காப்பர் குடம்

காப்பர் குடத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் என்று கேள்விபட்டேன்.2 வயது குழந்தைக்கு காப்பர் குடம் தண்ணீரை நேரடியாக கொடுக்கலாமா?? அல்லது தண்ணீரை நன்கு காய்ச்சி காப்பர் குடத்தில் ஊற்றி கொடுக்கலாமா?? காப்பர் குடத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் நான்கு மணி நேரத்தில் நீரில் உள்ள வைரஸ் பாக்டீரியா போன்றவை அழிந்து விடும் என்று புத்தகத்தில் படித்தேன். இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.

//மிகவும் ஆரோக்கியம்// 'ஆரோக்கியம்' என்பது ஏதோ ஒரு இரசாயனப் பொருள் உட்கொள்ளப்படுவதால் மட்டும் வந்துவிடாது. உடலுக்குத் தேவையான‌ அனைத்தும் அதனதன் அளவில் உட்கொள்ளப்பட்ட‌ வேண்டும்; நாமும் உற்சாகமானவர்களாக‌ இருக்க‌ வேண்டும். இன்னும் சில‌ விடயங்களையும் கவனத்தில் கொண்டால்தால் முழுமையாக‌ 'ஆரோக்கியமாக‌' வாழலாம்.

//2 வயது குழந்தைக்கு காப்பர் குடம் தண்ணீரை நேரடியாக கொடுக்கலாமா?? அல்லது தண்ணீரை நன்கு காய்ச்சி காப்பர் குடத்தில் ஊற்றி கொடுக்கலாமா??//
எதைச் செய்வதானாலும் முதலில் உங்களில் பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை எத்தனை நாட்கள் செப்புப் பாத்திரத்தில் சேமித்த‌ நீரை அருந்திப் பார்த்திருக்கிறீர்கள்?

நன்மைகள் இருப்பது போல‌ எல்லாவற்றிலும் தீமைகளும் இருக்கத்தான் செய்யும். தொடர்ந்து இந்த‌ நீரை மட்டும் குடித்து வந்தால் உடம்புக்கு ஆகாது என்று இன்னும் பத்து வருடங்கள் கழித்து இன்னொரு புத்தகம் சொல்லும். அப்போது உள்ளுக்குள், 'தப்புப் பண்ணி விட்டோமோ!' என்று பயமாக‌ இருக்கும். எதுவானாலும் அளவோடு இருக்கட்டும்.

நீரைப் பத்து நிமிடங்கள் கொதிநிலையில் வைத்திருந்து ஆற‌ விட்டுக் கொடுத்தாலே போதும். சேமிக்கும் கொள்கலனும் பருகப் பயன்படுத்தும் கிண்ணமும் சுத்தமாக‌ இருக்க‌ வேண்டும்.
~~~~~~~~~~~~

முன்பு மேலைத்தேய‌ அரசவம்சத்தவர்களை Blue Blood என்பார்களாம். அவர்கள் பயன்படுத்திய‌ தட்டுகள், கிண்ணங்கள், கத்திகள், கரண்டிகள் அனேகமானவை வெள்ளியினால் ஆனவையாக‌ இருந்து, உணவுகள் பானங்களின் வழியே உடலில் கலந்த‌ வெள்ளியின் தாக்கத்தினால் இரத்தம் சற்று நீலமாகத் தெரியுமாம். அவர்களது வெளுத்த‌ தோலின் ஊடே குருதிக்குழாய்கள் நீலமாகத் தெரிந்ததால் இப்படிச் சொல்வார்களாம்.

செம்பும் வெள்ளி போல‌ ஒரு உலோகம் என்பதால் இந்த‌ விடயத்தை இங்கு குறிப்பிடத் தோன்றியது.

‍- இமா க்றிஸ்

வெள்ளியை போல செம்பு ஒரு உலோகம்/ இது அறிந்த ஒன்று தான் இருப்பினும் தற்போது செம்பு பானை தண்ணீர் பற்றி கருத்து பெறவே இந்த பதிவை பதிவிட்டேன் அம்மா. உங்கள் பார்வையின் கருத்துக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்