2 month Baby vomiting

நான் அறுசுவைக்கு புதிது. திருமனமாகி நான்கு வருடத்திற்கு பின் ஆண் குழந்தை பிறந்து 52 நாள் ஆகிறது. பால் குடித்த உடன் வாந்தி எடுக்கிறான். தட்டி குடுத்து ஏப்பம் வந்தபினும் வாந்தி எடுக்கிறான். ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.

குடித்த பால் முழுவதும் வாந்தி எடுக்கிறானா அல்லது ஏப்பம் வரும்போது சிறிது கட்டியாக வெள்ளை நிறத்தில் எடுக்கிறானா. சிறிது கட்டியாக வெள்ளை நிறத்தில் எடுப்பதை சத்தி என்று சொல்வார்கள் அதனால் பிரச்சனை இல்லை

குடிப்பதில் பெரும்பகுதி வாந்தியாக‌ வெளியேறுகிறது என்றால் ஒரு தடவை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அப்படி இருந்தாலும் கூட‌ பால் கொடுப்பதை நிறுத்த‌ வேண்டியது இல்லை. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். ஃபார்முலா என்றால் கூட‌ பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து கொடுக்கலாம், குறிப்பிட்ட‌ அந்தப் பால்மா ஒத்துக்கொள்கிறது என்று நிச்சயம் தெரிந்தால். குழந்தைக்கு நீரிழப்பு ஏற்படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். இதற்கான‌ ஆலோசனை உங்கள் மருத்துவரிடமிருந்து கிடைக்கும்.

குடித்த‌ பால் சிறிய‌ அளவில் வெளியே வருகிறது என்றால் பிரச்சினை இல்லை. சரியாகிவிடுவார்.

~~~~~~~~~
//சிறிது கட்டியாக வெள்ளை நிறத்தில் எடுப்பதை சத்தி என்று சொல்வார்கள் // :-) படித்ததும் சும்மா பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

இலங்கையர் வாந்தி என்கிற‌ வார்த்தையைப் பேச்சுவாக்கில் பயன்படுத்துவதே கிடையாது. அங்கு பேசும் போது, 'வாந்தி' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துபவர், இந்தியர் அல்லது மலையகத்தைச் சேர்ந்தவராக‌ இருப்பார். :-) மசக்கை வாந்தியையும் சத்தி என்றுதான் சொல்லுவோம்; பித்த‌ வாந்தியையும் சத்தி என்றுதான் சொல்லுவோம். வாய் வழியே என்ன‌ உணவு திரும்ப‌ வெளியே வந்தாலும் அந்த‌ ஒரே சொல் தான் அங்கே. வாந்தி என்கிற‌ வார்த்தை ஊடகங்களிலும் மருத்துவ‌மனைச் சுவரொட்டிகளிலும் வெளியீடுகளிலும் தான் கண்ணில் படும். மலையகத்திலும் தொலைக்காட்சியிலும் தவிர‌ வேறு எங்கும் பேச்சுவழக்கில் கேட்கக் கிடையாது.

‍- இமா க்றிஸ்

Thanks for your information imma. நான் திருநெல்வேலி. இங்கு பிறந்த பிள்ளை எடுக்கும் வாந்தியை அவ்வாறு கூறுவார்கள்

//குடித்த‌ பால் சிறிய‌ அளவில் வெளியே வருகிறது என்றால் பிரச்சினை இல்லை//

இதற்கு என் பாட்டி சிறிது சத்தி எடுத்தால் ஒன்றும் இல்லை சளி வெளியே வந்து விடும் என்று கூறியுள்ளார்

குடித்த முழுவதும் எடுப்பதில்லை. குடித்த உடன் பாலாகவும் சில நேரங்களில் கட்டியாகவம் வருகிறது.

மருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்விலை.நீரிழப்பு இருப்பதாக தெரியவில்லை. Active ஆக இருகிறான். ஆனால் சத்து பிடிக்கவிலை.தாய்பால் பேதவில்லை ஓருவேளையாவது formula milk தருகிறேன். அது குற்றவுணர்வை தருகிறது.

மருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்விலை.நீரிழப்பு இருப்பதாக தெரியவில்லை. Active ஆக இருகிறான். ஆனால் சத்து பிடிக்கவிலை.தாய்பால் பேதவில்லை ஓருவேளையாவது formula milk தருகிறேன். அது குற்றவுணர்வை தருகிறது.

சத்து பிடிக்கவில்லை என்று எதைவைத்து கூறுகிறீர்கள். Dnt worry he s active so be happy. பால் போதவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நன்றாக சாப்பிடுங்கள் rusk வேர்க்கடலை மிட்டாய் சாப்பிடுங்க. வீட்ல பெரியவர்களிடம் பால் சுரக்க மருந்து கேட்டு சாப்பிடலாம். குழந்தை பால் குடிக்க குடிக்க பால் சுரக்க ஆரம்பிச்சிட்டான்.

எனக்கும் ஆரம்பத்தில் பால் கம்மியாக தான் இருந்தது. அப்பறம் சரி ஆயிடுச்சு

வீட்டில் பெரியவர்கள் இல்லை
என் தாயும் உடல்நிலை சரியில்லாதவர்.
கடலை, rusk சாப்பிடறேன்.பதில் எழுதிய தோழி ராலியா மற்றும் imma amma Ku நன்றி.

//மருத்துவர்கள்(3 பேர்) தந்த மருந்து(domstop) பயனளிக்விலை.// அப்படியானால் பிரச்சினை இல்லை என்று எடுக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாக‌ இருக்கும் ஏப்பத்துடன் வெளிவரும் வாந்திதான். குறைவாகத் தாம் வருகிறது என்கிறீர்கள். //நீரிழப்பு// இப்படி கொஞ்சமாக‌ இருக்கும் போது வராது. பெரிதாக‌ வாந்தி எடுக்கும் போதுதான் வரும். யோசிக்க‌ வேண்டாம். //Active ஆக இருகிறான்.// அப்போ பிரச்சினை இல்லை. //ஆனால் சத்து பிடிக்கவிலை.// ராலியாவும்தா கேட்டிருந்தார்கள். எதை வைத்து இப்படி நினைக்கிறீர்கள்? வயிற்றோட்டம் இல்லை. ஆக்டிவ்வாக‌ இருக்கிறார். பிறகு என்ன‌? எல்லாக் குழந்தைகளும் குண்டாக, கொழுக்மொழுக் என்று இருப்பதில்லை. அது அவரவர் ஜீன்சைப் பொறுத்தது. மெலிவாக‌, சின்னதாக‌ இருக்கிறார், எடை அதிகரிப்பது குறைவாக‌ இருக்கிறது என்பதை வைத்து எதையும் முடிவு செய்ய‌ வேண்டாம். குழந்தை நன்றாக‌ இருந்தால் போதும்.

//ஓருவேளையாவது formula milk தருகிறேன்.// நல்லது. //அது குற்றவுணர்வை தருகிறது.// :‍) ஏன் குற்ற‌ உணர்வு? பால் போதாமல் பசியில் விட்டிருந்தால்தான் குற்ற‌ உணர்வு வரவேண்டும். நல்ல‌ காரியம் செய்ததற்கு குற்ற‌ உணர்வு ஏன்? இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது. :‍)

ராலியா சொன்னது போல‌, ஆரம்பத்தில் பெரும்பாலும் எல்லா தாய்மாருக்கும் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். குழந்தை குடிக்கக் குடிக்க‌ அதிகம் வரும். பாலூட்டுவதற்கு பத்து நினமிடம் முன்பு சூடாக‌ பால், அல்லது மதர்ஸ் ஹார்லிக் ஏதாவது ஒரு கோப்பை பருகி விட்டுக் கொடுங்கள். பால் சுரக்கும். புரம் அதிகம் சாப்பிடுவதும் பலனளிக்கும். மீன் சாப்பிடுவீர்களா?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்