எங்கள் வீட்டில் குடியிருக்கும் பெண்ணுக்கு 30 வயது. இரு பிள்ளைகள். இளையவன் பிறந்து ஆறு வருடங்களாகிறது. கருத்தடை சிகிசிசையும் செய்தாயிற்று. போன மாதம் மாதவிடாய் வரவில்லை. மருத்துவரிடம் காண்பித்து மருந்து வாங்கி 10 நாட்கள் கழித்து வரசொல்லியிருக்காங்க. இன்று மார்பில் பால் வருகிறது என்று மிகவும் பயத்துடன் கூறினாள். ஏதேனும் பிரச்னையா இருக்குமா? மருந்து முடியுமுன் காட்டணுமா?
ஆனந்த ஜோதிக்காக
அன்புடன்
ஜெயா
@ ஜெயா
//கருத்தடை சிகிசிசையும் செய்தாயிற்று.// அபூர்வமாக சிலருக்கு கருத்தடை சிகிச்சையைத் தாண்டியும் கர்ப்பம் ஆகலாம். இப்போதே லாக்டேட்டிங் இருந்தால் அவர்கள் கணக்குத் தவறி இருக்கலாம். அவரை ஒரு தடவை ஹோம் ப்ரெக்னன்சி டெஸ்ட் எடுத்துப் பார்க்கச் சொல்லுங்க.
//ஏதேனும் பிரச்னையா இருக்குமா?// ஹோர்மோன் பிரச்சினையாக இருக்கலாம். மார்பில் இன்ஃபெக்ஷன் இருப்பதாகவும் இருக்கலாம். மருத்துவர்கள் அளவு எம்மால் இன்னதாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது. //மருந்து முடியுமுன் காட்டணுமா?// காட்டுவது நல்லது என்றுதான் தோன்றுகிறது. முன்பு மருத்துவரிடம் போன சமயம் இருந்திராத விடயம் இது. அதனால் அவரது சிகிச்சை இப்போது மாறச் சாத்தியம் இருக்கிறது. எதையும் நாட்பட வைத்திருந்து குணப்படுத்துவதை விட ஆரம்பத்தில் காட்டுவது நல்லது. குணமாக குறைவான காலம் எடுக்கும். பார்க்கும் மருத்துவரிடம் கர்ப்பம் என்று சந்தேகிப்பதைச் சொல்லச் சொல்லுங்கள்.
- இமா க்றிஸ்
நன்றி இமா
கிட்டத்தட்ட இந்த பதில் தான் கூறினேன். இருந்தாலும் வேறு பதில்கள் கிடைத்தாலும் அவங்களுக்கு தெளிவுகிடைக்குமென்று கேட்டேன். கிடைத்துவிட்டது. நன்றி! நன்றி!!
Hijaya vincent unga frd ku
Hijaya vincent unga frd ku prolactin test pana solunga yena prolactin hormone adikama irundha kuda pal suralum
Santhapriya