Migundha mana vedanai..udhavungal thozhigale

Enaku marriage agi 1 year above aagiduchi...1 time kuda pregnancy symptoms varala...regular period..ovulation egg growth normal.treatment started..test edhuthu pathom
..my husband ku mobility, count light ta kamiya irukunu solirkanga. Enaku right side only blocknu solirkanga...left side fine..one side block na conceive aagamudiyada??..next month iui pani pakalam nu solirkanga..iui major side effect kudukuma...??

இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் லட்சுமி கவி.. ஒரு 8மாதங்கள் கஷ்டம் பட வேண்டி இருக்கும் ..
பெண் குழந்தை முதலில் அப்பா என்று தான் சொல்லும்..
அப்பா மீது அளவு கடந்த பிரியமாக இருக்கும்..
கண்டிப்பாக எல்லாம் மாறும். நீங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து விட்டீர்களா?
இனி பயனத்தை குறைத்து கொள்ளுங்கள்..
பாதுகாப்பு இல்லா இடத்திற்கு செல்வதை தவிர்த்திடுங்கள்..
உங்கள் கணவர் மாறி விடுவார் பொறுமையாக இருங்கள்

Evanuku baby piranthatunu ketathe en husband tan sis a than en manasu ethukave mattenrathu sis ivvalavu kevalam anathuku piraku valanuma sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

//Amma ivvalavu NAL enakaka yarum support pannalainalum husband support irukumnu manathu thairiyama irunthatu// இந்த‌ ஒரு இன்சிடண்ட் எல்லாவற்றையும் மாற்றி நினைக்க‌ வைக்குது இல்ல‌! நீங்கள் இந்த‌ விஷயத்தில் வாயைத் திறக்காமலிருந்திருந்தால் கூட‌ இந்தப் பேச்சு வந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சில‌ சமயங்களில் மனிதர் கோபத்தில் என்ன‌ சொல்கிறோம் என்பது தெரியாமல் கொட்டிவிடுவது உண்டு. இந்த‌ வார்த்தை உங்களை எந்த‌ அளவு காயப்படுத்தியிருக்கும் என்பது புரிகிறது கண்ணா. ஆனால் இந்த‌ ஒரு சந்தர்ப்பத்தை வைத்து சடாரென்று எந்த‌ முடிவுக்கும் வர‌ வேண்டாமே! //ippa antha support um illa na// இந்த‌ நிகழ்வைச் சில‌ நாட்கள் கழ்த்துச் சிந்தித்துப் பார்க்கும் போது உங்கள் கணவருக்குத் தப்பு என்று புரியும். அப்போது உங்கள் நிலமை இப்போதிருப்பதை விட‌ மேலானதாக‌ மாறவும் முடியும். மனிதர் கெட்டவ‌ர்களாக‌ மட்டும் தான் மாறுவார்கள் என்பது இல்லை. திடீரென்று ஞானோதயம் பிறந்து நல்லவர்களாக‌ மாறுவதும் உண்டு. நம்பிக்கையோடிருங்கள். கோபிகாவுக்காக‌ நீங்கள் தைரியமாக‌ இருக்க‌ வேண்டாமா?

//Evanuku baby piranthatunu ketathe en husband tan// வாய்தான் கேட்டிருக்கும். மனதிற்குத் தெரிந்திருக்கும் அல்லவா? (நான் அவர்கள் செய்தது சரியென்று சொல்ல‌ வரவில்லை. நிச்சயம் தவறுதான். முள்ளை முள்ளால்தான் எடுக்க‌ முடியும்.) //ine enaku life venam// புரியுது. ரொம்ப‌ மனக்கஷ்டம் இல்லையா! //ithula irunthu Mela vara enaku help pannunga amma// என்ன‌ ஹெல்ப் வேணும்? அவர்களுக்கு இன்னும் ஒரேயொரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்க‌ முடியாதா? கொஞ்...சம் விட்டுப் பார்க்கலாமே!

அதே சமயம் உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். வருத்திக் கொள்ளாதீர்கள். முடிந்த‌ வரை ஒழுங்காக‌ சாப்பிடுங்க‌. நீங்க‌ திரும்ப‌ உங்க‌ வீட்டுக்குப் போகும் வரை அவங்க‌ உங்களை எப்படி நடத்துறாங்க‌ என்பதைப் பற்றிக் கவனிக்காதது போல‌ இருங்க‌. பிறகு உங்கள் இருவருக்கிடையேயும் எல்லாம் சரியாகப் போகும். அடுத்த‌ தடவை மாமியார் வீட்டுக்கு வரும் போது மிகவும் எச்சரிக்கையாகப் பேசுங்க‌.

‍- இமா க்றிஸ்

Sis gents kobathila enna pesurathunne theriyama andha situation la amma vayum ethirka mudiyama irukkum podhu motha kobathayum namma mela. Than sis kattuvanga amma mela. Kamicha pondatti thasan nu solluvanga, nama epdiyum avangala purinchippom nu pesidranga sis, ithu ku ore solution neenga amaithiya irunga unga amaithiye avangala thappu pannitttom nu feel panna veikkum sis, pappaku appa anbu romba mukkiyam sis, enna than amma gavanichalum appa eakam manasula vandhudum sis, nan anubavichu irukken sis, neenga porymaya irunga sis ungala nambi oru jeevan irukku marandhudathinga

இமா அவர்கள் தெளிவாக ஆறுதல் கூறி உள்ளார். உங்கள் வீட்டில் இருக்கும் போதுஉங்கள் கணவர் குழந்தையை எப்படி எல்லாம் கொஞ்சி இருப்பார். அதையெல்லாம் நினைத்து பாருங்கள்.
இனி பணம் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்.
இது எல்லோர் வீட்டிலேயும் நடப்பது தான். என் கணவரும் பாதி சம்பளத்திற்கு மேல் அம்மாவிடம் கொடுத்து விடுகிறார். மாத கடைசியில் என் கண் முன்னே கடன் வாங்கி வருகிறார் ..
ஆனால் என் மாமியார் நினைத்ததை வாங்கி ஜாலியாக செலவு செய்கிறார்கள்.. இதனால் என்னையும் வேலைக்கு போக சொல்கிறார்கள். நான் வேலைக்கு சென்றால் என் கணவர் உழைப்பு அனைத்தும் அவர்களுக்கே சேர்ந்து விடும். சும்மா அரசு தேர்வுகள் எழுதி கொண்டு இருக்கிறேன்.
ஆனால் என் கணவரிடம் உங்கள் அம்மாவிற்கு இவ்வளவு பணம் ஏன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டது இல்லை. ஏனென்றால் திருமணம் முடிந்த அன்றே என்னிடம் தெளிவாக சொல்லி விட்டார் என் அம்மாவுக்கோ அக்கா தங்கைக்கோ நான் எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்வேன். நீ கேள்வி கேட்க கூடாது என்று சொல்லி விட்டார்.
உனக்கு என்ன தேவையோ கேட்டு வாங்கி கொள் என்றும் கூறினார்.
அவர் கடன் வாங்கும் போதுரொம்ப வேதனையாக இருக்கும்.. யாரிடமும் புலம்ப முடியாது..
என் கணவர் வேலை சாதாரண வேலையும் இல்லை..வேலை செய்துதிரும்பி வரும் போது கையில் கீரல்,வெட்டுக்கள் எல்லாம் இருக்கும்.
எங்களுக்கு என்று மாதம் ஒரு ரூபாய் கூட சேமிப்பு கிடையாது.
என் மகள் பேரிலும் ஒரு ரூபாய் கூட சேமிப்பு கிடையாது..
எங்களை சேமிக்க விடவும் மாட்டார்கள்.. அது நன்கு தெரியும் எனக்கு.
உங்களுக்கு இந்த கதையை கூறியதற்கு காரணம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோர் வீட்டிலேயும் இப்படி தான் நடக்கிறது..
காலம் பதில் சொல்லும்.எத்தனை நாட்கள் அதிகாரம் நிலைக்க போகிறது..
பொறுத்தார் பூமி ஆழ்வார்..

Nenga enakaka time koduthu arutal sonnathuku romba nanri ippa tan en husband kita en manasu vitu pesunen enakaka unga ammakitayum unga ammakaka en kitayum support panni rendu pakkamum game adatenga mamiyar marumagal ippa fite pannunalum konjam timela sernthuruvom please enna vala vidunganu pesirukuren amma nenga sonnathu mathri intha time na porumaiya irukurenga thank you so much indhusha sister imma amma

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்