குழந்தை இருதய கோளாறு

வணக்கம் நான் இந்த மன்றத்திற்கு புதுசு .எனக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது . எங்களுக்கு முதல் குழந்தை 22.11.2017 அன்று அழகான பெண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது . குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருந்து 01.01.2018 அன்று இறந்தது . நான் கர்ப்பமாக இருக்கும் பொது எந்த ஸ்கேன்லயும் இந்த பிரச்சனையை சொல்லல எதனால் இந்த குறைபாடு ஏற்பட்டது . நான் இன்னொரு குழந்தைக்கு எப்ப தயார் ஆகுவது சொல்லுங்கள் நண்பர்களே !

ஹாய் முத்து. எதுவும் நன்மைக்கே. கவலைப்படாதீர்கள்.

முதலில் நீங்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டும். குறைந்தது ஆறு மாத கால அவகாசம் தேவை. அதுவும் பொதுவான கருத்து தான்.

நீங்கள், உங்களை முதலில் பார்த்த வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள். அவர் வழிகாட்டுவார்.

ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அழகான, அறிவான, ஆரோக்கியமான குழந்தையாக உங்கள் மகள் மீண்டும் உங்களிடம் வருவாள். கடவுள் துணை.

எல்லாப் பிரச்சினைகளும் ஸ்கான்களில் தெரிந்துவிடுவது இல்லை. உடலில் பிரச்சினைகள் வருவதற்குக் காரணங்கள் தேவையில்லை. சிலசமயங்களில் இப்படி ஆவது உண்டுதான். ரேணுகா உங்களுக்கு ஏற்கனவே அழகாகப் பதில் சொல்லிவிட்டார். இது நல்லதற்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த‌ கர்ப்பத்தின் போது, ஆரம்பத்திலிருந்தே மருத்துவ‌ ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. நீங்கள் மனதளவில் தயாராக‌ இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. கடந்து போனது முழு அளவிலான‌ பிரசவம் என்பதால் உடல் பழைய‌ நிலைக்குத் திரும்ப‌, கால‌ அவகாசம் தேவையாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதே மருத்துவரிடம் எத்தனை மாத‌ இடைவெளியில் கருத்தரிக்கலாம் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் அதே பிரச்சினை வருமோ என்கிற‌ பயம் வேண்டாம். கருத்தரித்த‌ பின், மருத்துவர்கள் உங்களைச் சரியானபடி வழிநடத்துவார்கள். என் பிரார்த்தனைகளும் உங்களோடு இருக்கும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

ok thankyou

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

கவலப்படாதிங்க muthu. enakum first babyku heart pblm and died with in 17 days.. parkatha treat ment illa. conceive time scanla baby heart pathi scanla ethumae theriala. enaku ciserian.

after 6 month kalichu conceive agalamnu en doctor sonnanga.என் குழந்தை இறந்து ரொம்ப கவலை கண்ணிர் 8 மாதம் கழித்து மீண்டும் கருவுற்றேன்.40நாள் இதயதுடிப்பு,3ம் மாத scan ellam parthom .5வது மாதம் தான் குழந்தையின் அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி அடையும் என்பதால் 5 வது மாத scan nan MEDISCAN பார்த்தேன் . அங்கு குழந்தையின் ஒவ்வொரு உறுப்பின் வளர்ச்சியையும் நமக்கு காட்டுவாங்க..5000 ஆகும் 1 1/2 மணி நேரம் ஆகும்.

உங்களுக்கு சுகப்பிரசவம் தான. நீங்க conceive aga try pannunga. oru pblmum varathu. enaku baby second baby nalla padia piranthathu. என் முதல் பெண் குழந்தை மாதிரியே இரண்டாவதும் பெண். இப்போ அவளுக்கு 9 மாதமாகிறது

சித்ராசெந்தில் தாங்கள் கூறியது எனது அம்மா கூறியது போல் உள்ளது.மிக்க நன்றி.MEDISCAN எங்குபாக்கலாம் . பதில் கூறுங்கள் தோழி

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

சித்ராசெந்தில் தாங்கள் கூறியது எனது அம்மா கூறியது போல் உள்ளது.மிக்க நன்றி. MEDISCAN எங்குபாக்கலாம் . பதில் கூறுங்கள் தோழி

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

neenga entha area

chennai mylapore. appoinment vangitu poganum pa. unga nearest areala mediscan branch iruntha best.

மேலும் சில பதிவுகள்