தோல் அரிப்பு

Hi friends,

எனக்கு 1 மாதமாக உம்பு முழுதும் அரிப்பு இருக்கிறது. தோல் Dr பார்த்து கடந்த 20 நாட்களாக அழற்சி மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ஒரு நாள் சாப்பிட மறந்தாலும் அரிப்பு இருக்கிறது. மாத்திரை சாப்பிடுவதால் அளவுக்கு மீறிய தூக்கம் வருகிறது. தைராய்டு டெஸ்ட் தேவைப்பட்டதால் அதுவும் நார்மல் தான்.

எனக்கு என்ன பயம் எனில் வேறு எதாவது பிரச்சனை இருக்குமோ என்று. Net துருவினால் Blood cancer சொரியாசிஸ் என்று பயமுறுத்துகிறது. நான் தற்போது தான் பெரும் மனத்துயரத்தில் இருந்து விடுபடும் நேரம் இந்த பிரச்சனை என்னை கொஞ்சம் பயமுறுத்துகிறது.

Please இந்த மாதிரி பிரச்சனை யாருக்காவது இருந்து முழுதும் விடுபட்டு இருந்தால் பதில் தாருங்கள். வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

//மாத்திரை சாப்பிடுவதால் அளவுக்கு மீறிய தூக்கம் வருகிறது.// என்ன‌ மாத்திரை எடுக்கிறீர்கள்? இரவில் மாத்திரை எடுக்க‌ வேண்டி இருந்தால் நேரத்துக்கு எடுங்கள். நேரகாலத்திற்கு வேலைகளை முடித்து விட்டு தூங்கப் போங்கள். தூக்கம் தொந்தரவாக‌ இருந்தால் மாத்திரை கொடுத்த‌ மருத்துவரிடம் பேசுங்கள். தூக்கம் குறைவாக‌ வருவது போல‌ மாத்திரைகள் உள்ளன‌.

//ஒரு நாள் சாப்பிட மறந்தாலும் அரிப்பு இருக்கிறது.// மறக்காமல் சாப்பிடுங்க‌. கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை. ஆனால் உங்கள் அன்றைய‌ தினத்துக்கான‌ காரியங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சில‌ வேலைகளை தூக்கக் கலக்கத்தோடு செய்ய‌ முடியாது. உங்கள் பாதுகாப்பு முக்கியம்.

//வேறு எதாவது பிரச்சனை இருக்குமோ என்று.// உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை (உணவு, உடை, பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள், சூழலிலுள்ள‌ ஏதாவது) இருக்குமாவென்று கவனித்துப் பாருங்கள். அதைத் தவிர்த்தால் பிரச்சினை மெதுவே குறைந்து போகக் கூடும்.

//இந்த மாதிரி பிரச்சனை யாருக்காவது இருந்து முழுதும் விடுபட்டு இருந்தால் பதில் தாருங்கள். வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.// உங்கள் பிரச்சினை 'எந்த‌ மாதிரி' என்பதை உங்கள் இடுகையிலிருந்து கண்டுபிடிக்க‌ முடியாது.

மாத்திரையோடு க்றீம், மாய்ஸ்ச்சரைசர், காலமைன் லோஷன் ஏதாவது பயன்படுத்திப் பார்க்கலாம். இவை பிரச்சினையைப் பெரிதாக்கிவிடவும் கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி.

நான் எல்லாமே ஆராய்ந்து விட்டேன். மேக்கப் எதுவுமே போடுவது இல்லை. பவுடர் கூட பூச மாட்டேன். உணவு உடை எப்போதும் போல. ஒன்றே ஒன்று இடம் மட்டும் மாறி இருக்கிறேன்.

--

// உணவு உடை எப்போதும் போல.// அதில் மாற்றம் தேவைப்படலாம். சில‌ சமயங்களில் எம் உடல் எதையாவது வேண்டாம் என்று ஒதுக்குவது உண்டு.

//இடம் மட்டும் மாறி இருக்கிறேன்.// தவிர்க்கக் கூடிய‌ ஏதாவது இருந்தால் தவிர்க்க‌ முடியுமா என்று பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்