Hai frds,
En baby piranthu 37 days aguthu.
Night thungavey mattika
Eppo one side thirumpi padikra.
Head eppo nirkum. 1 month baby activities sollunga
<!--break-->
Hai frds,
En baby piranthu 37 days aguthu.
Night thungavey mattika
Eppo one side thirumpi padikra.
Head eppo nirkum. 1 month baby activities sollunga
<!--break-->
அர்ச்சனா
ஒரு மாதத்தில் குழந்தை நன்றாக தூங்க வேண்டும்.தினமும் குளிக்க வையுங்கள். நீங்கள் சீக்கிரம் படுக்க வையுங்கள். வயிறு முழுவதும் குழந்தைக்கு நிறம்ப வேண்டும். அப்பொழுது தான் தூக்கம் வரும்.
மூன்று மாத்த்தில் தலை நன்றாக நிற்கும்.
ஒரு மாத குழந்தை ஒரு நாளைக்கு 22மணி நேரம் தூங்கும்.
சாப்பிட கூட எழுந்திரிக்க மாட்டார்கள்..
Thanks sis
Daily kulika vaikanum ma?
Mom solranga ammavasai & powrnami la kulika vaika kudathu nu...
Antha day la oil um apply panna kudatham
Night urine porappa mattum overa alura
அர்ச்சனா
உடல் சூடு அதனால் தான் யூரின் போகும் போது வலி வரும்..
தினமும் குளிக்க வைக்கலாம் காலையில்.
எப்போதும் வெள்ளை காட்டன் துணியில் குழந்தையை வையுங்கள்..
Indhusha sis
Night baby thunga mattika.
Avala thukkittu walk panna mattum thungura. Paduka vacha udaney Alura.
Mng mattum thungura.
Light off panna avaluku pidikka mattiku.
Normal la epdi than pannuvangala
akka baby lam samatha thungunanga
Easy a thunga vaika idea kudinga sis...
archana
Appo neega adikadi walk panni palagirukenga.
Kolanthaiku fulla irutaa iruntha payam varum..oru zero watts bulb potu vidanumga.
Namma pakathula summa padikanum..thatti kuduthu palaga kudathu.
Namma kaila dhan ellame iruku..
Namma palakka paduthurathula dhan iruku.
Half a hourku oru thadava kolanthainga kannu mulichi pakurathuku chance iruku appo namma pakathula iruntha payam illama thoogum
குழந்தை _ உறக்கம்
நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க என்று தெரியவில்லை. வெப்பம் அதிகமான நாடுகளில் இருப்பவர்கள், குழந்தைகளைத் தினமும் குளிக்க வைப்பது (ஸ்பாஞ்ச் கூட போதும்.) நல்லது. அல்லாவிட்டால் அங்கங்கே மடிப்புகளில் வியர்வை & தூசு சேர அவங்களுக்கு சிரமமாக இருங்கும். அதுவும் தூங்காமலிருக்க காரணம் ஆகும். இந்து சொன்னதைப் படியுங்க.
//Easy a thunga vaika idea kudinga// Wrapping a baby என்று கூகுள் செய்து பாருங்க. கம்பளி சூடாக இருக்கும். நீங்க இருக்கும் இடத்தைப் பொறுத்து மல் துணி / வேட்டித் துணியில் கூட சுற்றலாம். நீங்கள் தூக்கி வைத்திருப்பதாக நினத்து நன்றாக உறங்குவாங்க.
//akka baby lam samatha thungunanga// கர்ர்ர்... ஒரு பொழுதும் மற்றக் குழந்தைகளோடு உங்கள் குழந்தையை ஒப்பிட வேண்டாம். நீங்க எப்படி உங்க அக்கா போல இல்லையோ அப்படித்தான் இதுவும். அக்கா குழந்தைக்கு என்ன வயது?
- இமா க்றிஸ்
Baby sleep
Enaku Tiruchendur heat place than
Morning Wrapping la thungura
Night 8 to 12 varai thungavey mattika walk pannitu erukanum.
Epdi try pannalum no use.
Eppo regular a bath panrathala night alaratha kojam kammi pannirukka.
Sis
Akka baby 1 month epdi walk panna sollala. But en baby overa panra nu en sis solra.
ஒப்பிட வேண்டாம்
// en baby overa panra// ;)) ஓவரும் இல்ல; அண்டரும் இல்ல. எந்த பேபிக்கும் ஒரு மாசத்துல ஆக்ட் பண்ணத் தெரியாதுங்க.
இப்பவும் சொல்றேன்... உங்க அக்காவும் நீங்களும் ஒரே மாதிரி இல்லை. முன்னாடியும் இருந்திருக்க மாட்டீங்க. உங்க அம்மாட்ட கேட்டா சொல்லுவாங்க. உங்களைக் குழப்புற அக்காக்கு ரெண்டு அடி கொடுக்கணும்.
இதுக்கும் மேல... இந்த ரெண்டு பாப்பாக்களுக்கும் அப்பாக்கள் வேற. ஒப்பிட வேண்டாமே! ஒப்பிட ஆரம்பிச்சா லைஃப் லாங்கா நிறையக் கவலைப்பட்டுட்டே இருப்பீங்க. குழந்தையை ரசிக்க முடியாமல் போகும். நீங்க சீக்கிரம் உங்க கணவர் வீட்டுக்குப் போய்ரது நல்லது. (அங்கயும் ஒப்பிட்டுப் பார்க்க யாராச்சும் இருக்காங்களா?)
இரவுல ஃபான் போட்டுப் பாருங்க.
- இமா க்றிஸ்
அர்ச்சனா
இமா அம்மா சொல்றது மிகவும் சரியானது. என்னை எங்க அம்மா அவங்க அக்கா பொண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்திருக்கேன்.
என் அக்கா பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கினாள். அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் அம்மா பெரியம்மாவிடம் நான் முதல் ரேங்க் வாங்கியதை சொன்னார். உடனே என் பெரியம்மா இப்போ யார் வேண்டுமானாலும் முதல் ரேங்க் வாங்கலாம் பத்தாம் வகுப்பில்தான் இவங்க லட்சனம் தெரியும் என்றார்.
அதை என் அம்மாவும் நம்பினார். அன்றிலிருந்து நான் எத்தனை முறை முதல் மார்க் வாங்கியும் என்னை பாராட்டியது இல்லை.
என் பத்தாம் வகுப்பும் வந்தது. அப்போ நான் படிக்கும் காலங்களில் எனக்கு காலை காபி கூட என் அம்மா செய்து தந்தது இல்லை. பசியுடன் படித்தேன் பலநாள். அம்மா சொல்வது நீ என்ன படிச்சாலும் உன் அக்கா மார்க் தான் வாங்குவாய் என்றார். இப்படி சொல்லி சொல்லி மட்டந்தட்ட மட்டந்தட்ட நான் தூங்காமல் படித்து என் கண்களை கெடுத்து கொண்டேன்(எனக்கு சாப்பாடு டைம்க்கு கிடைக்காது காபி வேண்டும் என்றுகேட்டாலும் போட்டு குடி என்பார் அப்போ வீட்டில் நான்கு பசுமாடு வளர்ந்தது பால் கறந்ததும் அப்பா வேகமாக என்னிடம் எடுத்து வருவார் காபி போட்டு குடி என்று, பால் கறப்பவர் லேட்டா வந்தா வெந்நீரில் ஹார்லிக்ஸ் குடி என்பார்)
இப்படி என் பத்தாம் வகுப்பு நிறைவேறியது..
நான் என் ஸ்கூலில் முதலிடம். என் பெரியம்மா அம்மா இருவருக்கும் ஷாக் தான்.
இவங்க சின்ன வயதில் இருந்தேஅதிகம் ஒப்பிடுவார்..அதனால் நான் நிறைய பாதிக்கப்பட்டிருக்கேன். அதில் ஒரு % தான் சொன்னேன். நீங்கள் நல்ல தாயாக உங்கள் குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்
யார் ஒப்பிட்டாலும் காதில் வாங்காதீர்...
Indhusha sis
Nan eni epdi yosika matten (oppida)
Sorry sis
Unga advise ku thanks
Thanku