ரயில் பயணம் சந்தேகம்

எனது மகன் பிறந்து 75 நாட்கள் ஆகின்றது... வர Jan 13 என் மகனுக்கு 3 மாதம் முடிகிறது..தாய் பால் தவிர 3 மாதத்திற்கு பிறகு வேற என்ன குடுக்கலாம்??ஏனென்றால் 3ஆம் மாதம் முடியும் நேரத்தில் Hyderabad trainல் செல்ல இருக்கிறோம். எப்படி சமாளிப்பது என்று கவலையாக உள்ளது..

//Hyderabad trainல் செல்ல இருக்கிறோம்.// எத்தனை மணிநேரப் பயணம்?

//3ஆம் மாதம் முடியும் நேரத்தில்// நீங்கள் வீட்டில் என்ன‌ கொடுப்பீர்களோ அவற்றில் கொண்டு போகக் கூடியதை எடுத்துப் போங்க. ஃப்ளாஸ்க்கில் கொதிநீர் எடுத்துப் போங்க‌. பார்முலா மில்க் கொடுப்பதாக‌ இருந்தால் இடையில் கலந்து கொடுக்கலாம். கொதிநீர் இடையில் ரயில் நிற்கும் சமயம் எங்காவது நிரப்பிக் கொள்ள‌ முடியாதா? செரிலாக் போல‌ குழந்தைக்கான‌ உணவுகளை எடுத்துப் போகலாம். பிஸ்கட், பேபி ரஸ்க் கொண்டு போகலாம்.

இந்த‌ இழையையும் பாருங்க‌.
ரயில் பயண உதவி - www.arusuvai.com/tamil/node/32224

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா

மேலும் சில பதிவுகள்