தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.
அம்மு
27நாட்கள் வரை குழிக்க வைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..எங்கள் ஊரில் மருத்துவமனையில் இருக்கும் வரை நர்ஸ் குழிக்க வைத்து விடுவார்கள்..
நீங்கள் இன்னும் குழிக்க வைக்கவில்லை என்று கூறுகிறீர்கள்..
டாக்டர் ஒன்றும் சொல்லவில்லையா?
indhusha
Indhu pappa 2 kg dha iruka so dr ippo thannir utra kudadhu 3 kg ana piragu dha uthanumnu sollitanga adhunaladha kulikka veikkala pa. Daily towel bath dha pandro pa
குழந்தைக்கு குளிப்பு
//27நாட்கள் வரை குளிக்க வைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.// சில சமயங்களில் டாக்டர்களே இப்படி அட்வைஸ் கொடுப்பது உண்டு இந்து.
//மருத்துவமனையில் இருக்கும் வரை நர்ஸ் குளிக்க வைத்து விடுவார்கள்.// இதுவும் குழந்தைகளின் நிலையைப் பொறுத்தது. பிறந்த உடனே முழுவதாகக் கழுவி விடுவார்கள் தான். அதன் பிறகு குளிப்பு குழந்தையைப் பொறுத்தே இருக்கும்.
என் இரண்டாவது குழந்தைக்கு குறைந்தது ஒரு மாதம் குளிக்க வைக்க வேண்டாம் என்கிற அறிவுறுத்தலோடுதான் வீட்டுக்கு அனுப்பினார்கள். (இலங்கையில், வெயில் காலம், அப்போ ஃபான் போட கரண்ட் வேறு இல்லை. ஸ்பஞ்ச் பாத் தான்.) 28 வருடங்களுக்கு முன்பாக என்றாலும், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு ப்ரொஃபெஸரிடமிருந்து கிடைத்த அறிவுரை. குழந்தை எடை குறைவாக இருந்தார், கொஞ்சம் ப்ரீ மாச்சூர்ட். இன்றைய காலத்திற்கு அதெல்லாம் ஒரு விஷயமாகக் கணக்கிலேயே கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், குழந்தையின் நல்லதற்காகத் தான் சொல்லியிருப்பார். நிச்சயம் காரணம் இருக்கும். சில விடயங்கள் பெற்றோர் கவனத்திற்கு வராது; மருத்துவர்கள் பார்வை வேறு. என் சின்னவருக்கு மூத்தவர் போல வாக்சீன் எதுவும் மற்றக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் காலத்தில் கொடுக்கவில்லை. ஒரு மாத வித்தியாசம் இருந்தது. திட உணவு மூன்றாம் மாத்தில் கொடுக்க வேண்டும் என்றார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் ஒழுங்காகச் செய்தேன். எடை அதிகரிப்பு போதவில்லை. அதைப் பற்றி அவர்கள் எதுவும் செய்ய முயலவில்லை. ஆனால் துருதுருப்பாக இருப்பார். ஒரு வயதிற்கு முன்பே நடக்க ஆரம்பித்தாயிற்று. சுண்டெலி என்போம் நாங்கள். ;) இன்று நன்றாக ஆரோக்கியமான மனிதராக இருக்கிறார் சின்னவர்.
- இமா க்றிஸ்
imma amma
என் பையன் எப்ப பாத்தாலும் முக்கிக்கிட்டே இருக்கான்...யூரின் போனாலும் மோஷன் போனாலும் தூங்கும் போதும் கூட முக்கிட்டே இருக்கான். ஏன்.இது Hospital போக வேண்டிய Problem ஆ....என் பையன குளிக்கும் போது வாயில இருந்து சளியா துப்புனான்.ஆனா தூங்கும் போது கர் கர் னு எந்த Sound um இல்ல.சளி இருக்கானு எப்டி கண்டுபிடிக்கிறது.அதுக்கு என்ன பண்ணனும்
Jaisripriya
Jaisri
குழந்தைங்க முக்குறது நார்மல் தான்.தொடர்ந்து இருமல் இருந்த மட்டுமே டாக்டரா பாக்க வேண்டும் மத்த படி பயப்பட தேவை இல்லை
Love is god
இருமல்
இருமல் இருக்கிற மாதிரி தெரியல Sister
Jaisripriya
Imma amma kukarula sadham vachu...
7 மாத குழந்தைக்கு குக்கர்ல அரிசி பருப்பு வச்சி 5விசில் வச்சி மிக்சில அரைச்சி குஞ்சம் சிரக தூள் போட்டு குடுக்குறேன் அப்படி தரலாமா? என் வீட்டுகார்ரு குடுக்க கூடாதுனு சொல்லுராரு அதன் டவுட் பெறியவங்க யாரும் இல்லை தயவு செய்து சொல்லுங்கள் அம்மா
Love is god
கவிதா
குக்கரில் சமைக்கலாம் ஆனால் மிக்ஸியில் அரைத்து கொடுக்க கூடாது.. கீரை மத்து வைத்து கடைந்து கொடுங்கள்..
6-7விசில் வைத்தால் சாதம் குழைவாக இருக்கும்..
பருப்பு கூட பெருங்காயம் ஒரு துளி, மஞ்சள் ஒரு துளி, பூண்டு இரண்டு பல்,தக்காளி அரை சேர்த்து வேக வையுங்கள் சுவையாக இருக்கும்..
நெய் கலந்து கொடுங்கள்..
Hi frds
என் பையனுக்கு 6 மாதம் ஆகிறது.. நாங்க Hyderabad ல் இருக்கிறோம்.. இங்கு குளிர் காலம் முடிந்து வெயில் தொடங்கிவிட்டது..
1.என் பையன் உடம்பு dry ஆக உள்ளது.. Himalaya soap,massage oil use பண்றேன்..சில நேரம் coconut oil use பண்ணி massage பண்றேன்.. இருந்தாலும் drya தான் இருக்கு..என் பையன் skin healthya வைச்சுக்க என்ன பண்ணணும் சொல்லுங்க frds??
2.உதடு எப்பவும் drya தான் இருக்கு..சில நேரம் உதடு தோல் உரியுது..இது normala?? இல்ல doctor கிட்ட காட்டனுமா??
3.தண்ணீர் அடிக்கடி கொடுக்கலாமா??நான் vitamin drops, biscuit கொடுக்கும் போது மட்டும் தான் ஒரு சங்கு தண்ணீர் கொடுக்கிறேன்..
விஜி
முதலில்... கவிதா & இந்துஷா... நன்றி பதில் சொன்னதற்கு. நான் விடுமுறையிலிருந்த சமயம் கேள்விகள் பதிவாகி இருக்கின்றன. :)
~~~
2. அது இருப்பதுதான். பேபி லிப் பாம் கிடைக்கும். பூசலாம். வெண்ணெய் / தேங்காயெண்ணெய் தடவினாலே போதும்.
3. கொடுக்கலாம். இன்னும் அதிகமாகவே கொடுக்கலாம். கொதிக்க வைத்து ஆறவைத்துத்தானே கொடுக்கிறீர்கள்?
- இமா க்றிஸ்