வலிப்பு கர்ப்பமாக உள்ளேன்

எனக்கு 10 ம் வகுப்பு படிக்கும் போது வலிப்பு வரும்.நான் இப்போது 60நாள் கர்ப்பமாக உள்ளேன்.fits மாத்திரை எடுத்து வருகிறேன்.அதனால் என்baby பாதிப்பு ஏற்படுமா. அந்த நோய் babykum வருமா.அதற்கு தனியாக scan செய்து பார்க்க வேண்டுமா.

இங்கு உடனே பதில் கிடைப்பதில்லை அகிலா. கொஞ்சம் பொறுமையாகத் தான் கிடைக்கும். அதற்காக‌ இன்னொரு த்ரெட்... அதுவும் கேள்வியே இல்லாமல் ஒரு த்ரெட்... பலன் இல்லை அல்லவா! :‍) ஏற்கனவே கேள்வியை வைத்த‌ த்ரெட்டில் கேட்கலாம். நீங்கள் புதியவர், மெதுவாகப் புரிந்துகொள்வீர்கள்.
~~~~~~~~

எனக்கு உங்கள் அவசரம் புரிகிறது. ஆனால் அறுபது நாட்கள் கழித்துத் தான் யோசிக்கிறீர்களா! இதைத் திருமணம் நிச்சயமானதுமே யோசித்திருக்க‌ வேண்டாமா!

//நான் இப்போது 60 நாள் கர்ப்பமாக உள்ளேன்.// மருத்துவரைப் பார்த்தீர்களா? மாத்திரை எடுக்கும் விஷயத்தைச் சொன்னீர்களா? எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலில் அதைச் செய்யுங்கள்.

//fits மாத்திரை எடுத்து வருகிறேன்.// இப்போது நீங்கள் மருத்துவ‌ ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகமிக‌ அவசியம். உண்மையில்... உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி திருமணத்தின் முன்பே நீங்கள் பேசியிருக்க‌ வேண்டும். //fits மாத்திரை// என்பது மாத்திரையின் பெயர் அல்ல‌. இதை வைத்து பதில் சொல்ல‌ முடியாது. இந்தியாவில்... கூடலூரில் உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட‌ மாத்திரை எது என்று தெரியவில்லை. மாத்திரைகளை எவ்வளவு காலமாக‌ எடுக்கிறீர்கள்? என்ன‌ பெயர்? என்ன‌ டோசேஜ்? இடைக்கிடை செக்கிங் போவதில்லையா? :‍) இத்தனைக்கும் எனக்குப் பதில் சொல்ல‌ வேண்டாம். என்னிடமிருந்து உதவி கிடைக்காது. பதில் சொல்லும் அளவுக்கு அறிவு எனக்குப் போதாது. உங்களைச் சிந்திக்க‌ வைக்க‌ மட்டுமே என்னால் இயலும்.

//அதனால் என்baby பாதிப்பு ஏற்படுமா.// உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். உங்கள் நோயின் தீவிரம் குறைவாக‌ இருந்து மாத்திரை பிரச்சினை இல்லாததாக‌ இருக்கலாம். கர்ப்பமாக‌ இருக்கும் சமயம் மாத்திரை எடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சரியானபடி உண்பது, உறங்குவது முக்கியம். ஓய்வைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகம் யோசிக்கவும் கூடாது.

//அதற்கு தனியாக scan செய்து பார்க்க வேண்டுமா.// முதலில் உங்கள் மருத்துவரிடம் இதுவரை மாத்திரை எடுத்தது சரிதானா என்பதை கேட்டுத் தெளிவடைவது முக்கியம். இதை வருகிற‌ வாரம் செய்யலாம், அடுத்து லீவு கிடைக்கும் போது செய்யலாம், துணைக்கு வர‌ ஆள் அமையும் போது செய்யலாம் என்றெல்லாம் பின்போடக் கூடாது. இன்றே மருத்துவரைச் சந்தித்துக் கேட்டுக் கொள்ளுங்கள். மீதிக்கான‌ அறிவுரை அவரிடமிருந்து கிடைக்கும். (சிலருக்கு கர்ப்பத்தின் போது தொடர்ந்து மாத்திரைகளை எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சிலருக்கு மாத்திரைகளை மாற்றி / குறைத்து சில‌ மாதங்கள் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து, நிலமை சாதகமாக‌ இருந்தால் கர்ப்பமாவதற்கு அனுமதி கொடுப்பார்கள். உங்கள் நிலை பற்றி இங்கு யாரும் சரியாகப் பதில் கொடுக்க‌ இயலாது.)

இத்தனையையும் நான் சொல்கிறேன் என்றதும் பயந்து போகத் தேவையில்லை. :‍) ஆனால் இது சிம்பிளாக‌ எடுக்கும் விஷயம் அல்ல‌; தீவிரத்தை இப்போதாவது புரிந்துகொள்ள‌ வேண்டும் நீங்கள்.

‍- இமா க்றிஸ்

//nan conceive aaki 70 nalkal akuthu// 60 என்றீர்களே! இல்லையா!

//enaku fits problem irruku.// கர்ப்பமாக‌ இருக்கும் போதும் இருக்கிறதா?
//Tablet eduthu kondu irrukiren.// கர்ப்பமாக‌ இருக்கும் போது மாத்திரை எடுப்பதனால் கூட‌ இப்படி வரலாம் என்று தெரிகிறது. இருந்தாலும், உண்மையில், காரணம் அவரவரது நோயின் தீவிரத்தைப் பொறுத்தது. கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க‌ நிச்சயம் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கிடைக்கும். பேசுங்கள்.

//athanal en babyku problem varuma.// தாய்க்கு கர்ப்ப‌ காலத்தில் அடிக்கடி வந்தால் அதனால் குழந்தைக்கும் தாய்க்கும் கூட‌ பாதிப்பு வரலாம் இல்லையா! எங்கேயாவது இசகுபிசகாக‌ விழுந்து வைக்கக் கூடாது.

//babykum same problem varuma.// நோய் கடத்தப்படுவது இல்லை என்றே நினைக்கிறேன்.

//medicine continue panalama.// இதைப் பற்றிக் கட்டாயம் உடனடியாக‌ உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். அவர் சொன்னால் தொடரலாம். நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிடுவது அவசியம்.

//itharku ethavathu special scan edukanuma.// மாத்திரை எடுக்கணுமா நிறுத்தணுமா என்பதுதான் முதல் கேள்வி. மீதி எல்லாம் இரண்டாம் ப‌ட்சம்தான்.

//reply panuga pls// :‍) ஃபிட்ஸ் பற்றி அனுபவம் வெகு சிலருக்குத்தான் இருக்கும். அவர்கள் டாக்டர்கள் அல்ல‌ கண்ணா. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு விதமான‌ ஃபிட்ஸ் இருக்கலாம். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில்கள்... நடுநிலையானவையாக‌ இராது; உங்களுக்குப் பொருத்தமானவையாகவும் இராது. சரியான‌ உதவி உங்கள் மருத்துவரிடமிருந்து மட்டும்தான் கிடைக்கும். யோசிக்காமல் கிளம்பிப் போய்ப் பேசுங்க‌.

‍- இமா க்றிஸ்

பதிளித்தற்கு நன்றி.

yen wifekkum fits varum eppo 7 month karppamaka erukkirar yentha pirachanaiyum illai kulanthai nanraka ullathenna docter sonnar neenkal muthalil unka fits maruthuvaridam sentru neengal karppamaka ullathai sollungal avar sollum visayathai follow pannunkal melum santhekam erunthal yen numperukku call pannunkal 9384500767

மேலும் சில பதிவுகள்