மருந்து பற்றிய‌ சந்தேகம்

ஹலோ தோழிகளே

நான் திடீரென‌ உடல் எடை அதிகரித்து கொண்டே இருந்தேன் என்று தைராய்டு டெஸ்ட் எடுத்தேன் அதில் இபொழுதுதான் ஆரம்பம். டாக்டரிடம் காண்பித்தேன் மாத்திரை கொடுத்து உள்ளார்கள் 25 mg தான் என் சந்தெகம் என்ன்னவென்றால் மாதிரை சாப்பிடுவதால் என்ன‌ நடக்கும்? உடல் எடை குறையுமா? டாக்டர் மாத்திரை எப்படி சாபிட‌ சொன்னார் என்று மரந்து விட்டேன் சாபிடுவதர்க்கு முன்பா அல்லது பின்னா எப்படி சாப்பிட‌ வேன்டும் யாருக்காவது தெரியுமா

தைராய்டு மாத்திரை காலை உணவுக்கு முன் எடுக்க சொல்வார்கள்.. உங்களுக்கு ஆரம்ப அறிகுறியினால் நீங்கள் மருத்துவரிடம் சந்தேகத்தை கேட்டு விட்டு உண்ணுங்கள்...
தைராய்டு குறைய குறைய உடல் எடை பழைய நிலைக்கு வந்து விடும்..
தவறாமல் மாத்திரை எடுத்து கொள்ளுங்கள்.

//மாதிரை சாப்பிடுவதால் என்ன‌ நடக்கும்?// தைராயிட் அளவு சரியாகும். உடற் தொழிற்பாடுகள் ஒழுங்காக‌ நடக்கும்.

//உடல் எடை குறையுமா?// முன்பு அதிகரித்திருந்தால்... இனிக் குறைந்து சரியாகலாம். ஆனாலும் உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எடை சரியாகாது. உணவைக் கவனித்து உடற்ப‌யிற்சியும் செய்ய‌ வேண்டும்.

//சாபிடுவதர்க்கு முன்பா அல்லது பின்னா// உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக‌ அல்லது சாப்பிட்ட‌ இரண்டு மணி நேரம் கழித்து எடுக்க‌ வேண்டும். அதாவது... வெறு வயிற்றில் எடுக்க‌ வேண்டும்.

//எப்படி சாப்பிட‌ வேன்டும்// வெறும் தண்ணீரோடு விழுங்குங்கள். தினமும் மறக்காமல் எடுப்பது நல்லது. படுக்கைக்கு அருகே தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டால் எழுந்ததும் முதல் வேலையாக‌ மாத்திரையை எடுத்துவிடலாம். ஒரு மணி நேரம் கழித்து காப்பியோ சாப்பாடோ எதுவானாலும் சாப்பிடலாம். உணவோடு / நீர் தவிர்ந்த‌ வேறு பானங்களோடு சாப்பிடால் மாத்திரையின் முழுப் பலன் கிடைக்காது.

‍- இமா க்றிஸ்

Hypo thyroid irunthal after food tablet poda solluvanga. Ninga dr kita again kalunga.

ஹலோ தோழிகளே

டாக்டர் உடல் இளைக்க‌ தினமும் வெறும் வயிற்றில் தேன் கலந்த‌ எலுமிச்சை சாறு குடிக்க‌ சொல்லி இருக்கிறார்கள். முதலில் எதை குடிப்பது மாத்திரையா? எலுமிச்சை சாறா?

//Hypo thyroid irunthal after food tablet poda solluvanga.// அப்படி இல்லைங்க‌. எனக்கு ரொம்...ப‌ காலமா இருக்கு. இப்போ நீங்க‌ தட்டினதைப் படிச்சுட்டு, ஒரு தடவை மாத்திரை டப்பாவை எடுத்துப் படிச்சுட்டு வந்து தட்டுறேன். உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் கழிச்சு எடுக்கச் சொல்லியிருக்காங்க‌. 'உணவுக்குப் பிறகு / உணவோடு எடுக்கக் கூடாது; வெறு வயிற்றில் எடுக்க‌ வேண்டும்,' என்கிறதுதான் எனக்குக் கிடைத்த‌ அறிவுரை.

//Ninga dr kita again kalunga.// அது நல்ல விடயம்.

‍- இமா க்றிஸ்

//முதலில் எதை குடிப்பது மாத்திரையா? எலுமிச்சை சாறா?// காலை எழுந்ததும் முதலில் மாத்திரையை எடுத்தால் ஒரு மணி கழித்து எதுவானாலும் சாப்பிடலாம் ‍ எலுமிச்சை சாறு உட்பட‌. இதுதான் மிகச் சிறந்ததாக‌ இருக்கும்.

ஒரு தடவை எதையாவது சாப்பிட்டு விட்டால் பிறகு இரண்டு மணிநேரம் என்று கணக்கு வைத்து அதன் பின் மாத்திரை சாப்பிடுவது சற்று சிரமம். மறதியாக‌ எதையாவது சாப்பிட்டு வைப்போம். அதனால் அதிகாலையில் மாத்திரை ‍எடுப்பது வசதி.

எலுமிச்சைச் சாற்றை முதலில் குடிக்க‌ விரும்பினால், நினைவாக‌ 2 மணி நேரம் கழித்து மாத்திரையைப் போடுங்கள். அதற்கு முன் எடுத்தால்... அது மாத்திரையை எடுக்காமல் விட்டதற்குச் சமன். பயன் கிடைக்காது.

‍- இமா க்றிஸ்

Ennaku therinthu ennoda relatives 2peruku thyroid iruku morning elanthathum mt stomach la than tablet eduka solli dr solli irukanga.tablet eduthu 1/2hour kalithu lemonjuice and honey kalanththu sapdunga.udal ilaika walking illana 8 vadivil nadaipayarchi seiyalam.itu thodarnthu seinja nalla palan iruku.

//tablet eduthu 1/2hour kalithu lemonjuice and honey kalanththu sapdunga.// இப்படிச் சாப்பிட்டால் எலுமிச்சைச் சாற்றினால் பலன் கிடைத்தாலும் மாத்திரையினால் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போகும் என்று தோன்றுகிறது.

இங்க‌ நாங்க‌ சொல்றதையெல்லாம் கேட்காமல் டாக்டர்ட்ட‌ கேட்டு அவங்க‌ சொல்றபடி மருந்துகளை எடுங்க‌ சகோதரிகளே!

‍- இமா க்றிஸ்

Thyroid tablet before food than podanum, ennoda relation orutharukku thyroid level harmones excess a work akthunu solli after food poda sonnanga.but dr kita katkirathu best

//Hypo thyroid irunthal after food tablet poda solluvanga.// என்று நீங்கள் இன்னொரு சகோதரிக்கு முன்பு சொல்லியிருந்தீர்கள் சகோதரி. இப்போது //Thyroid tablet before food than podanum,// என்று சொல்லியிருக்கிறீர்கள். //ennoda relation orutharukku thyroid level harmones excess a work akthunu solli after food poda sonnanga.// இது, 'ஹைப்பர்' தராய்டிசம் இல்லையா! நான் சொன்னது, 'ஹைப்போ' தைராய்டிசம் பற்றி மட்டும்தான்.

நான் நிச்சயம் சரியானபடி எடுக்கிறேன். அதனால்தான் இப்போது நன்றாக‌ இருக்கிறேன்.

நாம் டாக்டர் இல்லை கண்ணா. சந்தேகம் இருப்பவர்கள் அவரவர் டாக்டரிடம் பேசி, சொல்வதன்படி மருந்துகளை எடுப்பதுதான் நல்லது. அவங்க‌ அவங்க‌ டாக்டர்ட்ட‌ கேட்டுக் கொள்ளட்டும். பிழையாக‌ எடுத்தால்... பிரச்சினை அவங்களுக்குத்தானே! நமக்கு இல்லை அல்லவா! :‍) அவங்க‌ இங்க‌ வந்து கேட்டதே முதலில் பிழை. :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்