என் மகன்

நான் அறுசுவைக்கு புதிது.என் மகன் எல்கேஜி படிக்கிறான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் டிவியில் உட்கார்ந்து விடுகிறான். கார்ட்டுனில் வரும் கதாபாத்திரமாக தன்னை நினைத்து கொண்டு அதுபோலவே நடந்து கொள்கிறான் நான் டிவி கேபிளை கழட்டி விடுகிறேன் அப்படி செய்தால் எனக்கு இரண்டு மாத குழந்தை உள்ள அதை தூங்க வைக்காதே என பாடுபடுத்துகிறான் இல்லையெனில் மொபைலில் சண்டை காட்சிகள் வரும் கேம்களை விளையாடுகிறான் எங்கள் வீட்டின் பக்கத்தில் அவன் வயது பிள்ளைகள் யாரும் இல்லை அதனால் வாசலிலும் சென்று பிள்ளைகளோடு விளையாடுவதில்லை. அவனுக்கு கற்பனை எண்ணம் அதிகமாய் உள்ளது.பெரியவர்களை மதிப்பதும் இல்லை எனக்கு அவனுடைய எதிர்காலம் நினைத்து கவலையாக உள்ளது அவனை மாற்ற உதவி செய்யுங்கள்...

சின்னவருக்குப் பிடித்தது போல‌, அவரை பிஸியாக‌ வைத்திருக்கக் கூடிய‌ விளையாட்டுப் பொருட்கள் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமோ! ரேசிங் கார் செட் அப்படி ஏதாவது. சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

‍- இமா க்றிஸ்

:‍) எப்படியோ இரண்டு தடவைகள் பதிவாகி இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

பொதுவாக தற்கால குழந்தைகளை இவ்வாறு பழுதாக்குவதே தொலைக்காட்சியில் அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகளை பார்க்க விடுவதும், கையில் கைபேசியை கொடுப்பதும் அதுவும் ஒன் லைனில் அவர்களே தேவையான கார்ட்டூன் தேர்ந்தெடுப்பதும். அதை பெற்றோரே பெருமிதமாய் சொல்லிக் கொள்வார்கள்.

எனக்கு ஒரே மகள். உறவினரும் அருகில் இல்லை. அவருடைய பொழுது போக்கில் ஒரு பங்கு வகிப்பது தொலைக்காட்சி பார்ப்பது தான். ஆனால் எவ்வளவு பார்ப்பது எது பார்ப்பது என என் கட்டுப்பாடு நிறைந்திருக்கும். இப்போது 10 வயதாகி விட்டது. இது வரை நெற்றில் எதுவும் தனியாக தெரிவு செய்ததில்லை. அவருக்கு தேவையானதை அவருடன் சேர்ந்து நானே தெரிவு செய்து கொடுப்பேன். மற்றப்படி போன் ஓப் லைனில் தான் பார்ப்பார். அதற்காக நான் கறாரான தாயும் இல்லை. ஒரு நட்புடனான தாயாகவே இருக்கின்றேன்.

பிள்ளைகள் மனம் நோகுமே என்று கேட்டதெல்லாம் செய்யாதீர்கள் சகோதரி . இல்லை,வேண்டாம் என்ற சொற்களை பயன்படுத்துங்கள். அன்பான கண்டிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.
பிழை இருந்தால் மன்னிக்கவும் .

சகோதரி இமா அவனுக்கு எந்த விளையாட்டு பொருள் வாங்கி கொடுத்தாலும் அதை வைத்து ஓரிரு மணி நேரமே விளையாடுகிறான். மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடுகிறான், நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவள். அறிவுரை சொல்ல பெரியவர்கள் யாரும் அருகில் இல்லை

சகோதரி ரேணூகா முதல் குழந்தை அதுவும் ஆசையாய் பெற்ற பிள்ளை என்பதால் அதிகம் செல்லம் கொடுத்துவிட்டோம் இப்பொழுது தவறு என வருந்துகிறேன் இப்போது கண்டிப்பதால் அவன் எங்கள் மீது கோபம் கொள்கிறான். என்ன செய்வதென தெரியவில்லை

ரேணுகா சொன்னது உண்மைதான். இப்போது உங்களுக்கும் அவரை மனம் மாற்றச் செலவளிக்க‌ முன்பு போல‌ அதிக‌ நேரம் கிடைக்காது எனும் போது சிரமம்தான்.

//இல்லை,வேண்டாம் என்ற சொற்களை பயன்படுத்துங்கள்.// உங்கள் மகன் இதற்கும் எதிர்ப்புக் காட்டக் கூடும். 'இல்லை', 'வேண்டாம்' என்பதற்குப் பதில் மாற்றாக‌ வேறு ஒரு செயற்பாட்டை அல்லது வேலையை நீங்களாக‌ எடுத்துக் கொடுக்கலாம். நீங்கள் சொல்வதன் படி கேட்டு நல்ல‌ பிள்ளையாக‌ நடந்தால் அவர் விரும்பும் விளையாட்டை விளையாட‌ அனுமதிக்க‌ முடியும் எனச் சொல்லிப் பார்க்கலாம்.

கற்பித்தலுட‌ன் கூடிய‌ வீடியோ கேம் உதவக் கூடும்.

‍- இமா க்றிஸ்

Double entry akividdathu. Sry.

நன்றி இமாம்மா.
கவலைப் படாதீர்கள் நிஹாரா.
சின்ன வயது தானே. சரியாகி விடுவார். கொஞ்சம் கொஞ்சமாக அவைகளில் செலவழிக்கும் நேரத்தைக் குறையுங்கள் . தொலைக்காட்சியில் கார்டூன் சேனலை அடிக்கடி hide செய்து விடுங்கள் . அவருக்கு குட்டி குட்டி வேலை கொடுங்கள்
. Ex.தம்பியின் உடுப்பை மடித்து தாருங்கள். எனக்கு உடம்புக்கு முடியவில்லை என pl பண்ணி பாருங்கள். முயற்சி செய்வார். இப்படி குட்டி வேலை.

அதோடு பெரிய வட்டம அல்லது உங்களுக்கு இலகுவாக ஏதாவது கீறி கலர் பண்ண குடுங்கள் .

அருகில் வீடுகளில் குட்டிகளுக்கு மாலை நேரத்தில் வகுப்பு எடுக்கும் பெண்கள் இருந்தால் அனுப்பி விடுங்கள். படிக்க என்று அல்ல. அவருக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று வந்தது போல் இருக்கும்

சகோதரி இமா நீங்கள் சொன்னபடி முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி

இமா சகோதரி நீங்கள் சொன்னபடி முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி

மேலும் சில பதிவுகள்