ஹெலோ தோழிகளே...
நான் அறுசுவைக்கு புதுசு, நான் குழந்தைக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், நான் இதில் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன், அப்றம் ஓவுலேஷன் நாட்களில் வெள்ளை படும் என்று கூறி இருந்தீர்கள், அதே போலவே வெள்ளை பட்டது, நேற்று எனக்கு 14வது நாள்,அப்றம் வலது பக்க வயிற்றில் ஏதோ ஊடுறுவது போல் தென்படுகிறது இது எதனால் என்பது புரிவில்லை, வலது பக்கம் திரும்பி படுத்தால் வயிற்றில் ஏதோ முட்டுவது போல் உணர்வு ஏற்டுகிறது, இது எதனால் ஏற்படுகிறது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா தோழிகளே...
Pls rply
எண்ணாச்சி தோழிகளே, எதற்காக பதில் எதுவும் அனுப்ப மாட்டேன்கிறீங்க
சௌமியா
வணக்கம் _()_ சௌமியா. :)
//ஊடுறுவது// ஊருவதா? ஊடுருவுவதா? ஊர்ந்தால் அது வாயு; ஊருடுவினால்... உங்கள் எண்ணம்.
எதுவாக இருந்தாலும் பெரிதாக யோசிப்பதற்கு எதுவும் இல்லை. //வலது பக்கம் திரும்பி படுத்தால் வயிற்றில் ஏதோ முட்டுவது போல் உணர்வு ஏற்டுகிறது, இது எதனால் ஏற்படுகிறது//சீக்கிரம் கர்ப்பமாகணும் என்று நீங்க ரொம்ப ஆவலாக இருக்கீங்க. ஒவ்வொரு சின்ன அசைவையும் மாற்றத்தையும் அவதானிக்க ட்ரை பண்றீங்க. இப்ப, சாதாரண காலத்தில் உங்க கவனத்துக்கு வராத, சமிபாட்டுத் தொகுதியில் வாயு ஓடும் இரைச்சல் கூட உங்க கவனத்துக்கு வரும். பெருசா தெரியும். அது தான் முதல் காரணம்.
யோசிக்காம இருங்க. காலத்துக்கு முன் டெஸ்ட் பண்ணிப் பார்க்க நினைக்காதீங்க. ஈஸியா நீங்க தினமும் செய்ற வேலைகளைப் பாருங்க. சந்தோஷமா இருங்க.
~~~~~~
//எண்ணாச்சி தோழிகளே,// ஒண்ணும் ஆகல. :) //எதற்காக பதில் எதுவும் அனுப்ப மாட்டேன்கிறீங்க// எல்லாரும் ஆபீஸ்ல இருக்காங்க போல. இமா தூங்கிட்டு இருந்தேன். இப்போதான் இங்கு வந்தேன்.
அறுசுவைல சுடச்சுட பதில் எதிர்பார்த்து ஏமாற வேணாம். மெதுவாதான் இங்கே பதில் கிடைக்கும். யோசிக்காம சந்தோஷமா இருக்கணும்.
- இமா க்றிஸ்
Thank you
ம்ம்.. ஓகே மா, நீங்க சொல்றது போலவே இதை பற்றி யோசிக்காம ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன்,
Thermometer
ஹெலோ தோழிகளே..
Besal body temperature பற்றி பார்த்தேன், besal body temperature பதிலாக digital thermometer பயன் படுத்தலாமா..?
Thermometer
என் கிட்ட omron digital thermometer இருக்கு, அதை வைத்து பார்க்கலாமா..?
Pls.. rply me friends...
Basal Body Thermometer
//omron// ப்ராண்ட் பெயர் தானே!
//digital thermometer/ஜுரம் வந்தால் பயன்படுத்தும் சாதாரண உடல் வெப்பமானியில் தசமதானத்தோடு சேர்த்து 3 டிஜிட்ஸ் தான் காட்டும். அதாவது... ஒரு பாகையில் பத்தில் ஒரு பிரிவு வெப்ப மாறுதலை மட்டும் காட்டும்.
Basal Body digital Thermometer இன்னும் நுணுக்கமாக, வெப்பநிலையை வேறுபாட்டைக் காட்டக் கூடியது; இரண்டு தசமங்களில் (ஒரு பாகையில் நூறில் எத்தனை பிரிவு வெப்பநிலை வேறுபாடு என்பதை) காட்டும்.
- இமா க்றிஸ்
Thank you
ஒஹ்ஹ்.. ஓகே மா புரிஞ்சிடுச்சி, உங்கள் பதிலுக்கு நன்றி மா....
Doubt
டுடே எனக்கு 19 வது நாள் அடி வயிறு ரொம்ப வலிக்கிறது, அடி வயிறு வலிக்கும் போது breast வலிக்கிறது, இது எதனால்மா, எனக்கு எப்பொழுதும் periods வரதுக்கு முன்னாடி back pain தான் இருக்கும், இப்போ அடி வயிறு வலிக்கிறதால் பயமா இருக்கு, இது நார்மல் தானே மா....
சொளமி
பீரியட்ஸ் மற்றும் கர்ப்ப அறிகுறிகள் பொதுவாக ஒன்றாக இருக்கும். நிதானமாக இருங்க. அதை நினைச்சு ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க.திருமணமாகி எவ்ளோ வருசம் ஆச்சு? ஏதாவது டீரிட்மென்ட் போறீங்களா? இல்லன்னா கூலாக இருங்க. நல்லதே நடக்கும்.
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
Thank for rply
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆச்சு,ட்ரீட்மெண்ட் எடுத்தோம் எல்லாம் நார்மல் தான், எங்களுக்கு எந்த பிரட்சனையும் இல்ல மா, கூலாக இருக்க முயற்சிக்கிறேன் மா....