thyroid

எனக்கு திருமணத்திற்கு முன்பு 28 நாட்கள் சுழற்சி 4 நாட்கள் இருக்கும்ஂ ஆனால் திருமணத்திற்கு பின்பு 26 நாள் சுழற்சி 3 நாட்களாகி விட்டது, 1 ஆண்டு குழந்தை இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்குச் சென்றோம்.மாத்திரை கொடுத்தார்கள். 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டேன். 3 மாதமும் 30,31,31 என நாட்கௗ் தள்ளி சென்றது. பின் 3 மாதம் சிகிச்சைக்கு செல்ல இயலவில்லை. அந்த 3 மாதமும் சரியாக 26 நாள் சுழற்சி.மீண்டும் கடந்த மாதம் சென்றோம்.இரத்தப் பரிசோதனை செய்து தைராய்டு என்று கூறி மாத்திரை கொடுத்தார்கள்.இந்த 2 மாதமும் 31,28 என மாறி வருகிறது.மாத்திரைகளின் பக்க விளைவு காரணமாக இவ்வாறு மாறி மாறி வருகிறதா? நான் சித்த மருத்துவத்தை அணுகலாமா
<!--break-->

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தா எல்லாம் சரி ஆகும் பா

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

பதில் தெரிந்தவர்கள் கூறவும்

நன்றி

எனக்கு திரிந்து தைராய்டு உள்ளவங்க அது கணமிகி கர்ப்பமாகிருக்காங்க. காத்துருங்க

காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்

//3 மாதத்தில் சரியாகி விடுமா// 3 மாதங்கள் கழித்து பரிசோதிக்கும் போது சரியாகியிராவிட்டால் தொடரச் சொல்லக் கூடும். இது ஒரு பிரச்சினையே அல்ல‌. இப்போது பலருக்கும் உள்ளதுதான். யோசிக்காதீங்க‌. ஆனால் மாத்திரையை டாக்டர் சொல்லாமல் நிறுத்தவே வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Thank you Imma sister

எனக்கு திருமணத்திற்கு முன்பு 28 நாட்கள் சுழற்சி 4 நாட்கள் இருக்கும்ஂ ஆனால் திருமணத்திற்கு பின்பு 26 நாள் சுழற்சி 3 நாட்களாகி விட்டது, 1 ஆண்டு குழந்தை இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்குச் சென்றோம்.மாத்திரை கொடுத்தார்கள். 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டேன். 3 மாதமும் 30,31,31 என நாட்கௗ் தள்ளி சென்றது. பின் 3 மாதம் சிகிச்சைக்கு செல்ல இயலவில்லை. அந்த 3 மாதமும் சரியாக 26 நாள் சுழற்சி.மீண்டும் கடந்த மாதம் சென்றோம்.இரத்தப் பரிசோதனை செய்து தைராய்டு என்று கூறி மாத்திரை கொடுத்தார்கள்.இந்த 2 மாதமும் 31,28 என மாறி வருகிறது.மாத்திரைகளின் பக்க விளைவு காரணமாக இவ்வாறு மாறி மாறி வருகிறதா? நான் சித்த மருத்துவத்தை அணுகலாமா?

அவ்வ்!! ;‍) இழையின் முதன்மைக் கேள்வியையே காணோமே! இப்படி நினைத்து நினைத்து கேள்வியை எடிட் பண்ணக் கூடாது ரோஸ்லின். இப்போ பதில் சொன்ன‌ இமா முட்டாளாகி விட்டேன். கர்ர்ர்.... ;((

மக்களே! அவங்க‌ முதல்ல‌ கேள்வி ஒன்றை வைத்திருந்தாங்க‌. பதில் சொன்ன‌ பின்னால‌ கேள்வியைக் காணோம். ;(

ரோஸ்லின்... இது பொதுத் தளம். 'நன்றி இமா' என்று ஆரம்பிப்பதாக‌ ஒரு இழை... பயனற்றது. எனக்கும் சங்கடமாக‌ இருக்கிறது. வேண்டாமே! ;(

இன்று நீங்கள் போட்ட‌ கேள்வியை காப்பி செய்து மேலே போட்டால் கூட‌ பரவாயில்லை. நல்ல‌ பிள்ளையாக‌ திரும்ப‌ எடிட் பண்ணி விடுங்க‌.

//மாத்திரைகளின் பக்க விளைவு காரணமாக இவ்வாறு மாறி மாறி வருகிறதா? // நிச்சயம் அவை பக்கவிளைவுகள் அற்றவை. நம்பலாம்.

‍- இமா க்றிஸ்

தவறு நடந்து விட்டது. நான் அங்கேயே சிகிச்சையை தொடரவா? சித்த மருத்துவத்தை அணுகவா?

மேலும் சில பதிவுகள்