Karbapai Weaknees

Hiii friends enakku marriage aagi 5yrs aaguthu 4yrs LA oru ponnu irukku apram pregnant aagave illa date mattum 10to 15 days thalli pogum avlothan..

Ippo than poittu doctor ah pathom avanga sila tablets kuduthanga Athu saaptathum 2 1/2 maasam pregnant ah irunthanga my wife check pannathula conform nu sollitanga but pregnant time LA bleeding aagakudathulla en wife Ku bleeding aaittu irunthathu so scan pannom athula karu death aagi 5days aaguthunnu sollitanga naanga abortion pannitom...

Karbapai weakness ah irunthathala than ipdi aachi nu doctor sonnanga enna reasonala karbapai weak aaguthu karbapai strong aaga enna seiyanum sollunga frndss

Athuku doc tablets kudupanka atha follow pannunka and karupu ulunthu la etha samachi sapda sollunka athu karbapai strong aakum

Daily pomagranet and dates sapda sollu ga,

//karu death aagi 5days aaguthunnu sollitanga// அப்படியானால் அதன் பிறகு செய்யும் சிகிச்சையை அபார்ஷன் என்பது இல்லை. கரு உயிருடன் இருந்து, கலைத்தால் அது அபார்ஷன். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், எப்போதாவது நீங்கள் வேறு மருத்துவரைக் கன்சல்ட் பண்ணுவீர்களானால் சரியான‌ சொற்களைப் பயன்படுத்துவீர்கள் என்னும் எண்ணத்தில்.

இங்கு சகோதரிகள் சில‌ உணவுகளைக் குறிப்பிடுவார்கள். கொடுங்கள் ஆனால் மருத்துவர் சொல்பவற்றையும் கட்டாயம் சேர்த்துக் கொடுக்க‌ மறக்க‌ / மறுக்க‌ வேண்டாம்.

இன்னொரு சிறிய‌... பெரிய‌ விடயம். நீங்களே இங்கு பதிவு கொடுத்திருப்பதால் சொல்லத் தோன்றியது. நீங்கள் உங்கள் மனைவியை ஒரு நோயாளியாகவும் இழந்து போனதை ஒரு கருவாகவும் நினைத்திருப்பீர்கள். அடுத்து கருத்த‌ரிப்பது எப்படி என்பதைப் பற்றியே உங்கள் சிந்தனை இருக்கலாம். ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை... இது தாய்மை பற்றிய‌ விடயம். உங்கள் மனைவி இழந்திருப்பது அவரது குழந்தையை, வெறும் ஒரு கருவை அல்ல‌. அவருக்கு இப்போது உங்கள் ஆறுதல் மிகவும் அவசியம். முதலில் அவரது மனது சரியாக‌ இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அல்லாமல் மீண்டும் தாய்மையடைவதற்கான‌ சிகிச்சையைப் பற்றிப் பேச‌, அதைப் பற்றி மட்டும் பேசினால் வெளிப்படையாகப் பேச‌ இயலாவிட்டாலும் உள்ளே கவலைப்படுவார். அவரைத் தானாக‌ இந்த‌ விபத்திலிருந்து வெளியே வர‌ விடுவது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவசரப்படுத்த‌ வேண்டாம். சிகிச்சையையும் அவரது மனநிலையையும் பாலன்ஸ்டாக‌ மேம்படுத்தப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Normal deliverக்கு கீழ நரம்பு தையல் போட்டுருகாங்க.இத பிரிக்க டாக்டர்கிட்ட போகனுமா...நாலு நாள் ஆச்சு இன்னும் சரி ஆகல.வலிக்குது.....பால் கட்டிக் கொள்கிறது.வலிக்கிது என்ன பன்ன....பால் ஊருவதை தடுக்க....

Jaisripriya

குழந்தை பிறந்து 5நாளே ஆகிறது...தீட்டு மிக கம்மியாக உள்ளது.ஏன் இப்படி உள்ளது..

Jaisripriya

தையல் தானா பிரிஞ்சுரும்.. கல் உப்பை மார்பில் நன்கு உரசி தடவி கிணரில் போடவும்.

//மார்பில் நன்கு உரசி தடவி கிணரில் போடவும்.// கிணற்று நீரில் அழுக்கான‌ பொருளைப் போட்டால் நீர் சுத்தம் குறையுமே! எல்லோரும் பயன்படுத்தும் நீர்; சுத்தமாக‌ வைத்திராவிட்டாலும் அழுக்கு ஆக்காமலாவது இருக்கலாமே! கையில் தேய்த்ததைப் போடுவதை விட‌... இது... படிக்கவே கொஞ்சம் உவ்வேயாக‌ இருக்கிறது. அது குடிநீர் அல்லாமல் கூட‌ இருக்கட்டும். நீர், நீர்தானே! 2017ல் கூட‌ இப்படியெல்லாம் நம்புகிறீர்களா!

//கல் உப்பை மார்பில் நன்கு உரசி// அது தோலைப் பதம்பார்த்துவிடாதா! உடலின் மென்மையான‌ பாகங்களை மென்மையாகக் கையாள‌ வேண்டாமா?

‍- இமா க்றிஸ்

//நாலு நாள் ஆச்சு இன்னும் சரி ஆகல.// ஆக‌ ஐந்து நாட்கள்தானே ஆகி இருக்கு! இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் பொறுங்க‌. சரியாகிவிடும்.

//இத பிரிக்க டாக்டர்கிட்ட போகனுமா.// இப்போ பெரும்பாலும் கரைந்து போகும் தையல்தான் போடுகிறார்கள். இருந்தாலும்... இதையெல்லாம் டாக்டரிடமே கேட்டிருக்க‌ வேண்டாமா! இங்கே வந்து கேட்கிறீர்களே!

//என்ன பன்ன....பால் ஊருவதை தடுக்க....// இப்போ தடுக்க‌ ஏதாவது பண்ணப் போய், 'பால் போதவில்லை; என்ன‌ பண்ண‌?' என்று கேட்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது. பத்திரம். மிகவும் அவசியம் என்றால் மட்டும் வெளியேற்ற‌ வழி பாருங்கள். தடுக்க‌ எதுவும் செய்யாதிருப்பது நல்லது.

~~~~~~~
நீங்கள் படித்துப் பார்க்க‌ சில‌ இழைகள்...
www.arusuvai.com/tamil/node/33877
www.arusuvai.com/tamil/node/9491
www.arusuvai.com/tamil/node/28492

‍- இமா க்றிஸ்

இது எங்கள் செட்டிநாடு வழக்கம். உப்பு தேய்க்க வேண்டும் என்றால் கரடு முரடாக அல்ல. மென்மையாக உபயோகிக்க வேண்டும். சந்தேகம் கேட்ட தோழிக்கு எனது கருத்து // உவ்வேயாக‌ இருக்கிறது// அப்படி இருந்தால் படிகாதீங்க..

நான் அப்படி பதிவிட்டது பெரிய‌ தவறு என்பதை இப்போது உணர்கிறேன். ;( மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் மென்மையாக‌, நாகரிகமாக‌ என் பதிலைக் கொடுத்திருக்கலாம், கொடுத்திருக்க‌ வேண்டும். தப்பு. ;( சிலசமயங்களில் நானாகவே என் தவறை உணர்ந்து மீண்டும் வந்து திருத்திவிட்டுப் போவது உண்டு. இம்முறை இங்கு வருகிற‌ நேரம் குறைந்திருப்பதால் என் தவறைத் திருத்திக் கொள்ளுமுன் உங்கள் கண்ணில் பட்டிருக்கிறது. இது எனக்கு ஒரு பாடம். இனி யோசித்துப் பதில்களைத் தட்டுவேன்.

என் பதில் உங்களையும், படிக்கும் வேறு சிலரையும்காயப்படுத்தக் கூடும் என்பதை பதில் கொடுத்த‌ போது உணராது போன‌ என் மடத்தனத்தை வெகுவாகவே நொந்துகொள்கிறேன். ;(( மீண்டும் மன்னிப்புகள்... அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்