கர்ப்பமாய் இருந்தபோது தைராய்டு இருந்ததால் குழந்தையை நினைத்து பயம்

கர்ப்பமாய் இருந்தபோது தைராய்டு பிரச்னை இருந்தது. இப்போது குழந்தைக்கு 11மாதம், நலமாய் உள்ளான்,active ஆக இருக்கிறான் என்று doctors உட்பட அனை வரும் சொல் வார்கள். இருந்தாலும்,வளர்ந்து வரும் காலத்தில் பிள்ளைக்கு பாதிப்பு ஏதாவது இருக்குமா,தைராய்டு இருந்த தாய்மார்களே உங்கள் அனுபவங்களை கூறுவீர்களா plz.பிள்ளைகள் பற்றியும் சொல்வீர்களா தயவு செய்து.சிலரின் பேச்சால் கவலையாய் உள்ளேன்

//கர்ப்பமாய் இருந்தபோது தைராய்டு பிரச்னை இருந்தது.// அப்போது மருந்து எடுத்திருப்பீர்கள் இல்லையா! அப்படியானால் யோசிக்க‌ வேண்டாம்.

//இப்போது குழந்தைக்கு 11மாதம், நலமாய் உள்ளான்,active ஆக இருக்கிறான் என்று doctors உட்பட அனை வரும் சொல் வார்கள்.// பிறகு என்ன‌ யோசனை!!

//இருந்தாலும்,வளர்ந்து வரும் காலத்தில் பிள்ளைக்கு பாதிப்பு ஏதாவது இருக்குமா,// நீங்கள் அப்போது மாத்திரை எடுத்திருந்தால் இது பற்றிப் பயம் வேண்டாம்.

//சிலரின் பேச்சால் கவலையாய் உள்ளேன்// கர்ர்... கவலைப்படுவதால் ஏதாவது சரியாகுவது உண்டா! இல்லை அல்லவா! 'சிலர்' எதற்குத்தான் கமண்ட் அடிக்க‌ மாட்டார்கள்! அது சரி... 'இப்போ ரிவர்சில் போய் எதையாவது மாற்ற‌ முடியுமா?' என்று அவர்களிடம் கேளுங்கள். :‍) 'ஆம்,' எனமாட்டார்கள்.

இப்போ நீங்கள் குழந்தையோடு சந்தோஷமாக‌ இருக்க‌ வேண்டும். அவரது சின்னச் சின்ன மாற்றங்களைச் சந்தோஷமாக‌ அனுபவிக்க‌ வேண்டிய‌ காலம் இது. அதை விட்டுவிட்டு இல்லாததை நினைத்து இருக்கும் சந்தோஷங்களை அனுபவிக்காது விட‌ வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக‌ இருந்தால்தான் குழந்தையும் சந்தோஷமான‌ ஆரோக்கியமான‌ குழந்தையாக‌ வளரும். இனி யாராவது இதைப் பற்றிப் பேசினால், 'வரும் போது பார்த்துக் கொள்வேன்,' என்று சொல்லி வாயை மூட‌ வையுங்கள்.

பிரச்சினை வந்தால் மட்டும் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்பதை யோசித்து முடிவு செய்ய‌ வேண்டுமே தவிர‌ எதற்கும் வருமா வருமா என்று தேவையில்லாமல் யோசிக்கக் கூடாது. இப்படி இருந்தால் நிம்மதியாக‌ வாழ‌ முடியாது.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி. உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாகவும் தைரியமாகவும் உள்ளது.

அந்ந்ந்ந்த‌ சிலரிடம் என் புள்ளைக்கு ஒருவேளை தைராய்டு வந்தால் என்ன‌ பண்ணணும்னு கேளுங்க‌. வாயடைச்சிடுவாங்க‌.

எனக்கு ஒரு உறவினர் எப்போதும் நானோ என் குடும்பத்தாரோ ஆஸ்பத்திரியில் இருக்கும்போது சொல்வார் " எனது சித்தப்பா x‍x‍ ஆஸ்பத்திரியில் பெரிய‌ டாக்டராக‌ இருக்காங்க‌.அங்க‌ வேணும்னா சொல்லுமா. பார்க்கலாம். இந்த‌ ஆஸ்பத்திரியில் கிடந்து ஏன் கஷ்டபடனும். ஒருநாள் என் கணவருக்கு டெங்கு இரண்டு வருடம் முன்பு. தீபாவளி சமயம். நாங்கள் ஊருக்கு போகும் டிக்கெட் கேன்சல் பண்ணி , ஊரிலிருந்து எந்த‌ பெரியவர்களும் வர‌ முடியாத‌ நிலை. வீட்டிற்கு எதிரே உள்ள‌ 25 பழமையான சிறிய‌ ஆஸ்பத்திரி ஒன்றில் அட்மிட் செய்தேன்.என் பொன்னு 5 வயசு . சித்தி வீட்டில் தங்க‌ வைத்தேன். தூங்கி 4 நாளாச்சி, 1 மணிக்கு ஒரு தடவை திரவ‌ உணவு கொடுத்தேன். மொபைலில் என் சொந்த‌ மருத்துவர்களான‌ அத்தை,மாமா,சித்தி தொடர்பு கொண்டு எல்லா ரிப்போர்ட்டயும்,மருந்துகளையும் சரி பார்த்து அவ்ளோ டென்சனாக‌ இருக்கிரேன். அப்போ வந்து வழக்கம்போல் என் சித்தப்பா டாக்டர்னு ஆரம்பிச்சார்.நான் கடுப்பில‌ சொன்னது. சரி மாமா. நீங்களும் ரொம்ப‌ நாளா சொல்றீங்க‌.உங்க‌ சித்தப்பாட்டயே காட்டுவோம். ஆம்புலன்ஸ் கூப்டுங்க‌. எனக்கு இவர‌ சரி பண்ணி கொடுங்க‌. மனுசர் ஆடிட்டார்.அப்ரமா மொபைல் எடுத்துட்டுபோய்டு யார்டயோ பேசிட்டு " என் சித்தப்பா இல்ல‌. நீ இங்கயே பாருன்னு சொன்னார். நா உடனே அவர் எப்போ வருவார். எப்போ வந்தாலும் ஒக்கே. அவர் மொபைல் நம்பர் கொடுங்க‌. நீங்களே பேசி அவர் இங்க‌ வந்ததும் சொல்லுங்கன்னு சொல்லிட்டேன். இதோட‌ இந்த‌ பிரச்சனைக்கு முற்றுபுள்ளி.இது தெரியாமல் 5 வருடம் அனுபவிச்சிட்டேனு இருந்தது :‍) கணவர் முளித்ததும் அவர்ட்ட‌ நடந்ததை சொல்லிட்டேன். அவர் நீ என்னை மட்டும் பாரு. மத்தவங்க‌ பேச்சை வகை வைக்காதேனு சொல்லிட்டார்.

சொல்றவங்க‌ சொல்லிட்டே இருப்பாங்க‌. உங்களுக்கு ஏதாவது குழப்பாக‌ இருந்தால் டாக்டர்ட‌ கேட்டு தெளிவுபடுத்துங்க‌. எதிர்காலத்தில் இப்டி ஆளுங்களை நிறைய‌ பார்க்க‌ வேண்டிருக்கும்.
நல்லதே நடக்கும்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மிகவும் நன்றி உங்கள் கருத்திற்கு.

மேலும் சில பதிவுகள்