வீசிங்

தோழிகளுக்கு வணக்கம் எனக்கு திருமணமாகி 15மாத குழந்தை இருக்கிறாள்.எனக்கு 5மாதமாக வீசிங் பிரச்சனை இருக்கிறது. என் அம்மா வீட்டில் இருக்கும்போது வருவதில்லை. நாங்க சிட்டி சைடு இருக்ரோ வீடு சின்ன வீடு கொஞ்சம் காற்றோட்டம் குறைவா இருக்ரமாதிரி நெரிசலான பகுதி அங்க போனது வீசிங் வந்துடுது இது எதனலனு தெரியல அம்மா வீடு கிராமம் நல்ல காற்றோட்டமா இருக்கு ஒரு வேளை வீடு ப்ராப்ளமா இல்லை டைல்ஸ் சேராம இருக்குமா நா கூலிங் எடுத்துக்ரதில்லெ ரொம்ப கவனமாதா இருக்கெ பதில் தெரிந்த சொல்லுங்க ப்ளீஸ்...,

Wheezing allergy nalayum varum, air illana varum romba chillness irundhalum varum, edhavathu food, smell, dust Intha mathiri allergies Wheezing varum bothu nalla fresh air breath pannunga sweat agama pathukonga

//என் அம்மா வீட்டில் இருக்கும்போது வருவதில்லை.// அப்படியானால் பிரச்சினை உங்கள் வீடுதான். காற்றோட்டமான‌ வீடு பார்த்து மாறிப் போக‌ முடியாதா? சிரமம்தான். உங்கள் குழந்தைக்காக‌ யோசித்துப் பாருங்கள்.

//நெரிசலான பகுதி அங்க போனது வீசிங் வந்துடுது// & //இது எதனலனு தெரியல அம்மா வீடு கிராமம் நல்ல காற்றோட்டமா இருக்கு// :‍) உங்களுக்குத் தெரியுது நல்லா வீடுதான் பிரச்சினை என்கிறது.

//டைல்ஸ் சேராம இருக்குமா// சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். அதுவும் வீடு சேராத‌ காரணம் தானே! இல்லைங்க‌. இலங்கை இந்தியாவைப் பொறுத்த வரை டைல் குளிர்ச்சி நல்லதாகவே இருக்கும். இது பிரச்சினை இல்லை.

அயலில் யாராவது புகைபிடிப்பார்களா? அதிக‌ சமையல் வாடை, ஏர் ப்ரெஷனர், நுளம்புச் சுருள் / மாட் வாசனைகள் காற்றிலிருப்பதே வீஸிங் வரப் போதும். சுற்றாடலில் குட்டி கோவில்கள் இருக்கின்றனவா? ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை, குப்பை எரிப்பது எல்லாம் குழந்தைக்குச் சிரமம் கொடுக்கும். வீட்டில் ஏர் ஃப்ரெஷ்னர் பயன்படுத்தினால் அதை விட்டுப் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

ராஜீ மிக்க நன்றி இமா அம்மா வீடு பார்த்துட்டு இருக்கோ டைல்ஸ் ப்ரச்சனையா இருந்தா வேறு வீட்டிற்க்கு போனாலும் இது தொடரும் அதனாலதமா. வீசிங் எனக்கு தான் இமா அம்மா

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

//வீசிங் எனக்கு தான்// ;) நேரம் குறைவாக‌ இருக்கும் சமயம் இப்படித்தான் அரைகுறையாகப் படித்து வைக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

வெப்பமான‌ பிரதேசங்களிலுள்ள‌ வீடுகளுக்கு டைல்ஸ் நிச்சயம் பிரச்சினையாக‌ இராது. எரிக்கும் சூரியனைத் தாண்டி டைல் எங்கே வீட்டைக் குளிர‌ வைக்கப் போகிறது!

வீட்டுக்கூரை / சீலிங் ஆஸ்பெஸ்டாஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்