ஆலோசனை தேவை தோழிகளே

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,
நான் அறுசுவையின் 4 ஆண்டு கால‌ வாசகி,இன்று முதல்
உறுப்பினர்.என் மனதை உறுத்தும் என் பள்ளித்தோழியின் பிரச்சனைக்கு உங்கள் ஆலோசனை கேட்டு வந்துள்ளேன்.சமீபத்தில் என் பள்ளி கால‌ தோழியை 8 வருடங்களுக்கு பிறகு இந்தியா விசிட்டின் போது சந்தித்தேன்,அவள் திருமண‌ வாழ்க்கை பற்றி கேட்டதும் அதிர்ந்தேன்.அவளது திருமணம் arranged marriage.அவளது கணவர் உயர்ந்த‌ நிறுவனத்தில் நல்ல‌ வேலையில் உள்ளார்,இருவருடைய‌ கல்விதகுதியும் ஒன்றுதான்,அவள் வேலைக்கு செல்ல‌ வில்லை.அதிகமான‌ நகையும் பணமும் வரதட்சினையாக‌ பெற்றே திருமணம் செய்தார்கள், எனினும் ஆரம்பத்திலிருந்தே அவர் எதெற்கெடுத்தாலும் சண்டை,கோபம் என்றே இருந்துள்ளார்.எல்லா செய்முரையிலும் குறை கூறி சண்டை போட்டுக்கொண்டே இருந்துள்ளார்.முதலாம் வருடம் ஒரு மகன் பிறந்தான், அப்படியும் அவர் மாறவில்லை,என் தோழியின் பெற்றோர் அடுத்தடுத்து மறைய‌ அவள் ஏச்சயும்,பேச்சயும் பொறுத்துக்கொண்டு மக‌ன் முகம் பார்த்து வாழ‌
பழகிக்கொண்டாள்.அவருடைய‌ நண்பர்கள் என்று அவர் வீட்டிற்கு அழைத்து வரும் நபர் அவரைவிட‌ குறைந்தது 10 வருடங்களாவது இளயவறாக‌ இருப்பராம்.முதலில் இது இவளுக்கு வித்தியாசமாக‌ தெரியவில்லை,ஆனால் சிறிது நாட்களிலேயே அவனெல்லாம் ஒரு மனுஷனா,நன்றி கெட்டவன் என்று வீட்டில் திட்டி தீர்ப்பாராம்.இதே போல் 2 ஆண்டுகளில் 4 நண்பர்கள்.ஒரு நாள் இது ஏனென்று அவள் யோசித்துப்பார்த்த‌ போது சில‌ உண்மைகள் புலப்பட்டது,5 வருடங்களாக‌ ஒரே அறையில் உறங்கியும் அவர்களுக்குள் தாம்பத்தியம் இல்லை,அவரது வெடு வெடு குணத்தால் அவள் அருகில் செல்ல‌ கூட‌ அஞ்சுவாளாம்,ஆனால் அடிக்கடி நண்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பதும்,பழைய‌ நண்பர்களை அடியோடு வெருப்பதும்,புது நண்பனோடு வெளியில் சென்று வருவதும்,அவனிடம் phone-ல் பேசிகொண்டே எப்போதும் உற்சாகமாக‌ இருப்பதும் ,திடீரென்று நன்றி கெட்டவன் என்று திட்டுவதும்,பிறகு சோகமாக‌ சிறிது நாள் இருந்துவிட்டு அடுத்த‌ நண்பனை பிடிப்பதும் என‌ வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கையில்,சிறிது நாட்களாக‌ இரவில் அவளது 8 வயது மகன் தூக்கத்தில் அலறுவதும் காலையில் urine pass செய்யும்போது "அம்மா peepee எரியுது" என்று சொல்வதும் அடிக்கடி நடந்துள்ளது.இரவில் இருவருக்கும் நடுவில் அவன் படுப்பானாம்.அவளுக்கு உலகமே அவள் குழந்தைதான்.என் குழந்தையின் வாழ்வைக் காப்பாற்ற‌ நான் என்ன‌ செய்ய‌ என்று என்னிடம் கேட்டு அழுதுவிட்டாள்.ஏதவது நல்ல‌ முடிவு எடுக்கலாம் தைரியமாக‌ இரு என்றுவிட்டு வந்தேன்.தோழிகளே அவளுக்கு உங்களால் முடிந்த‌ நல்ல‌ ஆலோசனைகளைகூறுங்களேன்,நம் வார்த்தைகள் என் தோழிக்கும்,அவன் அறிவான‌ மகனுக்கும் ஒரு நல்ல‌ வழிகாட்டுதலாக‌ அமையட்டும்.

உங்கள் தோழியை நினைக்கப் பரிதாபமாக‌ இருக்கிறது.

முக்கியமான‌ விடயங்களை இன்னதென்று சொல்லாமல் படிப்பவர்கள் ஊகத்திற்கு விட்டிருக்கிறீர்கள்.

//வீட்டிற்கு அழைத்து வரும் நபர் அவரைவிட‌ குறைந்தது 10 வருடங்களாவது இளயவறாக‌ இருப்பராம்.// வீட்டில் தவறாக‌ நடந்துகொண்டார்கள் என்று சொல்லவில்லை. //சிறிது நாட்களிலேயே அவனெல்லாம் ஒரு மனுஷனா,நன்றி கெட்டவன் என்று வீட்டில் திட்டி தீர்ப்பாராம்.இதே போல் 2 ஆண்டுகளில் 4 நண்பர்கள்.// ஒவ்வொரு மனிதர் ஒவ்வொரு விதம். சிலர் நண்பர்களோடுதான் சண்டை போடுவதே. இதில் தவறு எதையும் என்னால் காண‌ முடியவில்லை. வேலையிடத்தில் எல்லோரும் இளையவர்களாக‌ இருந்தால் வயதொத்த‌ நட்புகளுக்காக‌ இன்னொரு வேலையிடத்தைத் தேடிப் போக‌ முடியாது அல்லவா?

//இது ஏனென்று அவள் யோசித்துப்பார்த்த‌ போது சில‌ உண்மைகள் புலப்பட்டது,// என்ன‌ உண்மை என்று ஒப்பனாகச் சொல்லுங்கள். பதிலை அதற்கேற்ப‌ யோசிக்கலாம். ஓரினச் சேர்க்கையிலீடுபாடு கொண்டவர் என்கிறீர்களா? அப்படி இருந்தால், அப்படிப் பிறந்தது அவரது தவறு அல்லவே! பாவம் அந்த‌ மனிதர். (ஆனால் அதற்காக‌ குழந்தையை உபயோகித்துக் கொள்வது பெரும் தவறு & குற்றம்.)

//5 வருடங்களாக‌ ஒரே அறையில் உறங்கியும் அவர்களுக்குள் தாம்பத்தியம் இல்லை,// பேசி நடத்திய‌ திருமணம்! பெரியவர்களின் தவறு என்றும் சொல்ல‌ இயலாது. அவர்கள் கடமை என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த‌ மனிதரால் வெளிப்படையாகப் பெற்றோரிடம் தன் நிலையை எடுத்துச் சொல்ல‌ இயலாதிருந்திருக்கலாம். அல்லது சொல்லியும் பெரியவர்கள் கேட்காமல் வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்திருக்கலாம். இப்போது அதனால் மூன்று பேருக்குப் பாதிப்பு!

குழந்தைக்கு எட்டு வயது என்கிறீர்கள். ஒரு குழந்தையைப் படுக்கையில் வைத்துக் கொண்டு எந்தத் தாய் கணவனோடு தாம்பத்தியம் வைத்துக் கொள்ள‌ முடியும்! எப்படி எதிர்பார்க்கலாம்! எல்லாம் சரியாக‌ இருக்கும் குடும்பம் என்றால் கூட‌, குழந்தைக்குத் தனிப் படுக்கையறை வேண்டும். அல்லாவிடில் அதற்கு வாழ்க்கையைப் பற்றிய‌ தவறான‌ புரிதல் தான் இருக்கும். ஒரே படுக்கையில் தான் மூவரும் உறங்குவதாக‌ இருந்தாலும் கூட‌, பெரியவர்கள் இருவருக்கும் என்று தனிப் படுக்கையறை ஒன்று இருக்க‌ வேண்டும்.

உங்கள் தோழி சந்தேகிப்பது உண்மையா அல்லவா என்பதை முதலில் அவர் உறுதிப்படுத்திக் கொள்ள‌ வேண்டும். குழந்தையை நடுவில் உறங்க‌ வைக்காமல் தாயின் மறு பக்கம் உறங்க‌ வைக்கச் சொல்லுங்கள். குழந்தைக்குத் தனி அறை கொடுப்பது நல்லது என்றாலும் உண்மையில் குழந்தை தவறாக‌ நடத்தப்படுமாக‌ இருந்தால் தனி அறை நிலமையை இன்னும் மோசமாக்கி வைக்கும்.

பாடசாலைகளில் குழந்தைக்கு, 'குட் டச் பாட் டச்' பற்றிச் சொல்லிக்கொ டுப்பதன் அவசியம் இது தான். தாயானாலும் தந்தையானாலும் தவறாகத் தொட்டால் குழந்தைக்குப் புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும். என்ன‌ நடவடிக்கை எடுக்கலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க‌ வேண்டும். குழந்தையால் தனியாக‌ பிரச்சினைக்கு முடிவு காண‌ முடியாது. உங்கள் தோழி குழந்தையோடு தனியாக‌ இருக்கும் சமயம் மெதுவே பேச்சுக் கொடுக்கச் சொல்லுங்கள். என்ன‌ ஆயிற்று என்று கேட்பது பிழையாகிவிடும். இன்னின்ன விதமான‌ தொடுகைகள் யாரிடமிருந்து கிடைத்தாலும் அது தவறான‌ தொடுதல்;
மறைக்காமல் அம்மாவுக்குச் சொல்ல‌ வேண்டும்,' என்று சொல்லி வைக்கலாம். குழந்தை தாயிடம் மனம் விட்டுப் பேசக் கூடியதாக‌ இருப்பது தாய் எப்படி நடக்கிறார் என்பதைப் பொறுத்தது. இடைக்கிடையே குழந்தையிடம் விசாரித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

அடுத்த‌ தடவை குழந்தைக்கு எரிச்சல் வரும் போது மருத்துவரிடம் கூட்டிப் போகலாம். யூரின் இன்ஃபெக்க்ஷன் மட்டும் தான் காரணம் என்றால் ஓரளவு தெரிந்துகொள்ளலாம். அல்லாவிட்டாலும் மருத்துவர் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார். உங்கள் தோழியால் மருத்துவரிடம் உண்மையைச் சொல்ல‌ இயலாவிட்டாலும் அவருக்கு மட்டுமாவது பிரச்சினை இன்னதுதான் என்பது நிச்சயம் தெரிய‌ வரும்.

எதிர்க்கும் தைரியம் குழந்தைக்கு வேண்டும். தாய் பேசிப் பேசித்தான் குழந்தையைத் தயார் செய்ய‌ வேண்டும். அவருக்கும் எதிர்க்கும் தைரியம் வேண்டும். தைரியமாக‌ குழந்தையின் படுக்கும் இடத்தை மாற்றச் சொல்லுங்கள். கொஞ்சம் இரவு வேளையில் உறங்குவது போல் விழித்திருந்து அவதானிக்கச் சொல்லுங்கள். (இது அவரால் முடியாது என்று தோன்றுகிறது. முடிந்திருந்தால் இதற்குள் சந்தேகமில்லாமல் இரண்டில் ஒன்று கண்டுபிடித்திருப்பார்.) பிரச்சினை இருப்பது உண்மையென்றால் தடுக்க‌ விரைவில் ஏதாவது செய்தாக‌ வேண்டும். இப்படியே தொடர்ந்தால் குழந்தையின் மனநிலை பாதிப்படையக் கூடும்.

உங்கள் தோழியை முதலில் ஏதாவது காரணம் சொல்லி ஒரு வேலை தேடிக்கொள்ளச் சொல்லுங்கள். அல்லாவிட்டால் வருமானம் இல்லாத‌ ஒரு கரணத்திற்காகவே எதுவும் செய்ய‌ இயலாத‌ நிலையில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள‌ வேண்டியதாகிவிடும். குழந்தை பாவம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்