் எரிச்சல் இருக்கும். ஏதாவது க்ரீம் தடவி விடுங்கள். லாக்டோ காலமைன் நல்லது. எரிச்சலைக் குறைத்து தோலைச் சீரமைக்கும். நீங்கள் சொரிந்து விட குழந்தையின் மென்மையான தோல் அதிகம் எரிச்சலடையும். ;(
பெரியவர்கள் யாருக்கும் இந்தப் பிரச்சினை தெரியவில்லையா? வீட்டில் எல்லோரையுமே தூக்கத்தில் கடித்து வைக்கும். கவனியுங்கள். படுக்கை விரிப்பு தலையணை உறைகள் மெல்லிய தனி நிறங்களில் இருந்தால் நல்லது. காலை எழுந்ததும் படுக்கையில் இரத்த அடையாளங்கள் தெரிகிறதா என்று பாருங்கள்.
//பகலில் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை// 3 வயதுக் குழந்தை. பகலில் படுக்கையிலிருப்பது குறைவாக இருக்கும்.
//பெட் ஐ வெயிலில் காய போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.// இராது. பிரயோசனம் இல்லை. இவற்றுக்கு வெயிலோ, வெப்பமோ எதுவும் செய்வதில்லை. ஒரு தடவை துணிகளில் / கார்பட்டில் முட்டையிட்டால் அது பொரிக்கும் சமயம் திரும்ப கடி ஆரம்பிக்கும்.
//அதை எப்படி ஒழிப்பது?// இது ஒழிப்பதோடு மட்டும் சரியாகும் விடயம் இல்லை. தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயம். திரும்பத் திரும்ப தெள்ளு வரலாம்.
//ரச கற்ப்பூரம் பொடி செய்து பெட் இல் தூவினால் பூச்சி சாகுமா?// பூச்சி சாகும் என்று நினைக்கவில்லை. தெள்ளு ஒரு இடத்தில் இராமல் துள்ளிக் கொண்டே இருக்குமே! வாசனை பொறுக்க முடியாமல் கட்டிலிருந்து விலகி இருக்கலாம். கற்பூர வாசனை தீர்ந்ததும் மீண்டும் வரும். மீண்டும்... பூச்சி செத்தாலும் முட்டைகள் இருக்கும் திரும்பப் பொரிக்க.
//அல்லது வேறு வழி எதாவது இருக்கிறதா?// flea bombs பயன்படுத்தலாம். இதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் வேலை செய்யும்.
//ஆனால் இரவானால் ஆரம்பித்து விடுகிறான்.// சின்னவர் விளையாடும் இடத்திலிருந்து தினமும் தொற்றிக் கொண்டு வரலாம். குழந்தை வெளியே விளையாடிவிட்டு வந்தால் துணிகளைக் கழுவப் போட்டு ஆளைக் குளிக்க வைத்து வேறு உடை அணிந்துவிடுங்கள். இது பார்க் பீச் என்று சுற்றி விட்டு வந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். பெரியவர்களும் இதைப் பின்பற்றாவிட்டால் பயனில்லை.
தற்காலிகமாக _ insect repellent பயன்படுத்தலாம். லேபிளில் தெள்ளுக்கும் சேர்த்த மருந்து தானா என்பதைக் கவனித்து வாங்குங்கள். இதுவும் 6 மணி நேரத்தில் வீரியம் இழந்துவிடும். குழந்தை எழும். திரும்ப பூசி விட வேண்டும்.
தெள்ளு கட்டிலில் மட்டும் இருப்பதில்லை. கட்டிலின் அடியில், கதவு இடுக்குகளில் கூட ஒளிந்திருக்கும். முழு வீட்டிற்கும் ட்ரீட்மண்ட் செய்தாக வேண்டும். ஒரு தடவை வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்துங்கள். தோட்டத்தைச் சுத்தம் செய்யுங்கள். தொட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வையுங்கள். முடிந்தால் தொட்டிகளைக் கால்களின் மேல் (தொட்டிகள் வைக்கவென்று சிறிய பாதங்கள் போல் விற்பனை செய்வார்கள்.) வைக்கலாம். இதற்கென உள்ள ஆட்களைப் பிடித்தால் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கும் மருந்து தெளித்து விடுவார்கள்.
~~~~
தெள்ளுக் கடி என்பது நிச்சயம் தெரியுமா?
- இமா க்றிஸ்
தெள்ளு
இப்படி ஒரு உயிரினங்கள் இருக்கிறதா?ஆச்சரியமாக இருக்கிறது.நான் கேள்வி பட்டதே இல்லை. அது பார்க்க எப்படி இருக்கும்?
தெள்ளு
ம்... உலகத்துல 2500 விதமான தெள்ளு இருக்கிறதா சொல்றாங்க.
//அது பார்க்க எப்படி இருக்கும்?// பார்க்கிறது கஷ்டம். எப்பவும் குதிச்சுட்டே இருக்கும். நாய்கள், பூனைகள் & எலிகள் தான் இவங்களோட முக்கிய ஹோஸ்ட்ஸ். நீங்க நிச்சயம் பார்த்திருப்பீங்க.
(பல வருஷங்கள் முன்னால இந்தியால ப்ளேக் வந்த சமயம் எலிகளைப் பிடிக்க அவற்றின் பின்னால மக்கள் அலைஞ்சுட்டிருந்தாங்க என்கிறதா நினைவில் இருக்கு. அப்போ ரேடியோல்ல எல்லாம் இதான் பேச்சா இருந்துது. ப்ளேக் இருக்கிற எலி இறந்து போனால், அதனுள் குடியிருக்கும் தெள்ளு எல்லாம் கூட்டமா வெளியே கிளம்பி வேற ஹோஸ்ட்டைத் தேடிப் போகுமாம் என்று சின்னதுல படிச்சிருக்கேன்.)
தெள்ளு _ எள்ளு சைஸ்லயும் இருக்கும், அதை விட குட்டியாவும் இருக்கும். வெட்டிப் போட்ட நகம் சைஸ்ல பெருசாவும் இருக்கும். நெடுக்கு வாட்டில தட்டையா இருக்கும். கலர்... பளபளான்னு கருப்பு, ப்ரவ்ண் ஷேட்ஸ்ல இருக்கும்.
- இமா க்றிஸ்
imma mam
நான் பார்த்து இருக்கிறேன். இன்றைக்கு தான் பெயர் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி தெளிவாக விளக்கியதற்கு.
Hi
Amam kaavai kalil neraaiya irukum thaavi kondu irukum