//அதனால் ஏதும் பிரச்சனை வருமா?????// ஆமாம், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விடயம் இது.
ஒரு நாள் உணவு கிடைத்தால், அதுவும் சுதந்திரமாகச் சாப்பிடக் கிடைத்தது எனும் போது, எந்தப் பிராணியும் மீண்டும் அந்த இடத்தை நாடி வருவது இயல்பு. //வீட்டிற்குள்// என்கிறீர்கள். எப்படி? வாசல் வழியாகவா அல்லது ஜன்னல் வழியாகவா? அல்லது கூரையில் இடைவெளி ஏதாவது இருந்து உள்ளே வந்ததா? எப்படி இருந்தாலும், அந்த வழியை அடைக்கப் பாருங்கள். ஒரு வழி அடை பட்டால் இன்னொரு வழியைத் தேடலாம் அவர். அவரது பிரச்சினை பசி மட்டும்தான். அதற்காக வெளியே சாப்பாடு வைக்க ஆரம்பிக்க வேண்டாம். ஆளை என்கரேஜ் பண்ணுவது போல எந்த நடவடிக்கையும் வேண்டாம். பார்க்க அழகாக இருப்பார், அன்பாகவும் தெரியலாம். :) ஆனால் பிறகு சிரமம்.
சமையலறையில் நுழைந்திருந்தாரானால், நீங்கள் எல்லாவற்றையும் கப்போர்டில் வைப்பது நல்லது. அவை புத்திசாலிகள்; திறந்து எடுக்கத் தெரிந்தவை. பாதி சாப்பிட்டிருக்கும் உணவு அல்லது அவை திறந்த உணவுகளை வீசிவிடுங்கள். சாப்பிட்டால் நோய்த் தொற்று வரலாம்.
தனியாக ஒரு குரங்கு மட்டும் வருவது குறைவு. அவை குடும்பமாக வாழும் விலங்குகள்.
குழந்தைகளைக் கவனமாக பெரியவர்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள். கையில் உணவோடு வெளியே செல்ல விட வேண்டாம். உணவை எடுக்க வருவார்கள். தடுத்தால் கோபம் வரும். கடிக்கவும் கூடும்.
திரும்ப உங்கள் பக்கம் வராமல் அப்படியே வேறு வழியே போயிருந்தாரானால் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் ஏரியாவிலேயே சுற்றுகிறார் என்று கண்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
இல்லைங்க அது இங்க எப்பயாவது தான் வரும். வீட்டிற்குள் பின் வாசல்ல மொட்டமாடில இருந்து வந்ததது. சரிங்கமா நான் இனி கவனமா பின் வாசல்ல மூடியே வைக்கிறேன். பதிவுக்கு நன்றி
Haseen
கண்டிப்பாக எந்த பிரச்சனையும் வராது.
Nithi
Ok pa romba thanks
Nithi
Na payanthudu irunthen problem clear pannikonga romba thanks
குரங்கு
//அதனால் ஏதும் பிரச்சனை வருமா?????// ஆமாம், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விடயம் இது.
ஒரு நாள் உணவு கிடைத்தால், அதுவும் சுதந்திரமாகச் சாப்பிடக் கிடைத்தது எனும் போது, எந்தப் பிராணியும் மீண்டும் அந்த இடத்தை நாடி வருவது இயல்பு. //வீட்டிற்குள்// என்கிறீர்கள். எப்படி? வாசல் வழியாகவா அல்லது ஜன்னல் வழியாகவா? அல்லது கூரையில் இடைவெளி ஏதாவது இருந்து உள்ளே வந்ததா? எப்படி இருந்தாலும், அந்த வழியை அடைக்கப் பாருங்கள். ஒரு வழி அடை பட்டால் இன்னொரு வழியைத் தேடலாம் அவர். அவரது பிரச்சினை பசி மட்டும்தான். அதற்காக வெளியே சாப்பாடு வைக்க ஆரம்பிக்க வேண்டாம். ஆளை என்கரேஜ் பண்ணுவது போல எந்த நடவடிக்கையும் வேண்டாம். பார்க்க அழகாக இருப்பார், அன்பாகவும் தெரியலாம். :) ஆனால் பிறகு சிரமம்.
சமையலறையில் நுழைந்திருந்தாரானால், நீங்கள் எல்லாவற்றையும் கப்போர்டில் வைப்பது நல்லது. அவை புத்திசாலிகள்; திறந்து எடுக்கத் தெரிந்தவை. பாதி சாப்பிட்டிருக்கும் உணவு அல்லது அவை திறந்த உணவுகளை வீசிவிடுங்கள். சாப்பிட்டால் நோய்த் தொற்று வரலாம்.
தனியாக ஒரு குரங்கு மட்டும் வருவது குறைவு. அவை குடும்பமாக வாழும் விலங்குகள்.
குழந்தைகளைக் கவனமாக பெரியவர்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள். கையில் உணவோடு வெளியே செல்ல விட வேண்டாம். உணவை எடுக்க வருவார்கள். தடுத்தால் கோபம் வரும். கடிக்கவும் கூடும்.
திரும்ப உங்கள் பக்கம் வராமல் அப்படியே வேறு வழியே போயிருந்தாரானால் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் ஏரியாவிலேயே சுற்றுகிறார் என்று கண்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
- இமா க்றிஸ்
Imma Amma