ஆலோசனை தாருங்கள்

தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.

Konjam konjama gap vittu sapuduran sis ipo paravailla sis na Nalla irukan sis

நான் உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன் .வாழ்த்துக்கள் சகோதரி .இளவரசி பிறப்பின் ராசி நீங்களும் உங்கள் கணவரையும் ஒன்றிணைக கடவுளை வேண்டுகிறேன் சகோதரி .உங்கள் கணவருடன் விவாதம் செய்ய வேண்டாம் .இப்போ பச்சை உடம்பு நல்ல ஓய்வு அவசியம் .

இது வரையும் சீனி சேர்க்காமல்தான் கொடுத்து வருகிறேன். வாயை வைக்க கூட மாட்டிக்கிறார். சில சமயங்களில் தலையை அழுத்திப் பிடித்தும் கொடுத்துப் பார்த்தேன் எங்கே???

இறைவனே துணை

உண்மையில் உடலில் ஏற்படும் காயங்கள் எல்லாம் தானாகவே ஆற‌ வேண்டும், ஆறும். நாம் காயங்கள் சுத்தமாக‌ தொற்று ஏற்படாமல் வைத்திருந்தால் போதியதாக‌ இருக்க‌ வேண்டும். ஆனால், எம்மை அறியாமல் காற்றிலிருந்து கிருமிகள் தொற்றிக் கொள்ளும். நாம் சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தும் நீரிலிருந்தும் கிருமித் தொற்று ஏற்படலாம். சில‌ சமயம் மருத்துவ‌ சிகிச்சைகளின் போது பயன்படுத்தும் உபகரணங்களின் வழியாகவும் தொற்றுகள் உடலுக்கு அறிமுகமாகின்றன‌. இவற்றின் காரணத்தினால் தான் சில‌ சமயம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுக்கவேண்டி வருகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க‌ வேண்டும்.

காயங்கள் ஆற‌ புரதங்கள் நிச்சயம் உதவும். அவை சிதைவடைந்த‌ திசுக்களை மீளச் சரிசெய்ய‌ உதவும். வைட்டமின்கள் முக்கியமாக‌ வைட்டமின் சீ நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பழங்கள் சாப்பிடுவது நல்லது. இதற்காகத்தான் நோயாளர்களைப் பார்க்கப் போகும் போது பழங்கள் எடுத்துப் போவது.

‍- இமா க்றிஸ்

//இது வரையும் சீனி சேர்க்காமல்தான் கொடுத்து வருகிறேன்.// நல்லது. இனியும் கூடுமானவரை சீனி சேர்க்காமலே கொடுங்கள்.

//சில சமயங்களில் தலையை அழுத்திப் பிடித்தும் கொடுத்துப் பார்த்தேன்// :‍) இப்படிச் செய்தால் தானாகக் குடிக்க‌ விரும்பினாலும் குடிக்க‌ மாட்டார். வற்புறுத்தினால் பெரும்பாலும் எதிர்மாறான‌ பலன்தான் கிடைக்கும்.

நீங்கள் பாலை சுவை பார்த்து விட்டுக் கொடுங்கள். சில‌ சமயம் காலாவதித் தேதி சரியாக‌ இருந்தாலும் கூட‌ ஃபாக்டரி ஃபால்ட் தயாரிப்புகள் சுவையில் மாற்றம் இருக்கலாம். பால் சூடு அதிகமாக‌ இருந்தாலும் குடிக்க‌ மாட்டார். சூடு பார்த்துத் தானே கொடுக்கிறீங்க‌? பாலை உடனுக்குடன் கரைத்துக் கொடுங்க‌. முன்பாகக் கரைத்து வைக்க‌ வேண்டாம். பாட்டில்... கொதிக்க‌ வைக்கிறீங்க‌ இல்ல‌! துளி பழைய‌ பால் வாடை வந்தாலும் சில‌ குழந்தைகள் குடிக்க‌ மாட்டார்கள். மற்றது... பாட்டில் நிப்பிள் சரியாக‌ இருக்கிறதா? மாற்ற‌ வேண்டுமோ! பாலை எப்படிக் கரைக்கிறீங்க‌? நேரடியாக‌ பால் புட்டியில் தானே! வேறு பாத்திரம், கரண்டி பாவிப்பதில்லையே!

‍- இமா க்றிஸ்

புட்டில் பால் குடிக்கிறார் தாய்ப்பால் தான் குடிக்க மறுக்கிறார்.

இறைவனே துணை

இப்போதுதான் 8 மாதங்கள் சகோதரி. புட்டில் பாலோடு தாய்ப்பாலையும் குடித்துக்கொண்டிருந்தவர் திடீரென தாய்பாலை மறுக்கிறார்.

இறைவனே துணை

Congratulations sis unga mahalakshmi kum en valthukal sollunga sis nalla rest edunga nalla saptunga sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

எனக்கு குழந்தை பிறந்து 27 நாள் ஆகிறது. பிறந்த உடன் 2கிலோ இருந்தாள்.அப்புறம் 1.800 ,ஆகி விட்டாள். இப்போது 2 கிலோ உள்ளாள். சிசேரியன் ஆதலால் எனக்கு பால் சுரப்பே இல்லாமல் இருந்தது. அதனால் lactogen பால் பவுடர் கொடுத்தோம். இப்போ எனக்கு கம்மியாக தான் பால் சுரக்கிறது. நன்றாக தான் சாப்பிடுகிறேன். பால் பவுடரை நிறுத்த வில்லை. ஒரு நாளைக்கு நறைய டைம் கொடுக்கிறேன். இதனால் ஏதாவது ஆகுமா ஒரே பயமாக உள்ளது. நான் 2 மணி நேரம் கூட தாய் பால் கொடுத்து விட்டேன் ஆனால் பாப்பாக்கு போதவில்லை கஸ்டமா இருக்கு அழுகையாக வருகிறது். பவுடர் பால் கொடுப்பதால் ஏதாவது ஆகுமா. இன்னும் குளிக்க வைக்க வில்லை. வெயிட் போட என்ன செய்யலாம் ப்ளீஸ் உதவுங்கள்

பால் சுரப்புக்கு அவரைக்காய் மருந்து குழம்பு வெச்சு சாப்பிடலாம். பால் சுரக்கும். சுறா புட்டு செய்து சாப்பிடுங்க. பாப்பா தண்ணீர் ஊற்ற ஊற்ற தான் சதை பிடிப்பாள். மாக்சிமம் தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிடனுமோ அது சாப்பிட்டு உங்க பாலே கொடுங்க பா. பாப்பா நல்லா வெயிட் போடுவா.

மேலும் சில பதிவுகள்